CM Stalin on Vaccination: பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு!
இந்தியாவில் தயாரிக்கப்படும் 75 சதவீதம் தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்குவோம் என பிரதமர் இன்று மாலை அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
75 சதவீதம் தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் பிரதமரின் அறிவிப்புக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
I welcome the @PMOIndia's statement indicating that the Union Government will procure 75% of the vaccines produced in the country and provide them to the states free of cost. I also appreciate the Prime Minister for reversing his government's previous position.
— M.K.Stalin (@mkstalin) June 7, 2021
தற்போது 50 சதவிகிதம் தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக மாநிலங்களுக்கு தந்து வருகிறது. மற்ற 50 சதவிகிதம் தடுப்பூசிகளை மாநிலங்கள் வாங்கி வருகின்றன. இந்நிலையில் இனி 100 சதவீதம் மாநிலத்திற்கு இலவசமான தடுப்பூசிகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்தியாவில் உற்பத்தி ஆகும் 75 சதவீதம் தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்து, மாநில அரசுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது
இந்நிலையில் பிரதமர் மோடி அறிவித்துள்ளபடி ஒன்றிய அரசு இந்தியாவில் தயாரிக்கப்படும் 75 சதவீதம் கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்து இலவசமாக மாநிலங்களுக்கு வழங்க முடிவு செய்திருக்கும் அறிவிப்பை வரவேற்கிறேன். மேலும் மத்திய அரசு முந்தைய நிலைப்பாட்டில் மாற்றி கொண்டதற்கு முதல்வர் ஸ்டாலின் தனது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
As Prime Minister @narendramodi stressed multiple times in his remarks that Health is a state subject, it would be appropriate for each state to be given complete control of registration, validation and administration procedures of the vaccination.
— M.K.Stalin (@mkstalin) June 7, 2021
மேலும் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய உரையில், சுகாதாரம் மாநிலத்தின் பொறுப்பு என வலியுறுத்தியுள்ளார், அவர் குறிப்பிட்டுள்ள படி தடுப்பூசியின் பதிவு, சரிபார்ப்பு மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்த முழுமையான அதிகாரத்தை மாநிலத்திற்கு வழங்குவதே சரியானதாக இருக்கும் எனவும் பதிவிட்டுள்ளார்