மேலும் அறிய

முதல்வரிடம் தொலைபேசியில் கோரிக்கை.. 24 மணிநேரத்தில் மாறிய மாற்றுத்திறனாளியின் வாழ்க்கை..

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த 24 மணிநேரத்தில், கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது

“நீங்கள் நலமா" மூலம் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளி, 24 மணி நேரத்தில் தீர்வு கொடுத்த முதலமைச்சர்..

“நீங்கள் நலமா"

“நீங்கள் நலமா" என்ற புதிய திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், பயனாளிகளைத் தொடர்பு கொண்டு அரசின் நலத்திட்டங்கள் குறித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 04 தேதி , தலைமை செயலகத்திலிருந்து இருந்து புதிய பெருங்களத்தூர், பீர்க்கங்கரணை சதானந்தபுரம் ரோடு, கட்டபொம்மன் தெருவில் வசித்து வரும் அருள் என்ற மாற்றுத்திறனாளியிடம் நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளி

அப்போது , அருள் முதல்வரிடம் , நான் ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி. என்னுடைய அக்காவின் பெயர் சுகன்யா. அவருடைய வயது 45. எனது அக்காவும் இரண்டு கால்களும் நடக்க முடியாத நிலையில் இருக்கும் மாற்றுத்திறனாளி ஆவார். என்னுடைய சகோதரிக்கு ஒரு மகன் இருக்கிறான். அவனும் மன வளர்ச்சி குன்றிய மாற்றத்தினாளி ஆவான். மாதந்தோறும் மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகையாக எனக்கு ரூபாய் 1500ம், என்னுடைய சகோதரிக்கு ரூபாய் 1500ம், என்னுடைய அக்கா மகனுக்கு ரூபாய் 2000ம் உதவித்தொகை மாதம் தோறும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

முதல்வரிடம் தொலைபேசியில் கோரிக்கை.. 24 மணிநேரத்தில் மாறிய மாற்றுத்திறனாளியின் வாழ்க்கை..

இதுகுறித்து அவர் கூறுகையில் ,  தமிழ்நாடு முதலமைச்சர் எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். இதை நான் எதிர்பார்க்கவில்லை. முதல்வர் சுகன்யா சுரேஷ் யார் என்று கேட்டார். அதற்கு நான் என்னுடைய அக்காவின் பெயர் சுகன்யா சுரேஷ் என்று தெரிவித்தேன். மாதந்தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வருகிறதா என கேட்டார். அதற்கு மாதந்தோறும் தவறாமல் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையினை பெற்றுக் கொள்கிறேன் என தெரிவித்தேன். 

கோரிக்கை நிறைவேற்றப்படும்

எந்த மாவட்டம் என்று முதல்வர் அவர்கள் கேட்டதற்கு செங்கல்பட்டு மாவட்டம் என தெரிவித்தேன். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் உதவித்தொகைகள் சரியாக வரப்பெறுகிறதா? என கேட்டறிந்தார். சரியாக வருகிறது என தெரிவித்தேன். மேலும் வேறு ஏதாவது உதவி தேவைப்படுகிறதா என முதல்வர் அவர்கள் கேட்டார். அதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான கண்ணாடி மற்றும் ஊன்றுகோல் தேவைப்படுகிறது என தெரிவித்தேன். உடனே உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என முதல்வர் அவர்கள் தெரிவித்தார்.

முதல்வரிடம் தொலைபேசியில் கோரிக்கை.. 24 மணிநேரத்தில் மாறிய மாற்றுத்திறனாளியின் வாழ்க்கை..

அடுத்து எனது சகோதரிக்கு வெளியே சென்று வருவதற்கு ஏதுவாக மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி வண்டியை வழங்குமாறு கேட்டுக் கொண்டேன். அதையும் முதல்வர் அவர்கள் பெரிய மனதுடன் தருகிறேன் என தெரிவித்தார். மேலும் எனது சகோதரி வருமானம் இன்றி தவிப்பதாக தெரிவித்ததற்கு,  சுயதொழில் தொடங்க கடனுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். எனது மாற்றுத்திறனாளி அக்கா 1500 மட்டுமே மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பெற்று வருகிறார். அவர் 90% ஊனமுற்றவர் ஆதலால் மாதந்தோறும் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகையினை 2000 ஆக உயர்த்தி தருமாறு கேட்டுக் கொண்டதற்கு முதலமைச்சர் உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்தார்.

 24மணிநேரத்தில் மாறிய வாழ்க்கை 

இந்தநிலையில் , செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பேட்டரி ஸ்கூட்டர், ஒரு லட்சம் கடனுதவி மற்றும் ரூபாய் 2000 ஆக மாதாந்திர உதவித்தொகை உயர்த்தி வழங்குவதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் வழங்கினார். முதல்வரிடம் கோரிக்கை வைத்த 24 மணிநேரத்தில், நடவடிக்கை எடுத்ததற்கு முதல்வருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
Delhi New CM: டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Suchitra vs Vairamuthu |’’நீ என்ன PSYCHIATRIST-ஆ?நோபல் பரிசு கொடுக்கலாமா?’’கடுப்பான சுசித்ராTirupati Laddu History | Mysuru Palace Elephant Angry | Barriers-யை உடைத்து எறிந்த யானை மைசூரில் அலறியோடிய மக்கள் பதறிய பாகன்Rahul on laddu | லட்டில் பன்றி கொழுப்பா? கொதித்தெழுந்த  ராகுல்! ஜெகன், நாயுடுவுக்கு எச்சரிக்கை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
Delhi New CM: டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
மதுரை: பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு!
மதுரை: பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு!
Tvk Vijay maanadu: தவெக முதல் மாநாடு... மீண்டும் அனுமதி கேட்டு எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்த புஸ்ஸி ஆனந்த்
Tvk Vijay maanadu: தவெக முதல் மாநாடு... மீண்டும் அனுமதி கேட்டு எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்த புஸ்ஸி ஆனந்த்
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கை இன்றே தொடக்கம்!
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கை இன்றே தொடக்கம்!
Breaking News LIVE: தமிழ்நாடு மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது
Breaking News LIVE: தமிழ்நாடு மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது
Embed widget