மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
Teachers Day 2024 Wishes: செப்.5 - ஆசிரியர் தினம்; அன்பாசிரியர்களுக்கு வாழ்த்து, பரிசளிக்க சில டிப்ஸ்!
Teachers Day 2024 Wishes in Tamil: ஆசிரியர் தின வாழ்த்து தெரிவிக்க சில மெசேஜ்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
இன்று. செப்டம்பர் 5, ஆசிரியர்களின் பணிக்கு மரியாதை செலுத்தும் விதமாக ’ஆசிரியர் தினம்’ கொண்டாடப்படுகிறது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள்:
இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி ‘ஆசிரியர் தினம்’ கொண்டாடப்படுகிறது. கல்வி துறையில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும், மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை செய்யும் ஆசிரியர்களின் அர்பணிப்பை போற்றும் வகையில் இன்றைய தினம் கொண்டாட்டப்படுகிறது.
சுதந்திர இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவரும், இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரும், சிறந்த தத்துவஞானியுமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் 1962 முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆசிரியர் தின வாழ்த்து செய்திகள்:
- எனக்கு வழிகாட்டியாக இருப்பதற்கு நன்றி. எனக்குப் புரியாத பாடங்களை கூட எளிதாக மாற்றியதற்கு நன்றி!
- வகுப்பறையில் மகிழ்ச்சியோடு பாடங்களை கற்க ஊக்கப்படுத்தும் உங்களுக்கு என் நன்றியும் அன்பும். இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்!
- நட்புறவோடு பாடம் கற்பிப்பதற்கு நன்று. இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்!
- புத்தங்களில் உள்ள பாடங்கள் மட்டுமல்லாமல் சிறந்த விசயங்கள் குறித்து எனக்கு அறிமுகம் செய்ததற்கு நன்றி. இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்!
- இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்! உங்களுடைய பணி தொடர்ந்து சிறக்கட்டும்.
- இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்! புதிய விசயங்கள் கற்பதை இனிமையாக மாற்றியதற்கு நன்றி!
- இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்! இன்றைய நாள் இனிமையானதாக அமையட்டும்.
- என் திறமைகளை கண்டறிய உதவிய உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்!
- உங்கள் பொறுமை மற்றும் ஊக்கத்திற்கும் நன்றி. இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
- எனக்குப் பிடித்த ஆசிரியர் நீங்கள். இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
- என் வாழ்க்கையில் நீங்கள் ஏற்படுத்திய மாற்றம் அளவிட முடியாதது. இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
- என் வாழ்வில் மிக முக்கியமானவற்றை உணர்ந்துகொள்ள நீங்கள் உதவியாக இருந்தீர்கள். இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
- சிறந்த ஆசிரியரே உங்கள் ஊக்கம் தான் எங்களின் கற்றல் காலங்களை இனிமையாக மாற்றியது. ஆசிரியர் தினத்தை சிறப்பாக கொண்டாடுங்கள்.
ஆசிரியர் தின பரிசு:
- உங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்கு கடிதம் எழுதலாம்.
- கரும்பலகையில் வாழ்த்து செய்தி வரைந்து உங்கள் அன்பை வெளிப்படுத்தலாம்.
- காகித மலர் அல்லது உங்கள் வீட்டில் பூச்செடியில் மலரை மனதிற்கு பிடித்த ஆசிரியர்களுக்கு கொடுத்து வாழ்த்து தெரிவிக்கலாம்.
- வகுப்பில் உள்ள அனைவரும் உங்கள் மனதில் உள்ளவற்றை தெரிவித்து வாழ்த்து தெரிவிக்கலாம்.
- உங்கள் ஆசிரியருக்கு பிடித்த பாடலை வகுப்பினர் அனைவரும் சேர்ந்து பாடி சர்ப்ரைஸ் செய்து வாழ்த்தலாம்.
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
பொழுதுபோக்கு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion