’நான் இப்படியான அம்மாவாகத்தான் இருக்க விரும்புகிறேன்’ - சன்னி லியோனின் ‘மதர்ஸ் டே’ ஷேரிங்..
தனது குழந்தைகள் செய்யும் சிறு சிறு விஷயங்கள் சன்னிக்கு பெருமையாக இருப்பதாகவும், அவர்கள் செய்யும் விஷயங்களை பாராட்டி ஊக்கப்படுத்தவும் தவறவில்லை என அம்மாவுக்கே உரித்தான அழகியலோடு சொல்கிறார் சன்னி.
கனடாவிற்கு குடியேறிய ஒரு இந்திய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்தவர் சன்னி லியோன் என்கின்ற கரம்ஜித் கவுர். இவர் தனது கடந்த கால வாழ்க்கை குறித்து பல நேர்காணலில் தெரிவித்துள்ளார். இவரின் வாழ்க்கையும் கூட படமாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால் தன் மூன்று குழந்தைகள் குறித்து சன்னி பொதுவெளியில் அவ்வளவாக பேசியது இல்லை.
இந்நிலையில் "அன்னையர் தினத்தை" முன்னிட்டு அவர் குழந்தைகள் குறித்தான சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். முதலில் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்தான சன்னியின் பார்வை வித்தியாசமானது . அவர் எல்லோரும் பின்பற்றும் ஒரே மாதிரியான முறையை உடைக்க விரும்பினார். மேலும் குழந்தையை தேர்வு செய்வது அவரவரின் தனிப்பட்ட விருப்பம் என்கிறார். அதன் காரணமாகவே தனது முதல் குழந்தையான நிஷாவை தத்தெடுத்தார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு மகராஷ்ட்ராவின் , லடூர் கிராமத்தில் இருந்து "4 மாத" குழந்தையாக அழைத்துவரப்பட்டவர்தான் நிஷா. நிஷாவை வளர்க்க முடிவு செய்த சன்னி மற்றும் டேனியல் தம்பதி, அவருக்கான சுதந்திரம் அனைத்தையும் வழங்க விரும்பினர். அதன் காரணமாக அமெரிக்க வளர்ப்பு முறையை பின்பன்ற முடிவு செய்ததாக தெரிவிக்கிறார் சன்னி. வீட்டில் நிஷாவிற்கான தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் சுதந்திரமாக வளர்வதற்கான அனைத்து வசதிகளும் செய்துக்கொடுத்திருக்கிறாராம் சன்னி.
குழந்தையின் பிறப்பு குறித்து எப்போது தெரிவிப்பீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த சன்னி, அவளே அதற்கான காலத்தை ஏற்படுத்திக்கொடுப்பாள். அப்போது மற்ற குழந்தைகளை போல 9 மாதம் என்னை சுமைக்குள்ளாக்கவில்லை என்பதை நினைத்து மிகவும் நெருக்கமாக உணர்வாள்" என்கிறார்.
அதன்பிறகு கடந்த 2018-ஆம் ஆண்டு சன்னி மற்றும் டேனியல் தம்பதி இரட்டை ஆண் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வந்தனர். அவர்கள் இருவரும் வாடகைத்தாய் (surrogacy) மூலம் உருவானவர்கள். அவர்கள் இருவருக்கும் அஷர் மற்றும் நோவா என பெயரிட்டுள்ளார். தனது 30 வயதில் ஒரு குடும்பத்தை உருவாக்க நினைத்தாராம் சன்னி, பல வருடங்களுக்கு பிறகு தற்போது சாத்தியமாகியுள்ளதாக பெருமிதம் தெரிவிக்கிறார். சன்னி லியோனுக்கு தற்போது 39 வயதாகிறது.
’ஆண் , பெண் வேற்றுமை பார்த்து வளர்ப்பீர்களா?’ என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், இருவருக்குமான தேவை வித்தியசமானதாக இருக்குமே தவிற , அவர்களை ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டும், அவர்களின் தேவையை அறிந்து செயல்படுத்த வேண்டும் , அவர்களுக்கான முறையான வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்பதுதான் தனது விருப்பம் என தெரிவித்தார். தனது குழந்தைகள் செய்யும் சிறு சிறு விஷயங்கள் சன்னிக்கு பெருமையாக இருப்பதாகவும், அவர்கள் செய்யும் விஷயங்களை பாராட்டி ஊக்கப்படுத்தவும் தவறவில்லை என அம்மாவுக்கே உரித்தான அழகியலோடு சொல்கிறார்.
தன் அம்மா தன்னிடம் அடிக்கடி கூறும் " குழந்தைகளை சுதந்திரமாக இருக்க விட வேண்டும்" என்பதைத்தான் தான் பின்பற்றுவதாக சன்னி லியோன் தெரிவித்துள்ளார். மேலும் தன் குழந்தைகளுக்கான தேவையை நிறைவேற்ற தான் தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருப்பேன் என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.