Raisins : உலர் திராட்சை தினமும் சாப்பிடுவதால், இத்தனை பயன்களா? இந்த அபாயமும் குறையுமா?
திராட்சையில் இருக்கும் ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் வேதிப்பொருட்கள் மிகுந்த பலனளிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்
பொதுவாக திராட்சை பழம் என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள் . ஆனால் அதனை தொடர்ச்சியாக சாப்பிட வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதில் எந்த பழங்களிலும் இல்லாதவாறு அபரிவிதமான மருத்துவ குணங்கள் நிறைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
திராட்சையில் இருக்கும் ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் வேதிப்பொருட்கள் மிகுதியாகக் கொண்டுள்ளது. அதிலும் உலர் திராட்சை பழத்தில் அதிகளவான நோய் எதிர்ப்பு தன்மை இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
அதேபோல் உடலில் பலவிதமான நன்மைகளைச் செய்யும் ஒரு சிறந்த பழமாக இந்த திராட்சை இருப்பதாக சொல்லப்படுகிறது. செரிமான அமைப்பை சரிப்படுத்தி உடலின் ஆரோக்கியத்தை இது மேம்படுத்துகிறது. தினசரி சுமார் 30 முதல் 40 கிராம் அளவு இந்த உலர் திராட்சைகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நாம் அன்றாட உணவுகளில் இந்த உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பட்சத்தில், உடலில் பெருங்குடல் நலனுக்கும் உதவுவதாக கூறப்படுகிறது
பொதுவாக சிட்ரஸ் பழங்களில் லேசான புளிப்பு சுவை இருக்கும். திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, ஸ்ட்ராபெரி ஆகியவை வைட்டமின் சி சத்து நிறைந்த சிட்ரஸ் பழங்களாகும். இந்த சிற்றரஸ் பழங்களில் அதிகளவாக புற்றுநோயை எதிர்க்கும் பண்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
திராட்சை பழத்தின் விதை தோல் போன்றன பெருங்குடலில் ஏற்படும் புற்று நோயை தடுக்க மிகவும் உதவுகிறது என சொல்லப்படுகிறது. இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த உலர்ந்த திராட்சை பழங்கள் சிறந்த செரிமான பண்புகளை கொண்டுள்ளன. இவை மனிதனுக்கு நீண்ட கால ஆரோக்கியத்திற்கு அற்புதமான முறையில் செயலாற்றுகின்றது.
உலர் திராட்சை பழங்களில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக இருப்பதால் குடலின் செயல்பாடுகளை மேம்படுத்தி ,பாக்டீரியாக்களின் சமநிலையை ஒழுங்கு படுத்துகிறது.
அதேபோல் திராட்சை பழம் ஆனது உடலில் இரும்புச் சத்தை அதிகரித்து எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு சுமார் 40 கிராம் திராட்சைகளை சாப்பிட வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதாவது சுமார் 8 முதல் 10 திராட்சைகள் வரை சாப்பிட்டாலே போதுமானது என சொல்லப்படுகிறது .இருந்த போதும் அதிகப்படியான திராட்சைகளை நாம் உட்கொண்டோமானால் உடலில் செரிமான செயல்பாட்டில் மாறுபாடுகளை ஏற்படுத்தி, செரிமானத்தை அதிகளவில் தூண்டி விடுவதால் அடிக்கடி பசி ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.
ஆகவே திராட்சையை சரியான அளவில் உட்கொண்டால் உடல் ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
1.செரிமான அமைப்பிற்கு உதவும் திராட்சை:
திராட்சையில் அதிகளவான நார் சத்துக்கள் இருப்பதால், அது குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. அதேபோல் இயற்கையான மலமிளக்கியாக இந்த திராட்சை இருக்கிறது. உடலில் ஏற்படும் மலச்சிக்கலையும் சீரான செயல்பாட்டிற்கு கொண்டு வருகிறது. இது வாயு, வீக்கம், வயிற்று வலி, எரிச்சல் கொண்ட குடல் நோய், போன்ற பிற இரைப்பை குடல் பிரச்சனைகளை சரி செய்கிறது.
2.) எடையை கட்டுக்குள் வைத்திருக்கும்:
பொதுவாக எல்லோருமே தங்களது உடலை அழகுபடுத்த தான் விரும்புவார்கள். சரியான எடையை பேணி உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தால் நோய் நொடிகள் எதுவும் அண்டாது என்பது உண்மை. உடல் எடையை சீராக வைத்திருப்பதில் இந்த திராட்சைப்பழம் முக்கிய பங்கை வகைப்பதாக கூறப்படுகிறது. மிகவும் ஒல்லியாக இருப்பவர்கள் சரியான உடல் வடிவத்தை பெற எடையை சற்று அதிகரிக்கவே விரும்புவார்கள். ஆகவே இவ்வாறான செயற்பாட்டுக்கு திராட்சை பழம் மிகவும் உதவுகிறது என சொல்லப்படுகிறது.திராட்சைப்பழத்தில் பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் நிறைந்து இருப்பதால் அவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை அகற்றி எடை கூடாமலும், குறையாமலும் அழகாக வைத்துக் கொள்ள உதவும் என கூறப்படுகிறது.
3. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் திராட்சை:
திராட்சையானது உடல் உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் என கூறப்படுகிறது. உடலில் இரத்த அழுத்த அளவுகளில் நேர்மறையான மாற்றங்களை திராட்சை ஏற்படுத்துகிறது. திராட்சை பழத்தில் அதிகளவான பொட்டாசியம் இருப்பதால் இது ரத்த நாளங்களை தளர்த்தி ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
4. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:
திராட்சை பழத்தில் அதிகளவான விட்டமின்கள் மற்றும் தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் பாலிபினால்கள் போன்ற பிற ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றன .இந்த உலர் திராட்சைகள் உடல் இயக்கத்தை சீராக்குவது மட்டுமின்றி, உயிரணுக்களுக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் செயலாற்றுவதாக கூறப்படுகிறது. ஆகவே, திராட்சையை சரியான அளவில் உட்கொண்டால், உடலில் அபரிமிதமான நன்மைகளை செய்து, புற்றுநோயிலிருந்து நம்மை காக்கும் என்பது என ஆய்வுகள் கூறுகின்றன
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )