World Theatre Day 2023: இன்று உலக நாடக அரங்க தினம்… ஏன்? எதற்கு? வரலாறு என்ன? அறிஞர்கள் கூறுவது என்ன?
ITI ஆனது 1961 ஆம் ஆண்டு உலக நாடக அரங்க தினத்தை அறிமுகப்படுத்தியது. பின்னர் அது சர்வதேச நாடக சமூகம் மற்றும் ITI மையங்களால் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27 அன்று கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் 'உலக நாடக அரங்க தினமாக' கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள நாடக கலைஞர்களை கொண்டாடவும், அங்கீகரிக்கவும் இந்த சிறப்பு நாள் உதவுகிறது. இந்த தினம் நாடகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும், அது தற்போது அழிந்து வருவது பற்றியும் விழுப்புணர்வு அளிக்கிறது.
உலக நாடக தினம்
சமுதாயத்திற்கு நாடகம் எவ்வாறு முக்கியமான விஷயங்களை கற்பிக்கிறது என்பதைப் பற்றியும் மக்களுக்குக் தெரிவிக்க இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதற்கான மிக முக்கியமான வழிகளில் நாடகம் ஒன்றாகும். நாடகங்கள், கதைகளை காட்சிப்படுத்துவதன் மூலம், தொடர்ச்சியான சமூகத் தீமைகள் மற்றும் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுகின்றன.
உலக நாடக தின வரலாறு
உலக நாடக தினம் முதன்முதலில் சர்வதேச நாடக நிறுவனத்தால் (ITI) அனுசரிக்கப்பட்டது. அது அன்றிலிருந்து தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ITI ஆனது 1961 ஆம் ஆண்டு உலக நாடக தினத்தை அறிமுகப்படுத்தியது. பின்னர் அது சர்வதேச நாடக சமூகம் மற்றும் ITI மையங்களால் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27 அன்று கொண்டாடப்படுகிறது. பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச நாடக நிகழ்வுகள் இந்த நாளைக் குறிக்கின்றன. முதல் செய்தி 1962 இல் ஜீன் காக்டோவால் இயற்றப்பட்டது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27 அன்று (பாரிஸில் 1962 ஆம் ஆண்டு 'தியேட்டர் ஆஃப் நேஷன்ஸ்' சீசனின் தொடக்க தேதி), ஐடிஐ மையங்கள் மற்றும் திரையரங்குகள், நாடக வல்லுநர்கள் மற்றும் பல்வேறு தியேட்டர் தொடர்பான நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள், இந்த நாளை பல்வேறு வழிகளில் கொண்டாடுகின்றன.
முக்கியத்துவம்
உலக நாடக தினம் என்பது உலகம் முழுவதும் நடைபெறும் மிக முக்கியமான கொண்டாட்டங்களில் ஒன்றாகும். கலாச்சார மற்றும் கலை உலகில் நாடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதை இந்த நாள் நினைவூட்டுகிறது.
உலக நாடக தினம் 2023 - கருப்பொருள் (தீம்)
சமுதாயத்திற்கு நாடகம் எவ்வாறு முக்கியமான விஷயங்களை கற்பிக்கிறது என்பதைப் பற்றியும் மக்களுக்குக் தெரிவிக்க இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. உலக நாடக தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27 அன்று இதே கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது. இந்த தீம் 59 ஆண்டுகளாக மாறாமல் பின்பற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாடக தினம் மேற்கோள்கள்
"திரைப்படங்கள் உங்களை பிரபலமாக்கும்; தொலைகாட்சி உன்னை பணக்காரனாக்கும்; ஆனால் நாடகம் உங்களை நல்லவர்களாக்கும்" - டெரன்ஸ் மான்
"நாடகம் என்பது நடிகர்களுக்கு புனிதமான இடம். அவர்களுக்கு பொறுப்பு இருக்கிறது; ஏனெனில் அவர்கள்தான் ஒட்டுநர் இருக்கையில் இருக்கிறார்கள்" - கிரேட்டா ஸ்காச்சி
"வாழ்க்கை என்பது ஒரு நாடக மேடை, அதில் சில நடைமுறை நுழைவாயில்களே உள்ளன" - விக்டர் ஹ்யூகோ
"ஒரு மனிதனாக இருப்பதன் உணர்வை ஒரு மனிதன் இன்னொருவருடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய உடனடி வழி நாடகம், எல்லா கலை வடிவங்களிலும் மிகச் சிறந்த கலை வடிவமாக நாடகத்தை நான் கருதுகிறேன்" - ஆஸ்கார் வைல்டு
"நாவல்கள் கிசுகிசுக்கும்; நாடகம் அலறும்" - ராபர்ட் ஹோல்மன்
"பெரிய நகரமோ, சிறிய நகரமோ, கிராமமோ… அங்கு இயற்றப்படும் நாடகம் என்பது கலாச்சாரத்தின் வெளிப்படையனா அடையாளம் என்று நான் நம்புகிறேன்" - லாரன்ஸ் ஆலிவர்
"பார்வையாளர்களுக்கு, எல்லா இரவும் எல்லாமே நடக்கும், அதனால் நாடகத்திற்கு வருவது மிகவும் சிறப்பான விஷயம்" - ரோஜர் ரீஸ்