watch video: "கம் ஆன் மை சன் “ அம்மாவை பார்த்து உடற்பயிற்சி செய்யும் ஐந்து மாத குழந்தை! - வைரல் வீடியோ!
அதாவது முழங்கையை தரையில் ஊன்றி வயிற்றுப்பகுதி தரையில் படாமல் அவரது அம்மா மிச்செல் பிளாங்ஸ் என்னும் உடற்பயிற்சியை செய்கிறார்.
குழந்தைகள் எப்போதுமே தங்களது பெற்றோரைப்போலவே வளர விரும்புகிறார்கள். குறிப்பாக அம்மாவுடன் அவர்கள் அதிக நேரம் செலவிடுவதால் அவர்களின் பழக்க வழங்கள் தாயின் சாயலை ஒத்திருக்கும். சமூக வலைத்தளங்களில் பேரண்ட்ஸ் கோல் என பதிவேற்றும் பல வீடியோக்களை பார்த்திருக்கிறோம் . அப்படித்தான் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ஐந்து மாத ஆண் குழந்தை . அவர் பெயர் ஆஸ்டின் . அவரது அம்மா மிச்செல் பிளாங்ஸ் என்னும் உடற்பயிற்சியை செய்கிறார். அதாவது முழங்கையை தரையில் ஊன்றி வயிற்றுப்பகுதி தரையில் படாமல் கை மற்றும் கால் விரல்களால் உடலை பேலன்ஸ் செய்வதுதான் அந்த பயிற்சி. தனது தாய் வழக்கமாக செய்யும் உடற்பயிற்சியை பார்த்த ஐந்து மாத குழந்தையான ஆஸ்டின் , அதே போல செய்து அசத்துகிறார். இந்த வீடியோவை பகிர்ந்த தாய் “ அம்மாவைப் போல வலிமையானவர்... உன்னை நினைத்து பெருமையாக உள்ளது “ என குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த வீடியோ இதோ :
View this post on Instagram
ஒரு வாரத்திற்கு முன்பு பகிரப்பட்ட இந்த வீடியோ 24 மில்லியன் பார்வைகளையும் 14,600 கமெண்ட்ஸுகளையும் பெற்றுள்ளது. @fitstagram.michelle என்னும் அந்த இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டில் 42,500 க்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ் உள்ளனர். மிச்செல் தற்போது அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள நார்வாக் பகுதியில் வசித்து வருகிறார். மிச்செல் மற்றும் ஆஸ்டினின் இந்த வீடியோவை பார்த்த பலரும் ஐந்து மாத குழந்தையில் மன வலிமையை பாராட்டி வருகின்றனர்
View this post on Instagram