உதடு பெருசா இருந்தால் செக்ஸ் இப்படி இருக்குமா? இந்த எக்ஸ்பர்ட் சொல்றதை கேளுங்க..
உதட்டின் அமைப்பு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக மாறுபடும், சிலருக்கு சிறிய உதடு, சிலருக்குப் பெரிய உதடும், சிலருக்கு மேல் அன்னம் மட்டும் பெரிதாகவோ...
கொரோனா வைரஸ் குறித்து ஒரு பக்கம் பல்வேறு ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வந்தாலும் மற்றொரு பக்கம் கலகலப்பான சில ஆராய்ச்சிகளிலும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் செக்ஸில் அர்காஸம் பற்றிய புதிய ஆராய்ச்சியை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் உதடின் அமைப்பைப் பொறுத்து பெண்களின் செக்ஸ் ஆர்வம் குறிப்பாக அர்காஸம்/உச்சம் அடைவதில் மாற்றம் நிகழும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
உதட்டின் அமைப்பு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக மாறுபடும், சிலருக்கு சிறிய உதடு, சிலருக்குப் பெரிய உதடும், சிலருக்கு மேல் அன்னம் மட்டும் பெரிதாகவோ அல்லது கீழ் அன்னம் பெரிதாகவோ அல்லது எதுவும் இல்லாமல் தட்டையாகவோ உதடு காணப்படும். இது ஒருவருடைய செக்ஸ் வாழ்க்கையைப் பற்றி அறிய உதவுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த அடிப்படையில் உதட்டின் குறிப்பிட்ட ஒரு பகுதி எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து அவர் உச்சம் அடையும் தன்மை மாறுபடும் என கணித்துள்ளனர். மூக்குக்கு மேல், உதட்டின் கீழ் இருக்கும் பகுதி ப்லிட்ரியம் எனப்படும். ப்லிட்ரியத்துக்குக் கீழே இருக்கும் உதட்டுப் பகுதிக்கும் ஒரு பெயர் உண்டு. அதன் பெயர் ட்யூபர்செல். இந்த ட்யூபர்செல் பகுதி உடலுறவில் முக்கியப் பங்கு வகிப்பதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். உதட்டின் மேல் பகுதியில் இருக்கும் ட்யூபர் செல் மேல் உதட்டு ட்யூபர்செல் எனவும் கீழ் பகுதியில் இருப்பது கீழ் உதட்டு ட்யூபர்செல் எனவும் கூறப்படுகிறது.
பெரிதாக இருக்கும் நிலையில் உடலுறவில் கூடுதல் ஆர்வம் இருக்கும் எனவும் மேலும் அவர்கள் செக்ஸில் அதிகம் உச்சமடைவார்கள் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதற்கான காரணம் என்ன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என்றாலும் இது உண்மை என உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. சுமார் 1000 பெண்களில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் இந்தத் தகவலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.