Menstrual Tips: பெண்களே... மாதவிடாய் வலியை இயற்கை முறையில் குறைப்பது எப்படி?
மாதவிடாய் நேரத்தில் சில பெண்களுக்கு அடி வயிற்றிலேயே, தொப்புளுக்குக் கீழே வலி காணப்படும்.
Menstrual Hygiene Tips : மாதவிடாய் நேரத்தில் சில பெண்களுக்கு அடி வயிற்றிலேயே, தொப்புளுக்குக் கீழே வலி காணப்படும். இந்த வலி காலுக்கும், முதுகுக்கும் பரவலாம். சில பெண்கள் வாந்தி எடுக்கும் உணர்வையும், வயிற்றுப்போக்கையும், தலைசுற்றலையும், மயக்க நிலையையும் உணர்வார்கள். மயங்கி விழுந்த பெண்களும் உண்டு.
ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வாலும், சினைமுட்டை உருவாகும் நிலையிலும் இது ஏற்படுகிறது. Endometriosis என்னும் நோயில் இது காணப்படும். இதைச் சரியாகக் கண்டறிய வேண்டும். கர்ப்பப்பை கட்டிகளிலும், சினைமுட்டை கட்டிகளிலும் இது வரலாம்.
பெப்பர்மின்ட் தேநீர்
பெப்பர்மின்ட் தேநீர் எளிமையான சுவையான மனம் நிறைந்த தேநீர். இதில் செடிகளுக்கே உரித்தான ஃப்ளேவனாய்ட்ஸின் நன்மைகள் உள்ளன. இதில் உள்ள மனம் உங்களை காலை வேளையில் புத்துணர்ச்சி பெறச் செய்யும். குடலை சுத்தப்படுத்தும். முக்கியமாக மாதவிடாய் வலியில் இருந்து தப்பிக்கச் செய்யும்.
இஞ்சி தேநீர்
இஞ்சியில் ஜிஞ்ஜெரால் என்ற கூட்டுப்பொருள் உள்ளது. இது நீங்கள் ஹெவியான ஒரு உணவை உண்ட பின்னர் சிறந்த தீர்வைத் தரும். வயிறு உப்புசம், வாயுத் தொல்லை மற்றும் மாதவிடாய் வழியால் ஏற்படும் வயிற்று வலியை இந்த இஞ்சி டீ சரி செய்யும்.
சாமந்திப்பூ தேநீர்
சீமை சமாந்தி எனும் chamomile tea மன அழுதத்தை குறைக்க, தூக்கமின்மையில் இருந்து விடுபட உதவுகிறது. சீமை சாமந்தி பூக்களை நிழலில் உலர்த்தி காயவிடவும். நன்கு கொதிக்கும் நீரில் அடுப்பை ஆஃப் செய்துவிட்டு சீமை சாமந்தி பூவை போட்டு மூடி வைக்கவும். 2-3 நிமிடங்களில் வடிக்கட்டி தேன், வெல்ல சர்க்கரை சேர்த்து சாப்பிடாலம். இந்த தேநீருடன் உடன் எலுமிச்சை பழச் சாறு சிறிது சேர்த்து பருகினால், உற்சாகத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அது மட்டுமல்லாது வாயுத் தொல்லை, உடல் உப்புசத்தை போக்குகிறது. மாதவிடாய் வலி தாங்க முடியாமல் தவிப்போர் இதனை அருந்தலாம்.
வலி தாங்க முடியவில்லையா?
1. தண்ணீர் அருந்துங்கள்;
நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீர்ச்சத்து குறையாமல் இருந்தாலே வலி தாங்கும் அளவுக்கு இருக்கும். உப்புசமும் நீங்கும். தண்ணீர் தான் அருந்த வேண்டும் என்று அவசியமில்லை. மோர் வெந்தயம் சேர்த்து, சிட்ரஸ் பழங்களின் சாறு, குறிப்பாக எலுமிச்சை புதினா சாறு அருந்தலாம். க்ளூகோஸ் பொடியைக் கூட தண்ணீரில் கலக்கி அருந்தலாம்.
2. வெல்லம்
அதிகப்படியான வலியும் ரத்தப்போக்கும் இருக்கும்போது வெல்லம் சாப்பிடலாம். வெல்லத்தில் இருக்கும் சோடியம், பொட்டாசியம் இன்னும் இதர நுண் ஊட்டச்சத்துக்கள் மாதவிடாய் வலியைக் குறைக்க உதவும். வெல்லத்தில் வலி நிவாரணி தன்மையும் ஆன்டி இன்ஃபளமேட்டரி தன்மையும் உள்ளது.
3. ஆயில் மசாஜ்:
மாதவிடாய் வலிக்கு மசாஜ் தெரபி நல்லதொரு தீர்வாக இருக்கும். தெரபிஸ்ட் கொண்டு நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் அல்லது மெடிகேட்டர் ஆயில் கொண்டு அடிவயிற்றிலும், தொப்புளை சுற்றியும் மசாஜ் செய்யலாம். அரோமா தெரபி இன்னும் நல்ல பலன் தரும்.
4. ஹீட்டிங் பேட்:
ஹீட்டிங் பேட் எனப்படும் ஒத்தடம் நல்ல இதம் தரும். மருந்துக்கடைகளில் கிடைக்கும் ரப்பர் பேகுகளில் சூடான தண்ணீர் ஊற்றி அடிவயிற்றில் ஒத்தி எடுப்பதன் மூலம் சுகம் பெறலாம். பெயின் கில்லர் மாத்திரைகளைக் காட்டிலும் இந்த ஒத்தடம் நல்ல இதம் தருவதாக நிறைய பெண்கள் கூறியிருக்கின்றனர்.
5. மூச்சுப்பயிற்சி:
அழுத்தத்தைப் போக்கி நல்ல இதம் தரும்
மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம் மனதும் உடலும் குணம் பெறும். இதனால் பீரியட் வலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.