இஞ்சி சூப் குடிச்சு இருக்கீங்களா ? ட்ரை பண்ணி பாருங்கள் அந்த பிரச்சனையே இருக்காது!
அன்றாட உணவில் சேர்த்து கொள்வது, உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும். இஞ்சி துவையல், கஷாயம் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. இந்த இஞ்சி சூப் ட்ரை பண்ணி பாருங்கள்.
இஞ்சி மண்ணிற்கு அடியில் விளையும் ஒரு தங்கம் என்று கூட சொல்லலாம். இதில் ஏராளமா நன்மைகள் இருக்கிறது. இதை அன்றாட உணவில் சேர்த்து கொள்வது, உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும். இஞ்சி துவையல், கஷாயம் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. இந்த இஞ்சி சூப் ட்ரை பண்ணி பாருங்கள்.
இஞ்சி சூப் செய்ய தேவையான பொருள்கள்
இஞ்சி - 1 பெரிய துண்டு
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 1
சின்ன வெங்காயம் - 5
காய்ந்த மிளகாய் - 2
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தக்காளி - 1 நறுக்கியது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
சீரகம், கறிவேப்பிலை – தாளிப்பதற்கு
செய்முறை
- இஞ்சியை தோல் நீக்கி கொள்ளவும்.
- காய்ந்த மிளகாயை அடுப்பில் சுட்டு எடுத்து வைத்து கொள்ளவும்.
- ஒரு உரலில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் , சுட்ட மிளகாய், மிளகு, சீரகம், சின்னவெங்காயம், தக்காளி, ஆகியவற்றை அரைத்து எடுத்து கொள்ளவும். அல்லது மிஸ்க்சியில் இவை அனைத்தையும் சேர்த்து அரைத்து கொள்ளலாம்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயம் ஆகியவை போட்டு தாளித்து, அரைத்து வாய்த்த கலவையை கடாயில் சேர்க்கவும்.
- இந்த அரைத்த கலவையை நன்றாக வதக்கவும்.
- இந்த கலவை நன்றாக வதங்கியதும், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- நன்றாக கொதித்த பிறகு அடுப்பில் இருந்து எடுத்து, கொத்தமல்லி இலைகளை மேலே தூவி, பரிமாறலாம்.
இஞ்சி சூப் தயார்
இஞ்சி சூப் எடுத்து கொள்வதன் பயன்கள்
குமட்டல் வாந்தி போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கும்.
அஜீரணம் பிரச்சனை இருப்பவர்கள் இஞ்சி சூப் எடுத்து கொள்வதால், செரிமான பிரச்சனை நீங்கும்.
தலைசுற்றல் மயக்கம் இருந்தால் இந்த இஞ்சி சூப் சிறந்த மருந்தாக இருக்கும்.
கர்ப்பிணி பெண்களுக்கு முதல் மூன்று மாதத்தில் வரும் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைக்கு சிறந்த நிவாரணியாக இருக்கும்.
இஞ்சி உடல் எடையை குறைக்க பயன்படுத்தும். இது உடலில் சேர்ந்து இருக்கும் ஊளை சதையை குறைக்கும்.
எலும்பு மூட்டு வலிகள் , ஆர்தரைடிஸ் பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணியாக இருக்கும்.
மாதவிடாய் நேரத்தில் வரும் வயிறு வலியை குறைக்க இஞ்சி சூப் எடுத்து கொள்ளலாம்