World Suicide Prevention Day: எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல.. உலக தற்கொலை தடுப்பு தினம் இன்று..
செயல்பாடுகளின் மூலம் நம்பிக்கையை ஏற்படுத்துதல் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு இந்த ஆண்டு உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
வாழ்க்கை என்றால் ஆயிரம் பிரச்சனை இருக்கும். அதை கடந்து வாழ்வதுதான் வாழ்க்கை. எந்த பிரச்சனைக்கும் தற்கொலை என்பது தீர்வாகாது. இன்று தற்கொலை செய்து கொள்வது என்பது சர்வ சாதரணமாகிவிட்டது. தனிப்பட்ட காரணம், குடும்ப காரணம், தேர்வில் தோல்வி அடைவது, காதல் பிரச்சனை என இப்படி பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒருவர் தற்கொலை செய்து கொள்வதால் எந்த பிரச்சனையும் தீரப்போவது இல்லை.
இன்றைய சூழலில் தினசரி தற்கொலை சம்பவங்கள் நடைபெற்றுகொண்டு தான் இருக்கிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தற்கொலை செய்திகள் இல்லாத நாளிதழே இல்லை என்ற நிலைதான் உள்ளது. மற்றொருபுறம் தற்கொலை சம்பவங்களை தடுத்திட உலக நாடுகள் உலக சுகாதார அமைப்புகளுடன் சேர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மனநல ஆலோசனை, கலந்தாய்வு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு வழிகளில் தற்கொலை எண்ணங்களை முடிவுக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2003 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு செப்டம்பர் 10-ஆம் தேது உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படும் என அறிவித்தது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10-ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் கொண்டாடப்படுகிறது. நடவடிக்கையின் மூலம் நம்பிக்கையை ஏற்படுத்துதல் என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டு உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. குறிப்பாக மருத்துவமனை மூலம் மக்கள் மத்தியில் தற்கொலை தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்கொலை செய்துகொள்வது என்பது வெறும் 5 நிமிட செயல்தான். ஆனால் அதனால் அந்த நபரை சார்ந்து இருப்பவர்களுக்கு ஏற்படும் தாக்கம், பிரச்சனை குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும். எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு கண்டிப்பாக தீர்வு இருக்கும். தீர்வு இல்லாத பிரச்சனையே கிடையாது. மிகவும் மன உளைச்சலில் இருக்கும் நிலையில் தற்கொலை எண்ணங்கள் தோன்றுகிறது என்றால் மனதுக்கு நெருக்கமானவர்களிடம் பேசுவதுடன், உரிய மனநல ஆலோசனையைப் பெறுவதே சிறந்ததாகும். எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வு ஆகாது. வாழ்க்கை என்பது நாம் அனைவருக்கும் கிடைந்த golden ticket ஆகும் அதனை ரசித்து அனுபவித்து வாழ வேண்டும்.
CM Stalin: அமெரிக்க அதிபர் பைடனை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்.. ஜி20 மாநாட்டில் நடந்தது என்ன?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )