Raksha Bandhan 2022 Wishes: சகோதரத்துவத்தை போற்றும் ரக்ஷா பந்தன்! புகைப்படங்கள், வாழ்த்துகள் இங்கே....!
Raksha Bandhan 2022 Wishes in Tamil: நாம் அணுக முடியாத அளவுக்கு தூரமாகவோ, இன்று பார்க்க முடியாமலோ இருப்பவர்கள் என்ன செய்ய முடியும்… அவர்களுக்கு வாழ்த்து செய்தியை பகிருங்கள்.
ஆண் பெண் சமத்துவத்தை முன்னிறுத்தும் இந்த பண்டிகை, கொண்டாடப்படுவதற்கு பல கதைகள் சொல்லப்படுகின்றன. ஆனால் கதையெல்லாம் தாண்டி, இந்த விழா நமக்கு அறிவுறுத்தும் செய்தி அவசியமானது. நம் நாட்டில் கொண்டாடப்படும் அனைத்து விழாக்களும் அன்பை முன்னிறுத்தி கொண்டாடப்படுகின்றன.
ரக்ஷா பந்தன்
சகோதரத்துவம், சமத்துவம் பேசும் விழக்களையே நம் வரலாறு நமக்கு வழங்கி உள்ளது, அது எந்த மதமாக இருந்தாலும் சரி, ஆனால் அன்பையே விழாவாக கொண்டாடும் தினம் தான் ரக்ஷா பந்தன். ரக்ஷா பந்தன் என்பது ஒவ்வொரு ஆவணி மாதம் பெளர்ணமி தினத்தில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இந்தாண்டு ஒரு மாதம் முன்பே அதாவது ஆடி பெளர்ணமி தேதியிலேயே கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் ஆடி பெளர்ணமி என்பது 11 ஆகஸ்ட் 2022, அதாவது நாளைதான் வருகிறது. எனவே இன்று இந்த தினத்தில் நாம் தினம் பழகும் நண்பர்களுக்கு, சகோதர சகோதரிகளாக பார்ப்பவர்களுக்கு ராக்கி கட்டி மகிழலாம். ஆனால் நாம் அணுக முடியாத அளவுக்கு தூரமாகவோ, இன்று பார்க்க முடியாமலோ இருப்பவர்கள் என்ன செய்ய முடியும்… அவர்களுக்கு வாழ்த்து செய்தியை பகிருங்கள். அதற்க்கான க்ரியேட்டிவான வாழ்த்து அட்டைகள், வாழ்த்து வாசகங்கள் இதோ…
வாழ்த்து வாசகங்கள்
அன்புள்ள சகோதரிக்கு எனதினிய ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்!
சகோதரத்துவத்தை நிர்ணயிப்பது ரத்தம் மட்டும் அல்ல… அன்பும் தான்! இனிய ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்!
புரிதலுக்கு ஒரு முகமிருந்தால் அது நீதான்… இனிய ரக்ஷா பந்தன் நல் வாழ்த்துக்கள்!
ரத்தத்தால் மட்டும்தான் நீ எனக்கு சகோதரி ஆக வேண்டும் என்றில்லை… மனதால் கூட ஆகலாம்! ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்!
சிறுவயதில் நாம் இட்ட சண்டைகள் போல மறைந்து விட்டது, நம்மிடையே இருந்த நெருக்கமும்… வாழ்வில் ஏற்றம் மட்டுமே காண வாழ்த்துக்கள் சகோதரி… ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்!
எனக்கு தேவைப்படும் போதெல்லாம் ஊக்கம் தந்த என் அன்பு சகோதரிக்கு இனிய ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்!
எனதன்பு சகோதரியே, வாழ்க்கை நம்மை எங்கு கொண்டு சென்றுகொண்டிருக்கிறதோ தெரியவில்லை… ஆனால் எப்போதுமே என் மனது உனக்கென ஒரு சிறப்பான இடம் உண்டு! ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்!
சிரித்திருக்கிறோம், அழுதிருக்கிறோம், சண்டை இட்டிருக்கிறோம், விளையாடி இருக்கிறோம், திட்டு வாங்கி இருக்கிறோம்… நம் நினைவுகளே நம் நெருக்கத்தை சொல்லும் சாட்சி! இனிய ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்