ஆரோக்கியமான மார்பகத்திற்கு சூப்பர் 10 உணவுகள் இதோ!
மார்பக புற்றுநோயால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டு இருக்கிறது. குறிப்பிட்ட காரணத்தினால் தான் புற்றுநோய் வருகிறது என சொல்ல முடிவதில்லை. ஒவ்வொரு புற்றுநோயும் ஒவ்வொரு காரணத்தால் வருகிறது
மார்பக புற்றுநோயால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகி கொண்டு இருக்கிறது. குறிப்பிட்ட ஒரு காரணத்தினால் தான் புற்றுநோய் வருகிறது என சொல்ல முடிவதில்லை. ஒவ்வொரு புற்றுநோயும் ஒவ்வொரு காரணத்தால் வருகிறது. முடிந்த வரை புற்றுநோய் வராமல் தடுப்பது ஒன்றே சிறந்த வழியாகும். வருமுன் காப்பதே சால சிறந்தது. மார்பக ஆரோக்கியத்திற்கு ஏற்ற 10 உணவுகளின் லிஸ்ட் இதோ.
பச்சை காய்கறிகள் - ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், முளைகள், பிரஸ்ஸல்ஸ், முள்ளங்கி, டர்னிப், காலே, தர்பூசணி ஆகியவை எடுத்து கொள்ளலாம். இதில் ஐசோதியோசயனேட் எனும் வேதி பொருள் உள்ளது.இது புற்றுநோய் வராமல் தடுக்கும்.
பெர்ரி - புளுபெர்ரி, ராஸ்பெர்ரி, செர்ரி மற்றும் ஸ்ட்ராபெரி போன்ற பெர்ரி வகை பழங்களை எடுத்து கொள்ளலாம். இதில் எலாஜிக் அமிலம், அந்தோசயனிடின்ஸ் மற்றும் புரோந்தோசயனிடின்ஸ் போன்ற வேதி பொருள் இருப்பதால் இது புற்றுநோய் செல்களை அளிக்கிறது. அதனால் பெர்ரி பழங்கள் கிடைக்கும் நேரங்களில் எடுத்து கொள்ளலாம்.
ஆப்பிள் - தினம் ஒரு ஆப்பிள் எடுத்து கொள்வது, நோய்கள் வராமல் தடுக்கும். புற்றுநோய் செல்களை அளிக்கும் பண்பு ஆப்பிளில் இருக்கிறது.
மஸ்ரூம் - இது மழைக்காலம் மற்றும் ஈரப்பதம் அதிகம் இருக்கும் இடங்களில் வளர கூடியது. இது சிலருக்கு ஒவ்வாமை பிரச்சனையை தரும். ஊட்டச்சத்து மிக்க மஸ்ரூம் ஆனது மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
தக்காளி - இது உடலில் வீக்கத்தை கட்டுப்படுத்தும். ஆன்ஜியோஜெனெசிஸ் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது மார்பக ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பூண்டு, வெங்காயம், சின்ன வெங்காயம் லீக்ஸ், வெங்காயம் - இவைகளை ஒரு வாரம் எடுத்து கொள்ளும் உணவில் சேர்த்து கொள்வதால் புற்றுநோய் செல்கள் உடலில் சேராமல் தடுக்கும்.
மஞ்சள் - இது கிருமிகளை கொன்று உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்துகிறது. பிரீராடிக்கல் எனும் கழுவுகளை வெளியேற்றுவதில் மஞ்சள் முக்கிய பங்கு வகிக்கிறது. மஞ்சள் உடன் மிளகு மற்றும் மசாலா பொருள்களை சேர்த்து கொள்ளலாம்.
மூலிகைகள் - துளசி, வெந்தயம், பூண்டு, இஞ்சி, தைம், குங்குமப்பூ, லீக்ஸ், எலுமிச்சை, ஜாதிக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய், மிளகாய் தூள், போன்றவை உணவில் சேர்த்து கொள்ளலாம். இது புற்றுநோய் வராமல் தடுக்கும். புற்றுநோய் செல்கள் உடலில் பெருகாமல் தடுப்பதில் இந்த மூலிகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
கடற்பாசி - இது கிருமி தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் இதை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இது ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சரியாக வேலை செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
நார்சத்து - நார்சத்து மிக்க உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இது ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் குறைபாடுகளை .சரி
செய்யும். மேலும் ஹார்மோன் குறைபாட்டினால் வரும் மார்பக புற்றுநோய் வராமல் பாதுகாக்கும்.