மேலும் அறிய

Health Tips: செரிமான மண்டல ஆரோக்கியத்திற்கு ஆயுர்வேதம் சொல்லும் டிப்ஸ் இதோ!

Health Tips: சாப்பிட்ட உணவு செரிமான ஆகவில்லையெனில் அடுத்தவேளை நிச்சயம் எந்த உணவையும் சாப்பிடக் கூடாது என்கிறது ஆயுவேதம்.

மாறிவரும் வாழ்க்கை சூழல், உணவுப் பழக்கம் ஆகியவற்றின் காரணமாக நாம் செரிமான கோளாறுகளை எதிர்கொள்வது வாய்ப்பு அதிகமாகிவிட்டது. 

செரிமான கோளாறு:

நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிடுவதால் வயிற்றுப்புண், வயிற்றுப் பொருமல், மலச்சிக்கல் உள்ளிட்ட பல பிரச்னைகளை ஏற்படுத்திவிடும். செரிமான மண்டலம் சரியாக வேலை செய்யவில்லை என்றால் பல சிக்கல் ஏற்படும். வயிறு உப்பசம், எப்போதும் வயிறு நிரம்ப சாப்பிட்டது போன்று உணர்வு போன்றவை இருக்கும். இதற்கு மருந்துகளை நாடாமல் வீட்டில் இருக்கும் மூலிகைகளைப் பயன்படுத்தலாம் என்று சொல்கிறது ஆயுர்வேதம். ஆனால், செரிமான பிரச்ச்னைகள் தொடர்ந்து நீடித்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. வீட்டு மூலிகைகள் செரிமான பிரச்சனையை தீர்க்க உதவும். ஆனால், நாள்பட்ட சிக்கல்களுக்கு எந்தவித பலனையும் தராது. 

சாப்பிட்ட உணவு செரிமான ஆகவில்லையெனில் அடுத்தவேளை நிச்சயம் எந்த உணவையும் சாப்பிடக் கூடாது என்கிறது ஆயுவேதம். அவசியமெனில் கொஞ்சமாக சாப்பிடலாம்.

புதினா 

புதினா இலைகள் செரிமான கோளாறுகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும். இளஞ்சூடான தண்ணீரில் புதினாவுடன் எலுமிச்சை சேர்த்து அருந்தலாம். 

இஞ்சி

இஞ்சி செரிமான மண்டலத்தை சீராக வைத்துகொள்ளும் பண்புகளை கொண்டிருப்பத்தை நாம் அறிந்ததே. தேன் கலந்து இஞ்சி டீ அருந்தலாம். தேனில் இஞ்சியை ஊற வைத்து தினமும் ஒருவேளை  சாப்பிடலாம். 

கெமோமைல்

கெமோமைல் டீ வயிறு கோளாறுகளுக்கு மிகவும் நல்லது. 

வெந்தயம்

செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்க வெந்தயம் சிறந்த தேர்வு. வெந்தயப் பொடி அல்லது தண்ணீர் ஆகியவற்றை சாப்பிடலாம். 

டீடாக்ஸ் தண்ணீர்

புதினா, எலுமிச்சை, வெள்ளரி இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் தண்ணீரை வடிகட்டி குடிப்பது, உங்கள் ஆரோக்கியத்தை வெகுவாக மேம்படுத்துவதோடு, அழகான சருமத்தையும் உங்களுக்கு வழங்கும்.

டீடாக்ஸ் தண்ணீர் என்றால் வெள்ளரிக்காய், எலுமிச்சை மற்றும் புதினா தண்ணீர் போன்றவைதான்.

இவற்றை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் தண்ணீரை வடிகட்டி குடிப்பது, உங்கள் ஆரோக்கியத்தை வெகுவாக மேம்படுத்துவதோடு, அழகான சருமத்தையும் உங்களுக்கு வழங்கும்.

 ஹைட்ரேட்டிங் டிடாக்ஸ் தண்ணீரை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு கிடைக்கும் அற்புதமான நன்மைகள் இதோ

  • வெள்ளரியில் தோராயமாக 95% நீர்ச்சத்து உள்ளது, இது உங்கள் உடலில் நீர் வற்றாமல் வைத்திருக்கும்
  • இந்த நச்சு நீர் செரிமானத்தை மேம்படுத்தி, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, கொழுப்பு மற்றும் கலோரிகளை எரிக்க உதவுவதன் மூலம் எடை இழப்பை ஊக்குவிக்கிறது
  • காலையில் இந்த தண்ணீரை முதலில் குடிப்பது செரிமானத்தை தூண்டுகிறது மற்றும் வேகப்படுத்துகிறது, இதன் விளைவாக ஒரு வலுவான செரிமான அமைப்பு மற்றும் எளிய குடல் இயக்கம் ஏற்படுகிறது. மலச்சிக்கல் நீங்கி, சீரான தன்மைக்கு உதவுகிறது.
  • இந்த நீர் உங்கள் சருமத்தின் தோற்றத்தை மேம்படுத்தி அசுத்தங்களை வெளியேற்றி உங்கள் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கிறது.
  • இந்த டீடாக்ஸ் தண்ணீர், வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன.

புதினா சாறு தயாரிப்பது எப்படி?

இந்த மின்ட் பானத்தை தயாரிப்பது எளிது. சில புதினா இலைகளை எடுத்து நன்றாக அலசிக் கொள்ளவும். அதை ஜூஸர் மிக்சரில் போட்டு வெல்லம், எலுமிச்சை சாறு, சீரகத் தூள், பிங்க் சால்ட் எல்லாவற்றையும் சேர்த்து ஹை ஸ்பீடில் போட்டு அரைக்கவும். பின்னர் ஐஸ் கட்டிகள் சேர்த்து பரிமாறவும்.

புதினா இலையில் தயாரிக்கப்படும் டீ அற்புதமான ஒரு பானமாகும். சோகமான மனநிலை, வயிறு கோளாறு ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. ஒவ்வாமையைக் குணப்படுத்தும் மிக அதிகமான ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்புத்திறன் உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“கத்திக்குத்துப்பட்ட மருத்துவர் பாலாஜி யார், அவர் எப்படி?” வெளியான புதிய தகவல்..!
“கத்திக்குத்துப்பட்ட மருத்துவர் பாலாஜி யார், அவர் எப்படி?” வெளியான புதிய தகவல்..!
"கத்திக்குத்து நடந்த இடத்திற்கே சென்ற துணை முதல்வர்” மருத்துவமனையில் உதயநிதி அதிரடி ஆய்வு..!
Doctors Strike: அச்சச்சோ! தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்ட்ரைக் - பகீர் கிளப்பும் பின்னணி!
Doctors Strike: அச்சச்சோ! தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்ட்ரைக் - பகீர் கிளப்பும் பின்னணி!
Exclusive : “அதிமுக, தவெகவை பாஜக கூட்டணியில் இணைக்க முயற்சி?” ஜி.கே.வாசன் பிரத்யேக பேட்டி..!
Exclusive : “அதிமுக, தவெகவை பாஜக கூட்டணியில் இணைக்க முயற்சி?” ஜி.கே.வாசன் பிரத்யேக பேட்டி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Woman Murder:  சிறுநீர் கழித்த பெண் வியாபாரி! வெட்டிக் கொன்ற ரவுடி! சென்னையில் பகீர்!Seeman NTK : சீமானுக்கு ஆப்புவைக்கும் ஆடியோ! உளவுத்துறைக்கு அதிரடி டாஸ்க்! சிக்கலில் நாம் தமிழர்Guindy doctor stabbed : அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து! HOSPITAL-ல் பகீர்! வட மாநிலத்தவர் கொடூரம்Hosur Fake Doctors : ’’10th படிச்ச நீ டாக்டரா?’’ டோஸ் விட்ட அதிகாரிகள்! வசமாய் சிக்கிய பெண்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“கத்திக்குத்துப்பட்ட மருத்துவர் பாலாஜி யார், அவர் எப்படி?” வெளியான புதிய தகவல்..!
“கத்திக்குத்துப்பட்ட மருத்துவர் பாலாஜி யார், அவர் எப்படி?” வெளியான புதிய தகவல்..!
"கத்திக்குத்து நடந்த இடத்திற்கே சென்ற துணை முதல்வர்” மருத்துவமனையில் உதயநிதி அதிரடி ஆய்வு..!
Doctors Strike: அச்சச்சோ! தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்ட்ரைக் - பகீர் கிளப்பும் பின்னணி!
Doctors Strike: அச்சச்சோ! தமிழ்நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்ட்ரைக் - பகீர் கிளப்பும் பின்னணி!
Exclusive : “அதிமுக, தவெகவை பாஜக கூட்டணியில் இணைக்க முயற்சி?” ஜி.கே.வாசன் பிரத்யேக பேட்டி..!
Exclusive : “அதிமுக, தவெகவை பாஜக கூட்டணியில் இணைக்க முயற்சி?” ஜி.கே.வாசன் பிரத்யேக பேட்டி..!
Breaking News LIVE 13 Nov : ஏர் இந்தியா - விஸ்தாரா விமான நிறுவனங்கள் இணைப்பு என தகவல்
Breaking News LIVE 13 Nov : ஏர் இந்தியா - விஸ்தாரா விமான நிறுவனங்கள் இணைப்பு என தகவல்
Jharkhand Polls: ஜார்ஜ்கண்டில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு, 1.37 கோடி வாக்காளர்கள், பிரியங்கா வசமாகுமா வயநாடு?
Jharkhand Polls: ஜார்ஜ்கண்டில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு, 1.37 கோடி வாக்காளர்கள், பிரியங்கா வசமாகுமா வயநாடு?
KL Rahul : சிஎஸ்கேவில் விளையாட ரெடி.. ராகுல் கொடுத்த மறைமுக ஹிண்ட்
KL Rahul : சிஎஸ்கேவில் விளையாட ரெடி.. ராகுல் கொடுத்த மறைமுக ஹிண்ட்
சிவ பக்தர்களே!
சிவ பக்தர்களே! "குழந்தை வரம் முதல் மன நிம்மதி வரை" ஐப்பசி அன்னாபிஷேகத்தில் இத்தனை நன்மையா?
Embed widget