Mental Health: அலுவலக ஸ்ட்ரெஸ்களை குறைக்க உதவும் உணவுகள் - நிபுணர்கள் பரிந்துரை!
World Mental Health Day 2024: அலுவலக ஸ்ட்ரெஸை நிர்வகிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி நிபுணர்கள் சொல்வதை காணலாம்.
அலுவலகத்தில் அதிர நேரம் வேலை செய்வது, அலுவலகம் செல்வதற்கு தொலைதூரம் பயணிப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உடல்நலன் மற்றும் மனநல பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10,உலக மனநல தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. "Mental Health at Work" என்பது இந்தாண்டின் கருப்பொருள். உலக மக்கள்தொகையில் 60 சதவீதம் பேர் அலுவலக பணி செய்வதாக குறிப்பிட்டுள்ள உலக சுகாதார நிறுவனம் பணியிடத்தில் மனநலத்தைப் பாதுகாப்பதை வலியுறுத்தியுள்ளது. பணியிடங்கள் இரு முனை கொண்ட கத்தியாக இருக்கலாம். மன நலனை மேம்படுத்தலாம் அல்லது மாறாக, நீண்ட நேர வேலை, டைட்டான காலக்கெடு மற்றும் மோசமான பணி சூழல் உள்ளிட்ட காரணிகளால் மன அழுதத்தை உருவாக்கலாம். என்று சொல்கிறது.
வேலையில் மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான மிகவும் கவனிக்கப்படாத அம்சங்களில் ஒன்று உணவின் பங்கு. நாம் உண்ணும் உணவு நமது மன நலனை கணிசமாக பாதிக்கிறது. புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனநிலைக் கோளாறுகளை நிர்வகிப்பதில் உணவின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர்.
மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சீ எங், பணியிட மன அழுத்தம் உற்பத்தித்திறனைக் குறைப்பது மட்டுமல்லாமல், கவலை மற்றும் மனச்சோர்வு போன்ற மனநலப் பிரச்சினைகள் அதிகரிப்பதற்கும் பங்களிக்கிறது என்று ஆய்வுக் கட்டுரையில் எடுத்துக்காட்டியுள்ளர்.
சயின்ஸ் டைரக்ட் இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி, மோசமான உணவுப் பழக்கங்களுக்கும், கவலை மற்றும் மனச்சோர்வு போன்ற மனநிலைக் கோளாறுகள் அதிகரிப்பதற்கும் இடையே வலுவான தொடர்பு இருப்பதாகக் கூறுகிறது. இந்த கண்டுபிடிப்புகள் மன அழுத்தத்தை சமாளிக்க சரியான உணவுகளை சாப்பிட வேண்டிய அவசியத்தை குறிப்பிடுகிறது.
மூளை ஆரோக்கியத்திற்கும் உணவுக்கும் தொடர்பு இருக்கிறதா?
உளவியல் நிபுணர் மதுமிதா கோஷ் தெரிவிக்கையில், "நம் மூளையில் உள்ள இரசாயனங்களும் நாம் சாப்பிடும் உணவும் நாள் முழுவதும் ஒன்றோடு ஒன்று தொடர்புடன் இருக்கின்றன. ஆரோக்கியமான உணவு சாப்பிடும்போது மூளையில் நேர்மறையான உணர்வுகளை ஏற்படுத்தும்.” என்று தெரிவித்தார்.
அலுவலக அழுத்தத்தைக் குறைப்தற்கு இருக்கும் பல வழிகளில் ஆரோக்கியமான டயட் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
பழங்கள், காய்கறிகள் டயட்டில் இருக்கட்டும்:
நியூசிலாந்தில் உள்ள ஒடாகோ பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சேர்ப்பதால் மனநலன் மேம்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் குறைந்தது ஒரு வகையான பழம் சேர்ப்பது நல்லது. ஜூஸ் வகைகளை குடிப்பதற்கு பதிலாக முழு பழங்களை சாப்பிடுவது நல்லது.
ஆரோக்கியமான கார்ஃபோஹைரேட்:
ஆரோக்கியமான கார்ஃபோஹைட்ரேட் உணவுகளை உணவில் சேர்ப்பது செரட்டோனின் அளவை அதிகரிக்கும். ஓட்ஸ், குயினோ பிரவுன் ரைஸ், ஆகியவற்றை சாப்பிடுவது சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும்.
ஒமேகா -3 உணவுகள்:
ஒமேகா -3 ஃபேட்டி ஆசிட் உணவுகளான சால்மன் மின், டியுனா ஆகியவை மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். வால்நட், ஃப்ளாக்ஸ் சீட்ஸ் ஆகியவை மூளையின் செயல்பாட்டிற்கு உதவும்.
ஆண்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்த உணவுகள்:
சிட்ரஸ் உணவுகள், பச்சை காய்கறிகள், ஆரஞ்சு, தக்காளி, கொய்யாக்காய் உள்ளிட்டவை மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
வைட்டமின்:
வைட்டமின் பி, பி6, பி12, வைட்டமின் டி, ஆகியவை காக்னிடிவ் திறனை மேம்படுத்த உதவும். போதுமான அளவு வைட்டமின் உணவில் இருப்பது முக்கியம்.
குடல் ஆரோக்கியம்:
குடல் ஆரோக்கியமாக இருந்தால் ஒட்டுமொத்த உடல்நலனும் சீராக இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றன.
பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுகள், அதிக சர்க்கரை உள்ள உணவுகள் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவும்.