Breaking News Tamil LIVE: சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் : பி.வி.சிந்து சாம்பியன்
Breaking News Tamil LIVE Updates: இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.

Background
ஆந்திரா: திருப்பதி அருகே பாகார்பேட்டையில் 50 அடி பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிவிஆர் - ஐநாக்ஸ் நிறுவனங்கள் இணைப்பு
நாட்டின் முன்னணி மல்டிபிளக்ஸ் நிறுவனங்களான பிவிஆர் - ஐநாக்ஸ் நிறுவனங்கள் இணைந்துள்ளன.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் அரசு முனைப்புடன் உள்ளது : முக ஸ்டாலின்
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் அரசு முனைப்புடன் உள்ளது என துபாயில் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் : பி.வி.சிந்து சாம்பியன்
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
சென்னையில் 22, 941 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்!
சென்னையில் 2021 ஆகஸ்ட் 19 முதல் 2022 மார்ச் 26 வரை 22, 941 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
மெரினா கலங்கரை விளக்கத்துக்கு போலீஸ் பாதுகாப்பு
சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கத்துக்கு மிரட்டல் வந்ததை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

