மேலும் அறிய

World Diabetes Day:ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை;இந்தியாவில் அதிகரிக்கும் நீரிழிவு பாதிப்பு - எச்சரிக்கும் ஆய்வு!

World Diabetes Day Lancet study:இந்தியாவில் நீரிழிவு பாதிப்புகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதாக லான்சட் ஆய்வு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் 82 கோடி பேர் நீரிழிவு (diabetes) நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக லான்சட் இதழில் (Lancet journal ) வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களின் உலக அளவிலான எண்ணிக்கையில் கால் பங்கு இந்தியர்கள் என அதாவது 21.2 கோடி பேர் என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 அன்று  உலக நீரிழிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. தி லான்செட் ஜர்னல் வெளியிட்ட ஆய்வின் முடிவுகளின்படி, உலக அளவில் 82 கோடி பேருக்கு இருக்கும் நீரிழிவு பாதிப்பில் கால் பங்கு மக்கள் இந்தியாவில் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் கடந்த 1990 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 34 ஆண்டுகளில் (2024) நான்கு மடங்கு நீரிழிவு பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஆய்வு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. 

1990 மற்றும் 2022 க்கு இடையில், பல வளரும் நாடுகளில் நீரிழிவு பாதிப்பு ஏற்பட்டவர்கள் சிகிச்சை பெறும் விகிதம் தேக்கமடைந்துள்ளது. அதோடு, பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர் 2022-ல் சிகிச்சை பெறவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  2022-ம் ஆண்டில் மூன்றில் ஒரு பங்கு நீரிழிவு பாதிக்கப்பட்டோர் சிகிச்சை ஏதும் இல்லாமல் வாழ்ந்துள்ளனர். 

உலக நாடுகள் விவரம்:

உலக அளவில் நீர்ழிவு பாதிக்கப்பட்டுள்ள 82 கோடி பேரில்  21.2 கோடி பேர் இந்தியாவிலும், 14.8 கோடி பேர் சீனாவிலும் உள்ளனர்.  அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் பிரேசில் நாடுகளில் முறையே மேலும் 4.2 கோடி, 3.6 கோடி மற்றும் 2.2 கோடி பேர் வாழ்ந்து வருகின்றனர். 

"குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் சிகிச்சை அளிக்கப்படாமல் / பெறாமல் நீழிழிவு பாதிப்பு உடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து  எங்கள் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் பெரும்பாலானோருக்கு நீரிழிவு நோய் இருப்பதே பலரும் கண்டறியாமல் இருக்கின்றனர். சிகிச்சை வசதி கிடைக்காத நாடுகளில் நீரிழிவு பாதிப்பு அதிகரித்து வருவதை ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.” என இந்த ஆராய்ச்சியின் கட்டுரை ஆசிரியரான Jean Claude Mbanya( University of Yaounde) தெரிவித்தார்.உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து  NCD Risk Factor Collaboration (NCD-RisC) மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 200 நாடுகளில் தொற்று அல்லாத நோய்களுக்கான ஆபத்து காரணிகள் பற்றிய விரிவான தரவுகளை வழங்கும் நோக்கத்தில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. 

கண்டறியப்படாத நீரிழிவு, நீரிழிவு விழித்திரை பாதிப்பு போன்ற சிக்கல்களுடன் தொடர்பு இருக்கிறது. அதிக அளவு இரத்த சர்க்கரை கண் விழித்திரையை சேதப்படுத்தும்.  இது பார்வை இழப்பு மற்றும் குறைபாடு ஏற்படும் காரணமாக அமையும். 

இந்தியாவில் பாதிப்பு இரண்டு மடங்கு அதிகரிப்பு:

ஆய்வின் தகவலின்படி, உலகளாவிய நீரிழிவு விகிதம் 1990-2022 ஆண்டிற்கு இடையில் ஆண்களில் 6.8 சதவீதத்திலிருந்து 14.3 சதவீதமாகவும்  அதே நேரத்தில் பெண்களில்  6.9 சதவீதத்திலிருந்து 13.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில், 1990ல் பெண்களில் நீரிழிவு பாதிப்பு விகிதம் 11.9-ல்  இருந்து 2022-ல் 24 சதவீதமாக உயர்ந்துள்ளது, ஆண்களில் இது 11.3 சதவீதத்தில் இருந்து 21.4 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று ஆய்வு கூறுகிறது. மறுபுறம், இந்த காலகட்டத்தில் சிகிச்சை கவரேஜ் பெண்களில் 21.6 சதவீதத்திலிருந்து 27.8 சதவீதமாகவும், ஆண்களில் 25.3 சதவீதத்திலிருந்து 29.3 சதவீதமாகவும் மட்டுமே அதிகரித்துள்ளது. நீரிழிவு பாதிப்பு கண்டறிவது மற்றும் சிகிச்சை பெறுவதன் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. 

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம், சிகிச்சை பெறுவதில் உள்ள சிக்கல், சமூக-பொருளாதாரக் கட்டுப்பாடுகள், விழிப்புணர்வு இல்லாமை ஆகிய காரணங்களால் நீரிழிவு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாகவும் அதற்கேற்ற அளவில் சிகிச்சை வசதிகள் இல்லை என்பதும் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. 

இந்தியாவில் நீரிழிவு பாதிப்புகள் அதிகரிப்பது தொடர்பாக நிபுணர்கள் தெரிவிக்கையில், இந்தியாவில் குறைந்த வருமானம் பகுதிகளில் ஆரோக்கியமற்ற உணவுகள் கிடைப்பதை குறைப்பது, தடை செய்வது, ஆரோக்கியமான உணவுகளை மக்கள் வாங்கக்கூடிய விலைக்கு கிடைக்க செய்வது, பள்ளிகளில் வழங்கப்படும் உணவுகளில் நீரிழிவு பாதிப்பை தடுப்பதற்கான டயட் முறையை பின்பற்றுவது, பொதுமக்கள் பாதுகாப்பாக உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்ய பூங்காக்கள், உடற்பயிற்சி மையங்களை உருவாக்குவது, இலவசமாக பயன்படுத்த அனுமதிப்பது ஆகியவற்றை அரசு மேற்கொள்ள வேண்டும். ஆரோக்கியமற்ற உணவுமுறை, வாழ்வியல் முறைகள், உடற்பயிற்சியின்மை, உடல் பருமன் ஆகிய காரணங்களால் நீரிழிவு பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக,இளைஞர்களிடம் நீரிழிவு பாதிப்பு, நீரிழிவு பாதிப்புக்கு முந்தைய நிலை ஆகியவை ஏற்படுவது சமீக காலத்தில் அதிகரித்துள்ளது.” என்று விளக்குகிறார். 

மேலும் வாசிக்க..

"இது தேசிய பிரச்னை.. கட்டுப்படுத்தனும்" நீரிழிவு நோய் குறித்து மத்திய அமைச்சர் கருத்து!

போதுமான அளவு தூக்கம் இல்லையா? டைப்-2 நீரிழிவு பாதிப்பு ஏற்படும் அபாயம் - பெண்களை எச்சரிக்கும் புதிய ஆய்வு!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ajith:  ”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!
Ajith: ”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!
TN CAG Report: அதிர்ச்சியளிக்கும் சிஏஜி அறிக்கை.! தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கடன் 3 மடங்கு அதிகரிப்பு
TN CAG Report: அதிர்ச்சியளிக்கும் சிஏஜி அறிக்கை.! தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கடன் 3 மடங்கு அதிகரிப்பு
வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி மரணம்.. ராணிப்பேட்டையில் பரபரப்பு!
வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி மரணம்.. ராணிப்பேட்டையில் பரபரப்பு!
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ajith:  ”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!
Ajith: ”கடவுளே அஜித்தேனு கூப்பிடாதிங்க” உங்க குடும்பத்தை கவனிங்க: அஜித் அறிக்கை.!
TN CAG Report: அதிர்ச்சியளிக்கும் சிஏஜி அறிக்கை.! தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கடன் 3 மடங்கு அதிகரிப்பு
TN CAG Report: அதிர்ச்சியளிக்கும் சிஏஜி அறிக்கை.! தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கடன் 3 மடங்கு அதிகரிப்பு
வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி மரணம்.. ராணிப்பேட்டையில் பரபரப்பு!
வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி மரணம்.. ராணிப்பேட்டையில் பரபரப்பு!
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
TN Weather: புயல் உருவாகுமா, உருவாகாதா?- தெளிவாக சொன்ன வானிலை மைய இயக்குநர்
"எங்களுக்கும் அதானிக்கும் தொடர்பு இல்ல" அடித்து சொன்ன துணை முதல்வர் உதயநிதி!
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; ’’திமுகவின் துரோகத்துக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும்’’- ராமதாஸ்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; ’’திமுகவின் துரோகத்துக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும்’’- ராமதாஸ்
Chennai Power Shutdown: சென்னையில் நாளை (11.12.2024) எங்கெல்லாம் ‘பவர் கட்’ - முழு தகவல் உள்ளே
சென்னையில் நாளை (11.12.2024) எங்கெல்லாம் ‘பவர் கட்’ - முழு தகவல் உள்ளே
Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம்; வீட்டில் தீபம் ஏற்ற சில டிப்ஸ் இதோ!
Karthigai Deepam 2024: கார்த்திகை தீபம்; வீட்டில் தீபம் ஏற்ற சில டிப்ஸ் இதோ!
Embed widget