Love and Relationship : உங்க காதலில் இதெல்லாம் இருக்கா? ரிலேஷன்ஷிப் நிலைச்சு நிக்க இதையெல்லாம் செக் பண்ணுங்க..
பார்க்கப்பட வேண்டும், அணுகப்பட வேண்டும், நேசிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரும் எதிர்ப்பார்க்கிறோம்
உறவுகள் சிக்கலானவை. நாம் எப்போதும் மற்றவர்களை விட வித்தியாசமானவர்கள் என்று நினைத்தாலும் இறுதியில், நாம் அனைவரும் ஒரே விஷயத்தை விரும்புகிறோம் .அதாவது நாம் உண்மையில் யாராக இருக்கிறோமோ அதற்காகவே நேசிக்கப்பட விரும்புகிறோம். உளவியலாளர் நிக்கோல் லெபெரா தனது சமீபத்திய இடுகையில் உறவுகளில் மக்கள் எதை எதிர்ப்பார்க்கிறார்கள் மற்றும் ஒரு உறவை ஆரோக்கியமானதாகவும், அதில் தனிநபர்களாக வளரப் பாதுகாப்பான இடமாகவும்* மாற்றுவது பற்றிய தனது பார்வையைப் பகிர்ந்துள்ளார். "உண்மையில், நாம் நினைப்பதை விட நாம் அனைவரும் மிகவும் ஒரே மாதிரி இருக்கிறோம். நாம் யார் என்பதற்காக பார்க்கப்பட வேண்டும், அணுகப்பட வேண்டும், நேசிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரும் எதிர்ப்பார்க்கிறோம்” என்று அவர் எழுதினார்.
அன்பை ஒரு பரிவர்த்தனை என்று நாம் அடிக்கடி நினைக்கிறோம் - நாம் நன்றாகவோ அல்லது வெற்றிகரமாகவோ இருந்தால் மட்டுமே, நமக்கு அன்பு கிடைக்கும் என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் அது உண்மையல்ல. "மெச்சூர்ட்டான காதல் என்பது ஒரு வகைப் பரிணாம வளர்ச்சி. நாம் யார் என்ற உண்மைக்குத் திரும்புவதற்கான பாதுகாப்பான இடமாகும். ஒரு வலுவான அன்புடன் நம்மை நாமே எதிர்கொள்ளும் போது புதிய எதிர்காலத்தை உருவாக்கவும் நமது கடந்த காலத்திலிருந்து குணமாகுவதற்கும் நமக்கு வாய்ப்பு உருவாகிறது" நிக்கோல் மேலும் கூறினார்.
பார்ட்னர்கள்: ஒரு முதிர்ந்த காதலில், கூட்டாளர்கள் ஒன்றாக இணைந்து வாழ்க்கையை உருவாக்குகிறார்கள். அவர்களுக்கு அங்கே வழிகாட்டுவதோ அல்லது திருத்துவதோ தேவைப்படுவதில்லை.
பொறுப்புணர்வு: எல்லா மனிதர்களும் தங்கள் சொந்த உணர்வுகளைக் கடந்து செல்கிறார்கள். உறவில் உணர்வுகளைக் கையாளும் புதிய உத்திகளைக் கண்டறிதல் அவசியம்.
பேச்சு/தொடர்பு: பார்ட்னர் மனதில் என்ன நினைக்கிறார் என்பதைக் கண்டறிய வேண்டும் என்கிற உணர்வு உறவில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்.மெச்சூர்ட்டான உறவில் ஒருவருக்கு ஒருவர் பேசித் தெளிவது முக்கியம். உங்கள் காதலுக்காக உழைக்கவேண்டும்: உறவில் ஒவ்வொரு நாளும் புதிய நாளே. ஒவ்வொரு நாளும் உங்கள் பார்ட்னர் அதே நபர் என்றாலும் புதியவராகவே இருக்கிறார். அந்தத் தருணங்கள் எப்படியாக இருந்தாலும் நமது பார்ட்னரும் நாமும் அதில் ஒன்றாகவே பயணிக்க வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டியது அவசியமாகிறது.
கடினமான உரையாடல்கள்: சிக்கலான உரையாடல்களைத் தவிர்க்க பார்ட்னரை மகிழ்விப்பது அல்லது அவரைப் பற்றி புகழ்வது என இல்லாமல் உரையாடலைத் தொடர்வது நல்லது.
ஒருவருக்கு ஒருவர் ஆதரவு: மெச்சூர்ட்டான காதலில் ஒருவருக்கு ஒருவர் அன்பானவர்களாகவும் ஆதரவாகவும் இருக்க வேண்டும். சுதந்திரம்: சிலர் தாங்களாகவே இருப்பதற்கான சூழல் இல்லாத வீடுகளில் வளர்க்கப்படுகிறார்கள். ஒரு முதிர்ந்த காதலில், அதனால் உங்கள் பார்ட்னருடன் அவர்கள் அவர்களாகவே இருக்க அனுமதிப்பது முக்கியம்.