(Source: ECI/ABP News/ABP Majha)
Watch Video: சுற்றுலாப் பயணிகளிடமிருந்து குட்டியை பாதுகாக்கும் தாய் யானை! - வைரல் வீடியோ!
தேசிய பூங்காவில் பார்வையாளர்களுக்கு அருகில் சுற்றித் திரியாமல் தனது குட்டியை தாய் யானை பாதுகாக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது
ஒரு தாய் தன் குழந்தை மீது வைத்திருக்கும் அன்பு ஈடு இணையற்றது, மேலும் தன் சந்ததிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய தாய் தன் எல்லைக்கு அப்பாற்பட்டு செல்வாள். இந்த உணர்வு மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா உயிரினங்களிலும் உள்ள விலங்குகளுக்கும் ஒரே மாதிரியாக இருக்கிறது. அந்த வகையில் தேசிய பூங்காவில் பார்வையாளர்களுக்கு அருகில் சுற்றித் திரியாமல் தனது குட்டியை தாய் யானை பாதுகாக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.இப்போது வைரலாகும் வீடியோவில், தாய் யானையும் குட்டியும் சாலையை கடக்கும் காட்சியை சுற்றுலா பயணிகள் பார்க்க காத்திருந்தனர். அவர்கள் குட்டியின் கவனத்தை திசை திருப்பவும் அந்தக் குட்டி சுற்றுலாப் பயணிகளை நோக்கி ஓடுகிறது, ஆனால் சுற்றுலாப் பயணிகளைக் காணும் இடத்திற்குச் செல்லாமல் அம்மாவால் உடனே அது தடுக்கப்பட்டது.
Mother elephant stops its child from approaching the tourists.. pic.twitter.com/ASruHsJKnn
— Buitengebieden (@buitengebieden) September 3, 2022
அந்த யானை ஒரு தாயின் பொறுப்பில் இருந்து தன் குழந்தையை பார்வையாளர்களிடமிருந்து வெகுவிரைவாக இழுத்து, தன் தும்பிக்கையால் பாதுகாக்கிறது. அந்த வீடியோவை ட்விட்டரில் ப்யூடெங்கேபிடன் என்ற தளத்தை நிர்வகிப்பவர்கள் பகிர்ந்துள்ளனர். "தாய் யானை தனது குழந்தையை சுற்றுலாப் பயணிகளை நெருங்க விடாமல் தடுக்கிறது" என்று அந்த வீடியோவில் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ 1.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் டன் கருத்துகளையும் பெற்றுள்ளது. "அவர்கள் தங்கள் வாழ்க்கையை சாதாரணமாகக் கழித்து வாழ்கிறார்கள். யானைகள் உண்மையில் புத்திசாலிகள் என்பதால் குட்டி யானை மனிதர்களை முதன்முறையாகப் பார்த்த ஆர்வத்தில் அப்படிச் செய்திருக்கலாம். ஆனால் அனுபவம் வாய்ந்த பெரிய யானை குட்டியைத் தடுக்கிறது. ஏனென்றால் இந்த குட்டியை விட இந்த உலகத்தைப் பற்றி அந்த யானை அதிகம் பார்த்திருக்கிறது. "ஒரு பயனர் கருத்து தெரிவித்திருந்தார்.
முன்னதாக, மற்றொரு செய்தியில் நீலகிரி மாவட்டத்தில் முதுலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி அருகே சிங்காரா வனச்சரகப் பகுதி உள்ளது. இப்பகுதியில் மாவனல்லா என்ற கிராமம் உள்ளது. உதகை, மசினகுடி, கூடலூர் பகுதிகளில் முதல் கன மழை பெய்து வந்தது. இதனால் மசினகுடி பகுதியில் பெய்த மழையில் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாவனல்லா பகுதியில் உள்ள சீகூரல்லா ஆற்றில் ஒரு குட்டி யானை ஆற்றில் அடித்து வரப்பட்டுள்ளது. இதனைக் கண்ட அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். இதன் பேரில் விரைந்து சென்ற வனத்துறையினர் குட்டி யானையை பத்திரமாக மீட்டு, ஆற்றில் இருந்து வெளியே எடுத்தனர். குட்டி யானை பிறந்து சுமார் ஒரு மாத காலம் இருக்கலாம் எனவும், யானைகள் கூட்டமாக ஆற்றைக் கடந்த போது குட்டி யானை ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இருக்கலாம் என தெரிந்தது. இதையடுத்து வனத்துறையினர் குட்டி யானையை சடாபட்டி வனப் பகுதிக்கு எடுத்துச் சென்று தாய் காட்டு யானையிடன் சேர்க்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். குட்டி யானையின் காட்டு யானைக் கூட்டத்தை கண்டறிந்து, அவற்றிடம் குட்டி யானையை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளில் வனத்துறையினர் ஈடுபட்டனர். வனத்துறையினர் 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, சிங்காரா வனப்பகுதியில் தாய் யானையுடன் குட்டி யானையை சேர்த்து வைத்தனர். வேட்டை தடுப்பு காவலர்களிடம் இருந்து தாய் யானையை கண்டதும் ஓடிச் சென்று குட்டி யானை அதனுடன் சேர்ந்தது. குட்டி யானையை தாய் யானை அரவணைத்து வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்றது.