மேலும் அறிய
Advertisement
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 71.79% சதவீதம் வாக்குகள் பதிவு - தேர்தல் அதிகாரி தகவல்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தோராயமாக 71.79 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறினார்.
தமிழ்நாட்டில் இன்று 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. பெரியளவில் அசம்பாவிதங்கள் மற்றும் சண்டை சச்சரவுகள் ஏதுமின்றி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், வாக்குப்பதிவு தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், “தமிழக சட்டமன்றத் தேர்தலில் தோராயமாக 71.79 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளது. நள்ளிரவு 12 மணி அல்லது 1 மணிக்கு அதிகாரப்பூர்வ வாக்கு சதவிகித விவரம் தெரியவரும். வாக்கு சதவிகிதம் நன்றாக இருந்தாலும் நள்ளிரவு மாற வாய்ப்புள்ளது” என்றார்.
மேலும், “தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதம் வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 59.40 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன” என்றும் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion