மேலும் அறிய

Intercourse and Stomach Pain | செக்ஸுக்குப் பிறகு வயிற்று வலி இருக்கா? - காரணம் இதுதான்!

பெரும்பாலும் உடலுறவுக்குப் பிறகு வயிற்றில் வாயு அதிகம் சேருவதாலும் சில நேரங்களில் ஆணுறுப்பு ஆழமாக ஊடுருவுவதாலும் (Deep penetration) இந்த வயிற்றுவலி ஏற்படுகின்றது.

உடலுறவுக்குப் பிறகு பெரும்பாலான பெண்களுக்கு மிக மெல்லியதாகவோ அல்லது மிகவும் அதிகமாகவோ வயிற்றுவலி ஏற்படும். சிலருக்கு முதல்முறை உடலுறவுக்குப் பிறகு வயிற்றுவலி இருக்கும். அதற்கடுத்ததாக செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது அந்த வயிற்றுவலி இருக்காது. சிலருக்கு அவ்வப்போது இந்த வயிற்றுவலி எட்டிப்பார்க்கும். பெரும்பாலும் உடலுறவுக்குப் பிறகு பெண்களில் மட்டுமே இந்த வயிற்றுவலி அதிகம் ஏற்பட்டாலும் சில சமயம் ஆண்களிலும் இந்த வயிற்றுவலிக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. பெரும்பாலும் உடலுறவுக்குப் பிறகு வயிற்றில் வாயு அதிகம் சேருவதாலும் சில நேரங்களில் ஆணுறுப்பு ஆழமாக ஊடுருவுவதாலும் (Deep penetration) இந்த வயிற்றுவலி ஏற்படுகின்றது. இவை இரண்டுமே உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது இல்லை என்றாலும் வயிற்றுவலி ஏற்படுவது நமது தினசரி பொழுதை பாதிக்கும். ஆணுறுப்பு ஊடுருவுவதால் ஏற்படும் இந்த வயிற்றுவலிக்கு டிஸ்பேரூனியா (Dyspaerunia) எனப் பெயர்.பெண்களில் சுமார் 10-20 சதவிகிதம் பேருக்கு இந்த வயிற்றுவலி ஏற்படுகின்றன ஆண்களில் 5 சதவிகிதம் பேரில் இந்த வயிற்றுவலி தென்படுகிறது. 

வயிற்றுவலி மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில் உங்கள் மருத்துவரின் பரிந்துரையின்படி செயல்பட்டாலே மீண்டும் மகிழ்வுடன் செக்ஸில் ஈடுபடலாம் என்கிறார்கள் பாலியல் மருத்துவர்கள். 

சில நேரங்களில் புறச்சூழலின் அழுத்தத்தால் கூட வயிற்றுவலி ஏற்படலாம். 
என்னென்ன காரணங்கள்? 

எமோஷனலாவது

உடலுறவு நமக்குள் பல உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்யும்.அதனால் ஏற்படும் மன எழுச்சியின் காரணமாகக் கூட வயிற்றுவலி உண்டாகும். உறவுச் சிக்கல், அன்றாட மன அழுத்தம், இவையெல்லாம் நமது வயிற்று மற்றும் இடுப்புப் பகுதி தசைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் இதனால் செக்ஸ் சமயத்தில் வலி உண்டாகும்.

ஆழமாக ஆணுறுப்பு ஊடுருவுவது 

உடலுறவுச் சமயத்தில் உண்டாகும் கிளர்ச்சியின் காரணமாக சில சமயம் வேகப்படும்போது ஆணுறுப்பு யோனியை ஆழமாக ஊடுருவ வாய்ப்புண்டு. இதனால் வயிற்று வலி ஏற்படும். இந்த வலி தற்காலிகமானது மேலும்.உங்களது உடலுறவுக்கான பொஸிஷனை மாற்றி முயற்சி செய்யும்போது இந்த வலி குறைய வாய்ப்புண்டு. 

உச்சநிலை 

உடலுறவு சமயத்தில் ஆர்காஸம் அடையும்போது உங்களது இடுப்பு தசைகள் சுருங்கும் இதன் காரணமாக சிலருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டு கீழ் வயிற்றில் வலி உண்டாகும். இதற்கு டிஸார்காஸ்மியா எனப் பெயர். கருவூற்றிருக்கும் பெண்கள், கருப்பையில் நீர்க்கட்டி இருக்கும் பெண்கள், பெல்விக் பகுதியில் நோய் இருப்பவர்கள் நாட்பட்ட இடுப்புவலி உள்ளவர்கள் ஆகியவர்களில் இந்த வயிற்றுவலி ஏற்படலாம். 

வாயு

உடலுறவின்போது பிறப்புறுப்புகள் ஊடுருவுவதன் காரணமாக பார்ட்னர்களில் இருவருக்குமே வயிற்றில் வாயு சேர வாய்ப்பு உண்டு. இதனால் வயிற்றின் மேல்பகுதி அல்லது மார்பகப் பகுதிகளில் மெல்லிய வலி உண்டாகும். வாயு வெளியேறினாலே இந்த வலி குறையத் தொடங்கிவிடும்,

சிறுநீர்க்குழாய் தொற்று

சிறுநீர்க்குழாய் தொற்று பெரும்பாலும் சிறுநீர்ப்பை உள்ளிட்ட சிறுநீர்குழாயின் கீழ்ப்பகுதிகளில்தான் ஏற்படும். சிறுநீரில் எரிச்சல், அதிகமாக சிறுநீர் கழிப்பது, சிறுநீரில் ரத்தப்போக்கு, சிறுநீர் ஆசணவாய் பகுதியில் ஏற்படும் வலி ஆகியன இதன் அறிகுறிகள், இதனால் கூட வயிற்றுவலி ஏற்படலாம்.

வயிற்றுவலி தொடர்ச்சியாக இருக்கும் நிலையிலும், பொறுக்கமுடியாத அளவுக்கு இருக்கும் நிலையில் மட்டும் மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது. நினைவிருக்கட்டும் அழகான உடலுறவுக்கு ஆரோக்கியமான உடல் பிரதானம். 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சிலர் விஷத்தை விதைக்கிறாங்க" நாடாளுமன்றத்தில் இறங்கி அடித்த மோடி!
"தமிழ்நாட்டுக்கு பெரியார்.. குஜராத்துக்கு காந்தி" நாடாளுமன்றத்தில் பாஜகவை அதிரவிட்ட ராகுல் காந்தி!
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?Aadhav Arjuna on DMK: ”என்ன அவங்க திட்ட சொன்னங்க”விசிகவை தூண்டிவிட்ட திமுக?ஆதவ் பகீர் குற்றச்சாட்டுVijay Trisha Relationship | கிசு கிசு..விஜய்யுடன் த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சிலர் விஷத்தை விதைக்கிறாங்க" நாடாளுமன்றத்தில் இறங்கி அடித்த மோடி!
"தமிழ்நாட்டுக்கு பெரியார்.. குஜராத்துக்கு காந்தி" நாடாளுமன்றத்தில் பாஜகவை அதிரவிட்ட ராகுல் காந்தி!
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
சபரிமலை செல்லும் பக்தர்கள் மலைவழிச்சாலையில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் - மாவட்ட நிர்வாகம்
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
"சிக்கன் சாப்பிடல" பிரச்னையை கிளப்பிய பாஜக.. பேக் அடித்த முதல்வர்!
TN Rain Alert: டிச.16-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் அறிவிப்பு!
TN Rain Alert: டிச.16-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் அறிவிப்பு!
இனி, பிணையில்லாம 2 லட்சம் வரை கடன் வாங்கலாம்.. விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆர்பிஐ!
இனி, பிணையில்லாம 2 லட்சம் வரை கடன் வாங்கலாம்.. விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்!
3000 ஆண்டு ஆவணம்.. 90'S கிட்ஸ் ஃபேவரட்.. மாவளி சுற்றுதல் வரலாறு தெரியுமா ? 
3000 ஆண்டு ஆவணம்.. 90'S கிட்ஸ் ஃபேவரட்.. மாவளி சுற்றுதல் வரலாறு தெரியுமா ? 
Embed widget