சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு 610 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
ஆண்டு தோறும் தீபாவளி, பொங்கல் பண்டிகைகள், தொடர் விடுமுறை நாள்களின் போது சிறப்பு பேருந்துகள் நாடு முழுவதும் இயக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
நாளை தொடங்கி அடுத்த மூன்று நாள்களுக்கு தொடர் விடுமுறை வர உள்ள நிலையில், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிற பகுதிகளில் இருந்து சென்னை வந்து லட்சக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். பண்டிகைக் காலங்கள், தொடர் விடுமுறை நாள்களின்போது தான் இவர்களில் பெரும்பாலானோருக்கு விடுமுறை வழங்கப்படுவதால், கொத்து கொத்தாக இந்தக் காலங்களில் பயணிகள் சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு பயணிப்பர்.
இவர்களைக் கருத்தில் கொண்டு ஆண்டு தோறும் தீபாவளி, பொங்கல் பண்டிகைகள், தொடர் விடுமுறை நாள்களின் போது சிறப்பு பேருந்துகள் நாடு முழுவதும் இயக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், நாளை (ஆக.13) தொடங்கி நாளை மறுநாள் (ஆக.14), சுதந்திர நாள் (ஆக.15) ஆகிய 3 நாள்கள் தொடர் விடுமுறை என்பதால், பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு இன்றும் நாளையும் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு மொத்தம் 610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
View this post on Instagram
கடந்த ஆண்டு தீபாவளி, பொங்கலின்போது ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதேபோல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.
சென்ற ஆண்டுகளில் சிறப்பு பேருந்துகளின் பயணச்சீட்டு விலை அதிகம் வைத்து விற்கப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தற்போது அத்தகைய பிரச்னைகள் ஏதுமின்றி, பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: போர் மேகத்தால் சூழப்பட்ட தைவான்...பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி மர்ம மரணம்.. அதிகரிக்கும் பதற்றம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்