மேலும் அறிய
Advertisement
Chengalpattu court judgement: ஆட்டோவில் கடத்தி இளம் பெண்ணுக்கு பாலியல் வன்புணர்வு - குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை
chengalpattu court judgement: இளம் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை.
பாலியல் வன்புணர்வு
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த சேலையூர் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியைச் 22 வயது பெண் , கடந்த 2009 ஆம் ஆண்டு மாடம்பாக்கம் குருஜி மடத்திற்கு செல்லும் போது ஆட்டோவில் வந்த இரண்டு பேர் இளம் பெண்ணை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அழுது கொண்டே வீட்டிற்கு வந்த இளம் பெண்ணை தனது தாய் விசாரித்த போது நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சேலையூர் போலீசார் வழக்கு பதிவு
இளம் பெண்ணின் தாய் சந்திரா கொடுத்த புகாரின் பேரில் சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது திருவஞ்சேரி திடீர் நகரை சார்ந்த சேகர் (38) மற்றும் சிட்லப்பாக்கம் கருணாநிதி நகரை சார்ந்த குட்டி ஆகியோரை கைது செய்து இளம் பெண்ணை கடத்தி சென்று, பாலியல் வன்புணர்வு செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து சேலையூர் காவல்துறையினர் சேகர் மற்றும் கருணாநிதி மீது பாலியல் வன்புணர்வு மற்றும் ஆள் கடத்தல் ஆகிய பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு ( chengalpattu mahila court )
இச்சம்பவம் தொடர்பான செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது அரசு தரப்பு வழக்கறிஞர் சசிரேகா வாதாடினார். இந்த வழக்கில் குற்றவாளி சேகருக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி எழிலரசி இரண்டு பிரிவுகளில் ஏழாண்டு சிறை தண்டனையும், 10000 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால், மேலும் இரண்டு மாத சிறை தண்டனையும் வழங்கினார். மேலும் குற்றவாளி சேகர் இதனை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து குற்றவாளியை காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்தனர். இரண்டாவது குற்றவாளியான குட்டி (எ) கந்தன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பெண்ணிற்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க நீதிபதி உத்திரவிட்டிருந்த நிலையில் பெண்ணின் தாய் சந்திராவுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion