Summer Heat rash: கொளுத்தும் வெயிலால் ஏற்படும் சரும அரிப்பு.. தடுக்க ஈஸி டிப்ஸ் இதோ!
கோடைகாலம் என்றாலே பலருக்கும் கொளுத்தும் வெயில் தான் நினைவுக்கு வரும். அதிகப்படியான வியர்வை, புழுக்கம், தண்ணீர் தேவை, உடல் நலப் பாதிப்புகள், உடல் உபாதைகள், தூக்கமின்மை என ஏகப்பட்ட பிரச்னைகள் உண்டாகும்.

கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் சில உடல்நல பாதிப்புகள் அழையா விருந்தாளியாக நம்மை தேடி வரும். அதனை எப்படி தடுப்பது என்பது பற்றிப் பார்க்கலாம்.
கோடைகாலம் என்றாலே பலருக்கும் கொளுத்தும் வெயில் தான் நினைவுக்கு வரும். அதிகப்படியான வியர்வை, புழுக்கம், தண்ணீர் தேவை, உடல் நலப் பாதிப்புகள், உடல் உபாதைகள், தூக்கமின்மை என ஏகப்பட்ட பிரச்னைகள் உண்டாகும். இத்தகைய கோடைக்காலத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்போது பலருக்கும் சருமத்தில் பல பிரச்னைகள் உண்டாகும்.
சிவப்பு நிற கொப்பளங்கள், எரிச்சல், பருக்கள், வேர்க்குரு போன்ற பல பாதிப்புகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனுபவிக்கின்றனர். ஆனால் நாம் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டால் இதனையெல்லாம் எளிதாக தடுக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வியர்வைக் கொப்புளங்கள்
வியர்வைச் சுரப்பிகள் அடைபட்டு வியர்வை தோலை அடைவதால் சருமத்தில் அரிப்பு, அதனைத் தொடர்ந்து கொப்புளங்கள் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் எரிச்சலை தடுக்க பவுடர், ஐஸ்கட்டி போன்றவை நாம் பயன்படுத்துவோம். தோல் ஈரமாக இருக்கும்போது பாக்டீரியாக்கள் வளர்ந்து தோலில் தடிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே முடிந்தவரை வியர்வை உடனே நீங்கும் செயல்களில் ஈடுபடுங்கள்.
இந்த காலக்கட்டத்தில் நைலான் மற்றும் பாலியஸ்டர் போன்ற ஆடைகளை அணிந்தால் அவை காற்றை உள்ளே செல்ல அனுமதிக்காமல் தோலில் அரிப்பை ஏற்படுத்தி கொப்புளத்திற்கு வழிவகுக்கிறது. சருமம் வறண்டு போகிறது என நாம் எடுக்கும் சில தீர்வு பொருட்களும் சரும துளைகளை அடைத்து பருக்கள், கொப்புளம் ஏற்பட வழிவகை செய்கிறது.
இந்த பாதிப்பு குழந்தைகளிடத்தில் அதிகளவில் இருக்கும். அதாவது வியர்வைச் சுரப்பிகள் முழுமையாக வளர்ச்சி அடையாததால் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
தடுக்க என்ன செய்யலாம்?
இத்தகைய பாதிப்புகளில் இருந்து தடுக்க கோடை காலத்தில் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். சோப்பை குறைவாக பயன்படுத்தவும். கற்றாழை ஜெல் உள்ளிட்ட இயற்கையான பொருட்களை பயன்படுத்தலாம். கொப்புளம் ஏற்பட்டால் சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து சருமத்தில் தடவவும்.
வேப்ப இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை ஆறவைத்து குளிக்கும் நீரில் சேர்க்கவும். இவ்வாறு செய்வதால் உடலில் பாக்டீரியாக்கள் வளர்வது தடுக்கப்படும். உடல் குளிர்ச்சி பெற தினமும் மோர் அருந்தவும். அதிகளவில் தண்ணீர் குடியுங்கள். வியர்வை அதிகமாக வழியும் பட்சத்தில் அதனை துடைக்க துணி பயன்படுத்துங்கள்.
ஏசி அல்லது மின்விசிறி சரியாக செயல்படுகிறதா என்பதை சரிபாருங்கள். சருமத்தில் காற்று படும் பட்சத்தில் பாதிப்புகள் குறையும். சருமத்தை ஈரமாக வைக்க மாய்ஸ்சரைசர்கள், எண்ணெய்களை கோடை காலத்தில் தவிர்ப்பது நல்லது. பருத்தி ஆடைகள் அதேசமயம் அவை தளர்வானவையாக இருக்க வேண்டும்.
ஒருவேளை கொப்புளங்கள் ஏற்பட்டு காய்ச்சல் அல்லது வேறு ஏதாவது உடல்நல பாதிப்புகள் இருந்தால் மருத்துவரை உடனடியாக அணுகவும்.
ட்ரெண்டிங் செய்திகள்





















