![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Masala Tea: உலக அளவில் பிரபலமான மாசலா டீ; என்ன பயன்? - தெரிஞ்சிக்கோங்க!
Masala Chai: மசாலா டீ ப்ரியர்களுக்கு ஒரு ஹேப்பியான நியூஸ்..
![Masala Tea: உலக அளவில் பிரபலமான மாசலா டீ; என்ன பயன்? - தெரிஞ்சிக்கோங்க! This beloved desi beverage was named world's best non-alcoholic drink after Aguas Frescas Masala Tea: உலக அளவில் பிரபலமான மாசலா டீ; என்ன பயன்? - தெரிஞ்சிக்கோங்க!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/19/b495115c1d03db31c0afeb7867062f0e1705667028678333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
’டீ’ -ன்னா யாருக்குத்தான் பிடிக்காது. பலருக்கும் டீ எனர்ஜி டிரிங். டீ ப்ரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்.மசாலா டீ உலகின் இரண்டாவது மிகச் சிறந்த ஆல்ஹகால் இல்லாத பானம் (Second-Best Non-Alcoholic Beverage) என பெயர் பெற்றுள்ளது.
பிரபலமான உணவு மற்றும் பயணங்களை நிர்வகிக்கும் நிறுவனமான TasteAtlas - 2023- 2024 ம் ஆண்டு மிகவும் பிரபலமான உணவுகள் இடங்கள் குறித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் உலகில் சிறந்த உணவகங்கள், சுற்றுலா தளங்கள் உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக ஆராய்ந்து அது குறித்து விசமர்சனம் செய்யும். சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,இந்தியாவின் பிரபல உணவான மசாலா டீ இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் மசாலா டீக்கு நல்ல ரேட்டிங்க் கிடைத்துள்ளது. மெக்ஸிகோவின் Aguas Frescas என்ற டிரிங்க். இதை மூன்றிற்கும் மேற்பட்ட பழங்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பழங்கள், வெள்ளரி, பூக்கள் உள்ளிட்டவைகள் சேர்த்து தயாரிக்கப்படும் இனிப்பான டிரிங்க். இந்தப் பிரிவில் மேங்கோ லஸ்ஸி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. முன்னதாக மேங்கோ லஸ்ஸி ‘ 'Best Dairy Beverage In The World' என்ற பெருமையை பெற்றிருந்தது.
View this post on Instagram
கடந்த ஆண்டுகளில் இந்நிறுவனம் வெளியிட்ட ரேட்டிங்கில் இந்தியாவின் பாஸ்மதி அரிசி உலகிலேயே மிகச் சிறந்த அரிசி என்று ரேட்டிங்க் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மசாலா டீ, புதினா டீ, இஞ்சி டீ என பல வகையான டீ இருந்தாலும் அதை அளவோடு அருந்துவதே நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது.
ஹெர்பல் டீ
கிரீன் டீ குறித்து நம் அனைவருக்கும் தெரியும். ப்ளூ டீ தெரியுமா? உடல் எடை குறைப்பு, உடலின் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல், உடல் புத்துணர்ச்சி, கொழுப்பு சேராமல் தடுக்கும் என்று கிரீன் டீ குறித்து நமக்கு நிறைய தெரியும். அதே போல இந்த ப்ளூ டீ-யும் பல மருத்துவ நன்மைகளை நமக்கு வழங்குகிறது. கிரீன் டீ போலவே கொழுப்பு குறைப்பு தொடங்கி, புற்று நோயை எதிர்க்கும் சக்தி வரை ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இதில் அடங்கியுள்ளன.
- நீரிழிவு நோயாளிகளுக்கு, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்க உதவும் என்று ஆராய்ச்சிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால், பல நோய் தொற்றுக்களிலிருந்தும் உடலை பாதுகாப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
- கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் பழக்கம் அதிகம் உள்ளவர்களுக்கு ஏற்படும், உடல் பருமனை பிரச்சனைகளுக்கு 'ப்ளூ டீ ' பெரிதும் உதவியாக இருக்கும். தேவையற்ற கொழுப்பை கரைத்து வெளியேற்றும் சக்தியை இந்த டீ கொண்டுள்ளது.
- இரத்தத்தில் சர்க்கரை அளவைக்கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
மஞ்சள்
"மஞ்சளில் குர்குமின் உடல் பருமன் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது உடலில் உள்ள கொழுப்பு திசுக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உயர் இரத்த சர்க்கரை, அதிக கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தையும் குர்குமின் குறைக்கும் என்று அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது.” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர்.
இதையும் வாசிங்க..மசாலா டீயை அதிகமாக எடுத்துக் கொள்வதால் எந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும் என்று பார்க்கலாம்.
Burn Belly Fat: தொப்பையை குறைக்க வேண்டுமா? ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்லும் மேஜிக் டீ?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)