Video Viral : ’அணில்கள், குருவிகள்தான் என் ஃப்ரெண்ட்ஸ்....’ : நெட்டிசன்கள் போற்றி நெகிழும் வீடியோ..
அணில்கள் தொடங்கி சிறு சிறு குருவிகள் வரை பாதுகாப்பாக உணர்ந்து, இப்பெண்ணின் அருகில் வந்து அவரது கையிலிருந்து உணவு பெற்றுக் கொள்கின்றன.
ஸ்நோ ஒய்ட், சிண்ட்ரெல்லா தொடங்கி ஆங்கிலப் படங்களிலும், அனிமேஷன் கதைகளிலும் விலங்குகள், பறவைகளுடன் பேசும் Animal whisperer கதாபாத்திரங்கள் பலவற்றை நாம் பார்த்திருப்போம்.
வாழும் ஸ்நோ ஒய்ட்
ஆனால், நேரில் இதேபோல் விலங்குகளுடன் பேசியும் பழகியும் உணவளித்தும் மகிழும் பெண் ஒருவரின் வீடியோ தற்போது இணையத்தில் ஹிட் அடித்துள்ளது. அவரை வாழும் இளவரசி என்றும் புகழ்கிறார்கள் நெட்டிசன்கள்
நெட்டிசன்கள் ஆச்சரியம்!
மொரிசா ஷ்வார்ட்ஸ் எனும் பெண் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், பார்க் ஒன்றில் அமர்ந்து, அங்கிருக்கும் பல அணில்களுக்கும், பறவைகளுக்கும் பருப்பு வகை உணவுகளைக் கொடுத்து அடையாளம் தெரியாத அப்பெண் மகிழ்கிறார். இந்நிலையில் அடையாளம் தெரியாத இப்பெண் இச்செயலால் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க: watch video: "கம் ஆன் மை சன் “ அம்மாவை பார்த்து உடற்பயிற்சி செய்யும் ஐந்து மாத குழந்தை! - வைரல் வீடியோ!
பிரபஞ்சத்தில் நிகழும் அழகான மாற்றங்கள்.. பூமியில் இருந்தே காணலாம்! 2022 பட்டியல் இதோ!
இந்த வீடியோவில் அணில்கள் தொடங்கி சிறு சிறு குருவிகள் வரை இப்பெண்ணிடம் பாதுகாப்பாக உணர்ந்து, அருகில் வந்து அவரது கையிலிருந்து உணவு பெற்றுக் கொள்கின்றன.
A real life show white!pic.twitter.com/JU8WSLd1oY
— Morissa Schwartz (Dr. Rissy) (@MorissaSchwartz) May 31, 2022
பிரபல டிஸ்னி கதாபாத்திரமான ’ஸ்நோ ஒய்ட்’ உணவளிப்பது போல் இப்பெண்ணின் செயல் இருப்பதாக நெட்டிசன்கள் சிலாகித்து வரும் நிலையில், இந்த வீடியோ, ஒரு லட்சத்து 38 ஆயிரம் வியூஸ் தாண்டி இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.
இந்நிலையில், ஸ்நோ ஒய்ட் பாடலுடன் இப்பெண்ணின் வீடியோவை எடிட் செய்தும் நெட்டிசன்கள் வீடியோ பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: Watch Video: சிங்கத்தை அடித்து விரட்டும் காட்டெருமைக் கூட்டம்! கன்றைக் காக்கும் பாசப் போராட்டம்… வைரலாகும் வீடியோ!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்