மேலும் அறிய

Nenjukku Neethi Review: நெஞ்சுக்கு நீதி... ‛பன்ச்’க்கு உதயநிதி... எப்படி இருக்கிறது படம்? உள்ளதை சொல்லும் விமர்சனம்!

Nenjukku Neethi Review in Tamil: அரசியல்வாதிகள் பார்க்கும் ஜாதியையும், ஜாதியை வைத்து அரசியல் செய்து பிழைப்பவர்களையும் சாடியிருக்கிறார்கள்; அதற்காகவே உதயநிதியை பாராட்டலாம்.

இந்தியில் தேசிய விருது பெற்ற ‛ஆர்ட்டிக்கல் 15’ படத்தின் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி. கொலை செய்யப்பட்டு தற்கொலையாக மாற்றப்படும் இரு பெண்களின் மரணம் தான் படத்தின் கரு. அதை தமிழக அரசியலுக்கு ஏற்றபடி கலவை செய்து, கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி டைட்டிலோடு, உதயநிதி நடித்து வெளியாகியிருக்கிறது நெஞ்சுக்கு நீதி.

படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை, அம்பேக்கார்-பெரியார் சிலைகள், போட்டோக்களுடன்  அவர்களின் வரிகள் தான் டயலாக்காக வலம் வருகிறது. ஒருதரப்பினர் சுமக்கும் வலிகளை, வரி வரியாக விவரித்திருக்கிறார்கள். கோவை மாவட்டத்தில் தொடங்கி, பொள்ளாச்சியில் ஆரம்பிக்கும் கதை. 

Nenjukku Neethi Review: நெஞ்சுக்கு நீதி... ‛பன்ச்’க்கு உதயநிதி... எப்படி இருக்கிறது படம்? உள்ளதை சொல்லும் விமர்சனம்!

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் மாயமாகிறார்கள். இருவர் தூக்கில் தொங்கவிடப்படுகிறார்கள். ஒரு பெண் , என்ன ஆனார் என தெரியவில்லை. அதை சாதாரண பெட்டி கேஸ் போல, அந்த வழக்கை கையாளும் காவலர்களுக்கு மத்தியில், புதிதாக அங்கு பொறுப்பேற்கும் ஏஎஸ்பி., உதயநிதி, உணர்வோடு அதை விசாரிக்கிறார். தூக்கிலிடப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைத்ததா? மாயமான பெண் கிடைத்தாரா? என்பது தான், நெஞ்சுக்கு நீதி. 

இன்ஸ்பெக்டராக வரும் சுரேஷ் சக்கரவர்த்தியை, சுந்தரம் ஐயர் என, அப்பட்டமாக ஜாதிவாரி வில்லனாக சித்தரித்து, அவர் சார்ந்த சமூகத்திற்கு எதிரான வசனங்களையும், அதே போல பாதிக்கப்பட்ட மற்றொரு தரப்புக்கு ஆதரவான வசனங்களையும் அடுக்கடுக்காக வைத்து நகர்கிறது கதை. ஜாதி... ஜாதி.. ஜாதி... போதாக்குறைக்கு , சமூக நீதி, அப்புறம் பெரியார், அம்பேத்கர் என அவர்களை நம்பியே படம் நகர்கிறது. உண்மையில் அது பேசப்பட வேண்டிய ஒன்று தான். ஆனால், அதை அரசியல் ரீதியாக கையாண்டிருக்கிறார்களோ என்கிற சந்தேகமும் எழுகிறது. 

கோட்டாவில் டாக்டரான பெண்ணுக்கு அனிதா என்று கதாபாத்திரம் பெயர் வைத்து, அனிதாவுக்கு நான் துணையாக இருப்பேன் என்று உதயநிதி வசனம் பேசும் போது, திமுக பிரச்சாரங்கள் தான் நினைவுக்கு வருகிறது. பல நேரங்களில் இது போன்ற உணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை. சமூகத்தில் நடக்காத ஒன்றை இவர்கள் கூறவில்லை. ஆனால், அது மட்டுமே நடப்பதாக கூறியிருப்பது தான் கொஞ்சம் ஓவர் டோஸ். மனிதன் படத்திற்குப் பின் உதயநிதிக்கு நல்ல ஸ்கோப் கிடைக்கும் படம்; சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி. இந்திக்கு எதிரான வசனங்கள், கடந்த கால ஆட்சி, அமைச்சரின் மச்சான் என தேவைப்படும் இடத்தில் எல்லாம், உதயநிதிக்கான வசனத்தை வைத்ததில் ஜெயித்திருக்கிறார் இயக்குனர் அருண்குமார் காமராஜ். 

Nenjukku Neethi Review: நெஞ்சுக்கு நீதி... ‛பன்ச்’க்கு உதயநிதி... எப்படி இருக்கிறது படம்? உள்ளதை சொல்லும் விமர்சனம்!

போலீஸ் மிடுக்கு கொஞ்சமும் குறையாமல், நன்கு தேறியிருக்கிறார் உதயநிதி. முந்தைய கால அவரது படங்களில் இருந்த பல குறைகள் நீங்கியிருக்கின்றன. ஆரி, புரட்சியாளராக சிறிது நேரம் வந்தாலும், குமரன் என்கிற பெயரை, படத்தில் பதிவு செய்திருக்கிறார். படத்தை பெரிதாக சுமந்ததில், சுரேஷ் சக்கரவர்த்திக்கு பெரும் பங்கு உண்டு. அதே அளவு பங்கு , இசையமைப்பாளர் திபு நினன் தாமஸிற்கு உண்டு. படத்தின் கதைக்குள் நம்மை அழைத்து செல்வது, அந்த பின்னணி தான். படம் முழுக்கவே விளையாடியிருக்கிறார் திபு. தினேஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, கண் கொள்ளா காட்சிகளையும், கண்ணால் காண முடியாத காட்சிகளையும் அப்படியே காட்டுகிறது. 

அரசியல்வாதிகள் பார்க்கும் ஜாதியையும், ஜாதியை வைத்து அரசியல் செய்து பிழைப்பவர்களையும் சாடியிருக்கிறார்கள்; அதற்காகவே உதயநிதியை பாராட்டலாம். எந்த சமரசமும் இல்லாமல், துணிந்து ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்கள். விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; கதையில் உதயநிதி இருக்கும் போது, அதை சமாளிக்க மாட்டார்களா என்ன? படத்திற்கும், கதைக்கும் கவசமே உதயநிதி தான். திமுகவின் அடுத்த அரசியல் பயணத்திற்கும், திமுகவின் இமேஜ்ஜிற்கும் இந்த படம் உதவலாம். நெஞ்சுக்கு நீதி... ‛பன்ச்’க்கு உதயநிதி!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget