13.04.2021ம் நாளுக்கான தலைப்புச் செய்திகள்
தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா-வின் பதவிக் காலம் நிறைவடைவதை அடுத்து, புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுசில் சந்திரா இன்று பொறுப்பேற்கிறார்
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
1. தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா-வின் பதவிக் காலம் நிறைவடைவதை அடுத்து, புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுசில் சந்திரா இன்று பொறுப்பேற்கிறார்.
2. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை, உயர்கல்வி துறை முதன்மைச் செயலர் செல்வி அபூர்வா-வை, ஒருங்கிணைப்பாளராக கொண்ட குழு பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
3. கொரோனா பரவலை தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாக பயணிக்கும் உள்நாட்டு விமானங்களில் உணவு அளிக்கப்பட மாட்டாது என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்தது.
4. காய்ச்சல், இருமல், சளி போன்ற கோவிட் அறிகுறிகள் இருந்தாலோ அல்லது கோவிட் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருந்தாலோ ரயில் பயணத்தை தவிர்க்க வேண்டும்: என தெற்கு ரயில்வே அறிவுரித்தியது.
5. தமிழகத்தில் கோவிட் பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார் . சுகாதாரம், காவல், வருவாய், உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் (18 வயதுக்கு மேற்பட்டவர்கள்) தடுப்பூசி போட்டுக் கொள்ள தமிழக அரசு உரிய ஏற்பாடு செய்யப்படும் என முதல்வர் தெரிவித்தார்.
6. ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசர கால தேவைக்குப்ப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் தயாரித்து வழங்க உள்ளது.
7. தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் வரும்15-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. கிழக்கு கடற்கரை பகுதிகளான திருவள்ளளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை இந்த தடைஉத்தரவு அமலில் இருக்கும். மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில்கொண்டு 61நாட்களுக்கு இந்த தடை நடைமுறையில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்தது.
8. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை மேற்கொண்டு வரும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
9. மேற்கு வங்க முதல்வர் மம்தாவிற்கு நேற்று மாலை 8 மணிமுதல் இன்று மாலை 8 மணிவரை தேர்தல் பரப்புரையில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
10. ஏப்ரல் 14-16 வரை தமிழகம் மற்றும் கேரளாவின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்தது.