Breaking News Live : பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ’Z’ பிரிவு பாதுகாப்பு - மத்திய அரசு முடிவு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Background
மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதியில் போட்டி நாளன்று போட்டி நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள 16மதுபானகடைகள் மற்றும் மனமகிழ்மன்றங்களில் மது விற்பனைக்கு தடை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு செய்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் வரும் 15ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16ஆம் தேதி பாலமேட்டிலும், 17ஆம் தேதி உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான பதிவு madurai.nic.in இணையதளம் மூலம் பதிவு கடந்த 10 ஆம் தேதி நண்பகல் 12.10மணிக்கு தொடங்கி இன்று மாலை 5 மணி வரை பதிவு நடைபெற்று நிறைவுபெற்றது.
இந்த ஆன்லைன் முன்பதிவில் மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு 9,699 காளைகளும், 5,399 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு ஆன்லைன் மூலமாக பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே போட்டிகளில் பங்கேற்பதற்கான அனுமதி டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். டோக்கன் பதிவிறக்கம் செய்த மாடுபிடிவீரர்கள் மற்றும் காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது
Breaking News Live : பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ’Z’ பிரிவு பாதுகாப்பு - மத்திய அரசு முடிவு
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு 'Z' பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதை கருத்தில்கொண்டு அண்ணாமலைக்கு பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 33 கமாண்டோக்கள் சுழற்சி முறையில் அண்ணாமலைக்கு பாதுகாப்பு அளிக்கவுள்ளனர்.
Breaking News Live : கங்கா விலாஸ் சொகுசு கப்பல் சேவை தொடக்கம்
உலகின் மிக நீளமான நதிப்பயண சொகுசு கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். 3 தளங்கள், 18 அறைகள் கொண்ட எம்வி கங்கா விலாஸ் கப்பலில் 32 சுற்றுலா பயணிகள் பயணம் செய்ய உள்ளனர்.





















