Watch Video : ஆனாலும் அன்பு மாறாதது.. உருகவைத்த வீடியோ.. கண்ணீர் வடித்த நெட்டிசன்ஸ்
வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும் ஆனாலும் அன்பு மாறாதது.. என்று சினிமா பாடல் வரியில் பாடியிருப்போம். ஆனால் அது உண்மை என்பதை நிரூபித்திருக்கிறார்கள் ஒரு வயதான தம்பதி.
வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும் ஆனாலும் அன்பு மாறாதது.. என்று சினிமா பாடல் வரியில் பாடியிருப்போம். ஆனால் அது உண்மை என்பதை நிரூபித்திருக்கிறார்கள் ஒரு வயதான தம்பதி.
குட் நியூஸ் மூவ்மென்ட் என்றொரு இன்ஸ்டாகிராம் பக்கம் இருக்கிறது. எதிர்மறையான செய்திகளுக்குப் பஞ்சமில்லை. களவு, கொள்ளை, கொலை, பாலியல் பலாத்காரம், குழந்தைகள் வன்புணர்வு என்று பல்வேறு வன்முறைச் சம்பவங்களும் இயற்கைச் சீற்றங்களும் போர்கள், பட்டினி பற்றிய செய்தியும் செய்தித்தாளில் நிறைந்து கிடக்கும். ஆனால் நேர்மறையான சிந்தனையை விதைக்கும் செய்திகள் மிகமிக அரிதாகிவிட்டது. அப்படியான அத்திப் பூத்த செய்திகளைக் கொண்டாடும் வகையில் குட் நியூஸ் மூவ்மென்ட் என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் இயங்குகிறது.
அதில் தான் இந்த அன்புக் கதை பகிரப்பட்டுள்ளது. அதில் தனது 70 வயது கணவர் 70 நாட்களுக்குப் பின்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் தருணத்தில் கணவருக்காக அவர் பாட்டுப்பாடுகிறார். அந்தப் பாடலைக் கேட்கும் அந்த அன்புக் கணவர் நடுங்கும் கைகளை மெள்ள மெள்ள உயர்த்தி மனைவியின் கண்ணத்தை வருடுகிறார். அந்தப் பெண் போர்ச்சுகீசிய மொழிப் பாடலான கோமோ இ கிராண்ட் என்ற பாடலை பாடுகிறார்.
பார்ப்பதற்கே மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கும் காட்சிகளாக அமைந்துள்ளது. சினிமாவைப் போலவே காதல் அதில் வருவதைப் போலவே பிரமாண்ட கல்யாணம், ஃபோட்டோ ஷூட் எல்லாமே ஓகே தான். பிடிக்காவிட்டால் பிரிந்து வாழ்வதும் கூட சுதந்திரம் தான். ஆனால் அந்தப் பிடிக்கவில்லை என்ற காரணம் பல நேரங்களில் கேட்கவே அபத்தமாக இருக்கின்றன. இன்று குடும்பநல நீதிமன்றங்களில் நிற்கும் க்யூவைப் பார்த்தால் எத்தனை பிரிவுகள் நிச்சயமாக நடக்கப்பட வேண்டியவை என்பது எத்தனைப் பிரிவுகள் அவசர கதி காதல், அவசர கதி திருமணங்களால் விளைந்தவை என்பதும் தெரியும்.
இதோ அந்த வீடியோ:
View this post on Instagram