(Source: ECI/ABP News/ABP Majha)
ABP NADU செய்தி எதிரொலி: ஒரு வருடமாக போடப்படாத கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் மீண்டும் தொடங்கியது
ஏபிபி நாடு செய்தி எதிரொலியாக மீண்டும் தமிழகம் முழுவதும் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை வடகிழக்கு பருவமழை காரணமாக அதிக அளவும் மழை பெய்வதும், அவ்வாறு சில ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாக மழை பெய்யும் போது வெள்ளம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் பாதிப்படைவது வழக்கம். இந்த பாதிப்பு மனிதர்களுக்கு மட்டும் இல்லாமல் கால்நடைகளுக்கும் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக மாடுகளுக்கு மழையால் கோமாரி உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது. மாடுகளுக்கு மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் கோமாரி நோய் தடுப்பூசி, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாநில அரசின் கால்நடைத்துறை மூலம் செலுத்துவது வழக்கம். மாடுகளின் கால் குழம்பு, வாய், மூக்கு பகுதியில், புண்கள் ஏற்படுத்தும் கிருமிகளை கொள்வதற்கும், மாடுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இந்த தடுப்பூசி மாடுகளுக்கு செலுத்தப்படுகிறது.
தமிழகத்தில், கடந்த, ஒரு ஆண்டுகளுக்கு மேலாக மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்துவதை கால்நடைத்துறை நிறுத்தி வைத்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் பருவ மழை துவங்கி விட்ட நிலையில், நீர் நிலைகள் நிரம்பி வருவதோடு, மேய்ச்சல் நிலங்களில் புற்கள் முளைத்து தண்ணீர் தேங்கி உள்ளது. இதில் மேயும் மாடுகள் கோமாரி நோயின் பிடியில் சிக்கி உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
ஒரு வருடமாக போடப்படாத கோமாரி நோய் தடுப்பூசிகள் - மீண்டும் தொடங்க கால்நடை வளர்ப்போர் கோரிக்கை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்