News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

மணிக்கு ஒருமுறை மசாலா டீ குடிக்கிறீங்களா? அப்போ இதை கட்டாயம் படியுங்க...

மசாலா டீயை அதிகமாக எடுத்துக் கொள்வதால் எந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும் என்று பார்க்கலாம்.

FOLLOW US: 
Share:

ஒரு கோப்பை தேநீருடன் நாளை தொடங்குவது நம்மில் பலரின் வழக்கமாகும்.  பிளாக் டீ, மசாலா டீ, க்ரீன் டீ அல்லது பால் டீ என அவர் அவர்களுக்குப் பிடித்ததை தேர்வு செய்து குடிக்கின்றனர்.  இஞ்சி, துளசி, இலவங்கப்பட்டை, சிறிய ஏலக்காய், கருப்பு ஏலக்காய் மற்றும் கருப்பு மிளகு உள்ளிட்டவை கொண்டு தயாரிக்கப்படும் மசாலா டீ, குளிர் குளிர்காலத்தில் அதிகம் விரும்பி குடிக்கப்படுகின்றது.  இதன் சுவை அலாதியானதாக இருக்கும். இருந்தாலும், அதிகப்படியான மசாலாப் பொருட்களின் ஆரோக்கிய பாதிப்புகளைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமானது. 

குளிர்காலத்தில் மசாலா தேநீர் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் அதிகப்படியாக இதை உட்கொண்டால் மோசமான ஆரோக்கிய விளைவுகளை சந்திக்க நேரிடலாம் என சொல்லப்படுகிறது. 

அதிகமாக மசாலா டீ சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:

1. செரிமான அசௌகரியம்

முழு மசாலா பொருட்களை அதிகமாக உட்கொள்வதால் வயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் வாயு தொல்லை ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. செரிமான பிரச்சனைகளைத் தடுக்க அவற்றை மிதமாகப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

2. கஃபைன் கவலைகள்

மசாலா டீயில் குறிப்பிடத்தக்க அளவு காஃபின் உள்ளது. இதை அதிகப்படியாக எடுத்துக் கொள்வது அனைவருக்கும் பொருந்தாது. மன அழுத்தம் அல்லது பதற்றத்திற்கு ஆளாகும் நபர்கள் காஃபின் உட்கொள்வதை முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது என கூறப்படுகிறது. 

3. ஒவ்வாமை எதிர்வினைகள்

சிலருக்கு குறிப்பிட்ட மசாலாப் பொருட்களை சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்படலாம். இது போன்ற பிரச்சனை உள்ளவர்கள் மசாலா டீ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

4. இரத்த அழுத்த பாதிப்பு

மசாலா தேநீரில் உள்ள மசாலா பொருட்களின் செழுமை, இரத்த அழுத்த அளவை அதிகரிக்க வழி வகுக்கும் என சொல்லப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிக அளவில் மசாலா டீ எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

5. நெஞ்செரிச்சல் அபாயங்கள்

ஏராளமான மசாலாப் பொருட்கள் சில நேரங்களில் நெஞ்செரிச்சலுக்கு வழிவகுக்கும். இந்த அசௌகரியத்தைத் தடுக்க மசாலா டீ குடிப்பதை குறைக்க பரிந்துரைக்கப்படுகிறது.

6. கண் எரிச்சல் மற்றும் ஒவ்வாமை

மசாலா தேநீரில் உள்ள கருப்பு மிளகு கண் எரிச்சலை ஏற்படுத்தும் என்றும், கர்ப்பிணி பெண்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே கர்ப்ப காலத்தில் அதிகப்படியாக மசாலா டீ உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என கூறப்படுகிறது. 

Published at : 03 Dec 2023 03:07 PM (IST) Tags: blood pressure Masala tea Life Style Six Warnings

தொடர்புடைய செய்திகள்

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

Murungai Keerai Paratha Recipe: சுவையான முருங்கைக்கீரை பராத்தா செய்வது எப்படி? ரெசிபி

Murungai Keerai Paratha Recipe: சுவையான முருங்கைக்கீரை பராத்தா செய்வது எப்படி? ரெசிபி

Ridge gourd Rice: லன்ச் பாக்ஸ் ரெசிபி! ஊட்டச்சத்து நிறைந்த பீர்க்கங்காய் சாதம் - எப்படி செய்வது?

Ridge gourd Rice: லன்ச் பாக்ஸ் ரெசிபி! ஊட்டச்சத்து நிறைந்த பீர்க்கங்காய் சாதம் - எப்படி செய்வது?

Poha Recipes: உடல் எடையை நிர்வகிக்க உதவும் அவல்;ரெசிபிகள் சில!

Poha Recipes: உடல் எடையை நிர்வகிக்க உதவும் அவல்;ரெசிபிகள் சில!

Healthy Dosa Recipes: சிறுதானிய தோசை செய்வது இவ்வளவு எளிதானதா? இதைப் படிங்க!

Healthy Dosa Recipes: சிறுதானிய தோசை செய்வது இவ்வளவு எளிதானதா? இதைப் படிங்க!

டாப் நியூஸ்

Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...

Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...

வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !

வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !

TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?

TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?

Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!

Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!