World Environment Day 2023: உலகை அழிவுப்பாதைக்கு இட்டு செல்லும் பிளாஸ்டிக்...அதற்கு மாற்றாக இந்த பொருள்களை பயன்படுத்துங்கள்...!
இந்தியாவில் ஆண்டுதோறும் 3.5 மில்லியன் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் சேருகின்றதாக கூறப்படுகிறது.
பிளாஸ்டிக் பயன்பாடு
அறிவியல், மானுடத்திற்கு பலதரப்பட்ட கண்டுபிடிப்புகளின் வழி எண்ணிலடங்கா நன்மைகளை செய்தாலும் அதன் அதீத பயன்பாடுகள் மொத்த சுற்றுச்சூழல் அமைப்பிலும் பல நூற்றாண்டு பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகின்றன. அதில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளில் ஒன்று பிளாஸ்டிக். சமீப காலமாக உலக நாடுகளை மிகவும் அச்சுறுத்தி வருவது சுற்றுச்சூழல் மாசுபாடுதான். சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு மூல காரணியாக விளங்குவது பிளாஸ்டிக். பல நூறு ஆண்டுகள் ஆனாலும் அழியாமல் மண்ணில் நிலை கொண்டிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளின் உயிருக்கு உலை வைத்து வருகிறது.
ஆறு, குளம், ஏரி, கடல் என்று அனைத்தையும் விட்டு வைக்காமல் நாசப்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள் உயிரினங்களை அடியோடு அழித்து விடுகின்றன. பிளாஸ்டிக்கின் தீமையை உணர்ந்த இந்தியா உட்பட பல நாடுகள் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது.
கருப்பொருள்
ஆனாலும், நாம் அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாமல் இருப்பது இல்லை. சின்ன சின்ன கடைகள் உட்பட எந்த இடத்திலும் நாம் பிளாஸ்டிக் பொருட்கள் தான் பயன்படுத்தி வருகிறோம். இத்தகைய பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் விதமாக இன்று கடைபிடிக்கப்படும் உலக சுற்றுச்சூழல் தினத்திற்கான கருப்பொருள் 'Beatplasticpollution' என்பது தான்.
சமீபத்தில் வெளியான தகவலின்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் 3.5 மில்லியன் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் சேருகின்றதாக தெரிகிறது. எனவே பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது நம் சுற்றுச்சூழலுக்கு நல்லது. எனவே பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாறாக கீழே உள்ள 10 பொருட்களை நாம் பயன்படுத்தலாம்.
கார்ட்டன் பை
நாம் அன்றாட வாழ்க்கையில் நாம் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இதனால் பல தீமைகள் இருப்பதால் இதற்கு மாறாக கார்டன் பைகளை பயன்படுத்தலாம். இந்த கார்டன் பைகளை நாம் எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். எனவே சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இந்த கார்ட்ன் பை விளங்குகிறது.
மூங்கில் டூத் பிரஷ்
நாம் அன்றாட பயன்படுத்தும் பிளாஸ்டிக் டூத் பிரஷ்க்கு பதிலாக மூங்கில் டூத் பிரஷை பயன்படுத்தலாம். இந்த மூங்கில் பல் துலக்குதல் கிமு 1500 ஆண்டுக்கு முன்பு, சீனாவில் முதலில் தயாரிக்கப்பட்டது. மூங்கிலில் பல் துலக்குவது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும். எனவே அனைவரும் இதை பயன்படுத்துவது மிகவும் நல்லது.
மென்ஸ்ட்ரூவல் கோப்பை
மாதவிடாய் பெண்கள் அதிகம் பயன்படுத்துவது நாப்கின்ஸ்தான். இதற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு ஏற்றதான மென்ஸ்ட்ரூவல் கோப்பையை பயன்படுத்தலாம். இதை நாம் எவ்வளவு முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். நாப்கின்ஸ் போன்று ஒருமுறை பயன்படுத்தும் பொருள் அல்ல மென்ஸ்ட்ரூவல் கோப்பை.
ஸ்டைன்லஸ் ஸ்டீல் பாட்டில்
நாம் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரை வைத்து குடிக்கும்போது பிளாஸ்டிக் துகள்கள் தண்ணீரில் கலந்து காலப்போக்கில் ஏராளமான உடல்நல பாதிப்புகளை உண்டாக்குகிறது. ஆனால் ஸ்டைன்லஸ் ஸ்டீல் பாட்டிகள் எவ்வளவு நேரம் ஆனாலும் தண்ணீரின் தரத்தை அப்படியே வைத்திருக்கும். எனவே சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக கருத்தப்படும் ஸ்டைன்லஸ் ஸ்டீல் (stainless steel) பாட்டில்களை பயன்படுத்த வேண்டும்.