Heatwaves: இந்த ஆண்டு வாட்டி வதைக்கும் வெயில்; இந்த பகுதி மக்கள் உஷார்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
Heatwaves:புவி வெப்பமயமாதல் விளைவால் வெப்ப அலை பாதிப்புகள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புவி வெப்பமயமாதல் காரணமாக ஏற்படும் விளைவுகளை உலகில் உள்ள நாடுகள் சந்தித்து வருகின்றன. காலநிலை மாற்றத்தின் தாக்கம் அதீத குளிர்,வெப்பத்தை மக்களால் உணர முடிகிறது. பல நாடுகளில் கோடை காலம் மட்டுமில்லாமல் மற்ற காலத்திலும் அதிக வெப்பநிலை பதிவாகிறது. பல நாடுகள் வெப்ப அலை நிலவும் காலத்தை முன்பைவிட அதிகமாக சந்திக்கின்றன.இது தொடர்பான ஆராய்ச்சிகள் விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.
வெப்ப அலை பாதிப்புகள் குறித்து 'Nature Communication' என்ற ஆய்விதழில், வரும் ஆண்டுகளில் உலகின் சில நாடுகளில் மிக அதிக அளவிலான வெப்பநிலை பதிவாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிக வெப்பநிலை பதிவாகும் பகுதிகளில் ரஷ்யா, மத்திய அமெரிக்க நாடுகள், மத்திய ஐரோப்பிய நாடுகள்,சீனா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாபுவா, நியூ குயானா மற்றும் வடமேற்கு அர்ஜெண்டினா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆய்வில் உலக அளவில் குறைந்த வெப்பநிலையை பதிவு செய்யதுள்ள பகுதிகளை கண்டறிவது நோக்கமாகும். ஆராய்ச்சியில், வரலாற்றில் அதிக வெப்பநிலை உணரப்படாத பகுதிகளில் இனி வரும் காலங்களில் அதிக வெப்பம் பதிவாகும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதோடு, நிலவும் அதிக வெப்பநிலையில் இருந்து தப்பிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ள பகுதிகள் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
60 ஆண்டும் மேலான பதிவான வெப்பநிலை தரவுகள் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், இதுவரை அதிக வெப்பம் பதிவாக பகுதிகள் புவி வெப்பமயமாதலால் ஏற்படும் விளைவுகளை சந்திக்க இருப்பதாக ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரையில் வெப்பநிலை உயர்வை சந்தித்திடாத பகுதிகள், அதற்கான தகவமைப்பு என்னென்ன உள்ளிட்ட நிகழ்வுகள் ஏதும் இல்லை. அதனால், எதிர்வரும் காலங்களில் இந்த குறிப்பிட்ட பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்படுகிறது.
மேலும், இந்தப் பகுதிகள் வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் இருக்கும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகரிப்பதற்கான காரணங்கள் மற்றும் அதை சமாளிக்கத் தயாராவது எப்படி உள்ளிட்டவை குறித்து ஆராய்ச்சில் முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெப்பம் அதிகரிக்கும் நாளில் மக்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் அரசுகள் புவி வெப்பமயமாதல் காரணமாக ஏற்படும் விளைவுகளுக்கு ஏற்றவாறு திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும், அதிக வெப்பம் நிலவும் காலங்களில் மக்களுக்கு தேவையான திட்டங்களை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க..
Vikram on Dhoni: நான் கிரிக்கெட் பார்க்க காரணம் இவர் மட்டும்தான்.. மனம் திறந்த ஆதித்த கரிகாலன்..!