செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. உள்ளூர் விடுமுறை விட்ட ஆட்சியர்.. முழு தகவல் உள்ளே..
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு வருகின்ற செவ்வாய்க்கிழமை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு வருகின்ற செவ்வாய்க்கிழமை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது
ஆடிப்பூரம்
ஆடி மாதம் என்பது அம்மன் மாதம் எனக் கூறலாம், ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு பல்வேறு முக்கிய திருவிழாக்கள் நடைபெறுகிறது. சிறிய கோவில்களில் தொடங்கி பெரிய அம்மன் கோவில்கள் வரை ஆடி மாதம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தில் காணப்படும். அந்த வகையில் ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்று ஆடிப்பூரம். ஆடிப்பூரம் ன்பது அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு திருவிழாவாகும். ஆடிமாதம் பூர நட்சத்திரத்தில்தான் அம்மன் தோன்றினாள் என்கின்றன புராணங்கள். ஆண்டாள் அவதார நட்சத்திரமும் ஆடிப்பூரம்தா எனவே ஆடிப்பூரத் அன்று ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசிக்க கூடுவது வழக்கம்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம்
செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை பல்வேறு அம்மன் கோவில்களில் ஆடிப்பூரம் மிக விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு மேல்மருவத்தூரில் அமைந்துள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆடிப்பூரம் விழா மிக விமர்சையாக கொண்டாடப்படும். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு, தமிழ்நாட்டு மட்டும் இல்லாமல் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 2 நாட்கள் நடைபெறும் ஆடிப்பூரம் திருவிழாவின் மூன்று முக்கிய அம்சங்கள், அம்மனுக்கு கஞ்சி (கூழ்) சேர்ப்பது, பக்தர்கள் தாங்களாகவே சுயம்புக்கு பால் அபிஷேகம் (அபிஷேகம்) செய்வது, உள்ளிட்ட பல வகையான வேண்டுதல்கள் நடைபெறும்.
உள்ளூர் விடுமுறை
இந்த நிலையில் இந்த ஆண்டு ஆடி மாத ஆடிப்பூரம் விழா, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி ( 06-08-2024 _) உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிபுறம் விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
எனவே செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி,கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை சரி செய்யும் வகையில் வருகின்ற 31ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது