மேலும் அறிய
Advertisement
Tender Coconut Payasam: ஓணம் வந்தல்லோ.. டேஸ்ட்டியான இளநீர் பாயசம் ஈசியா எப்படி செய்யுறதுன்னு பார்க்கலாம் வாங்க....
ஜில்லுனு, டேஸ்டியான இளநீர் பாயசம் எப்படி செய்யுறதுன்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
2 இளநீர், ½ லிட்டர் பால், 150 கிராம் சர்க்கரை, 1 கப் மில்க்மெய்ட், 2 மேஜைக்கரண்டி சாரை பருப்பு, 10 முந்திரி, 10 பாதாம், 10 பிஸ்தா, ¼ மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள், தேவையான அளவு நெய்,1 சிட்டிகை பச்சை கற்பூரம்.
செய்முறை
முதலில் இளநீரை சீவி அதில் இருக்கும் தண்ணீர் மற்றும் வழுக்கையை எடுத்து தனித்தனியாக இரு பாத்திரத்தில் வைத்து கொள்ள வேண்டும். பின் பாதாம் மற்றும் பிஸ்தாவை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்
அடுத்து ஒரு இளநீரில் இருக்கும் வழுக்கையை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு இளநீரில் இருக்கும் வழுக்கை தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதில் சிறிதளவு இளநீர் தண்ணியை ஊற்றி அதை நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். பின் அதில் மீதமுள்ள இளநீர் தண்ணீரையும் ஊற்றி அதை மீண்டும் ஒரு முறை நன்கு அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் மிதாமன தீயை வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பாலை ஊற்றி அதை நன்கு சுட வைக்க வேண்டும்.
பால் நன்கு காய்ந்தவுடன் அதில் மில்க்மெய்டை ஊற்றி அது நன்கு கரையும் வரை ஒரு கரண்டியின் மூலம் அதை கலந்து விட வேண்டும்.
அடுத்து அதில் சுவைக்கு ஏற்ப சர்க்கரையை சேர்த்து அது கரையும் வரை அதை நன்கு கலந்துவிட வேண்டும். பின்பு அதில் ஏலக்காய் தூள் மற்றும் பச்சை கற்பூரத்தை சேர்த்து அதை நன்கு மிக்ஸ் செய்து விட வேண்டும். பிறகு அதில் சாரைப் பருப்பு மற்றும் நாம் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் இளநீர் வழுக்கையை போட்டு அதை நன்கு கலந்துவிட்டு சுமார் 2 நிமிடம் வரை கொதிக்கவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி ஆற விட வேண்டும்.
அடுத்து ஒரு Pan-ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு நெய் ஊற்றி, நெய் சூடானதும், அதில் முந்திரியை சேர்த்து வறுத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ள வேண்டும். அடுப்பில் இருந்து இறக்கி வைத்திருக்கும் பால் நன்கு ஆறியதும், அரைத்து வைத்திருக்கும் இளநீர் வழுக்கை மற்றும் நாம் வறுத்து வைத்திருக்கும் முந்திரியை சேர்த்து அதை நன்கு மிக்ஸ் செய்து விட வேண்டும். (பால் சூடாக இருக்கும்போது அரைத்த இளநீர் வழுக்கையை அதில் சேர்த்தால் திரிந்து விடும்)
பின் இந்த இளநீர் பாயசத்தை ஃபிரிட்ஜில் சுமார் 2 மணிநேரத்திலிருந்து 3 மணிநேரம் வரை வைக்க வேண்டும். பின் அதை ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றி அதன் மேலே நறுக்கி வைத்திருக்கும் உரித்த பாதாமை தூவி அதை சில்லென்று பரிமாறவும். இப்போது சுவையான இளநீர் பாயசம் தயார்.
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion