Bhogi 2023: தீயவை போக்கும் போகி..வரலாறும், போகி கொண்டாட்டத்துக்கான காரணமும் தெரியுமா?
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் நான்கு நாட்கள் பரவலாகக் கொண்டாடப்படும் மகர சங்கராந்தி பண்டிகையின் முதல் நாளாகவும் இந்த நாள் உள்ளது.
போகி ஆண்டுதோறும் ஜனவரியில் கொண்டாடப்படுகிறது. மார்கழியின் கடைசி நாளில் கொண்டாடப்படும் இது பொங்கல் திருநாளுக்கு முந்தைய தினம் அணுசரிக்கப்படுகிறது. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் நான்கு நாட்கள் பரவலாகக் கொண்டாடப்படும் மகர சங்கராந்தி பண்டிகையின் முதல் நாளாகவும் இந்த நாள் உள்ளது. இந்த ஆண்டு, போகி ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.அன்று தொடங்கி காணும் பொங்கல் திருநாள் வரை இது கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டங்கள் போகி திருவிழா, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் ஆகியவற்றுடன் தொடங்கி காணும் பொங்கலுடன் முடிவடையும். போகி நாளின் முக்கியத்துவம் மற்றும் அதன் வரலாறு பற்றி மேலும் அறிய, தொடர்ந்து படியுங்கள்.
மழையின் கடவுளான இந்திரனை போற்றும் வகையில் போகி பண்டிகை வெகு விமரிசையாக நாடெங்கிலும் கொண்டாடப்படுகிறது. வரும் காலங்களில் நல்ல விளைச்சலைப் பெற விவசாயிகள் இறைவனை வேண்டுகின்றனர். மக்கள் தங்கள் கலப்பை மற்றும் பிற விவசாய உபகரணங்களையும் அன்று வணங்குகிறார்கள். மக்கள் தங்கள் வீட்டில் உள்ள பழைய மற்றும் பயனற்ற வீட்டுப் பொருட்களை விறகு மற்றும் மாட்டு சாணம் பிண்ணாக்குகள் கொண்டு கொளுத்தப்பட்ட தீயில் வீசி எரிக்கிறார்கள். இந்த வழக்கம் 'போகி மந்தலு' என்று அழைக்கப்படுகிறது. இது பொதுவாக உங்கள் வாழ்க்கையிலிருந்து பழைய மற்றும் எதிர்மறையான விஷயங்களை அகற்றிவிட்டு புதிதாகத் தொடங்குவதைக் குறிக்கிறது. மக்கள் இந்த நாளில் புதிய ஆடைகளை அணிந்து அந்த நெருப்பைச் சுற்றி கோஷமிடுகிறார்கள்.
மக்கள் தங்கள் வீட்டை சாமந்தி மாலைகள் மற்றும் மாவிலைகளால் அலங்கரிக்கின்றனர். இது அவர்களின் வீட்டில் நேர்மறை ஆற்றலை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது. விவசாய கழிவுகளையும் மக்கள் தீயில் எரிக்கிறார்கள். மக்கள் சூரியக் கடவுள் மற்றும் பூமித்தாய்க்கு சந்தனம் மற்றும் குங்குமத்தை இட்டு காணிக்கை செலுத்துகிறார்கள்.
போகி சில தென்னிந்திய மாநிலங்களில் பெத்த பாண்டுகா என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அறுவடைத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகையை கொண்டாட, மக்கள் ஒருவருக்கொருவர் போகி சங்கராந்தி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் வீட்டின் முன் ரங்கோலி அல்லது கோலம் ஆகியவற்றை குடும்பமாக வரைவார்கள். மக்கள் தங்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை சுற்றத்தார், நட்பு மற்றும் குடும்பத்தினருடன் பரிமாறிக் கொள்கிறார்கள். விவசாயம் சிறப்பாக அமைய மக்கள் இந்திரனின் ஆசியை அந்நாளில் நாடுகின்றனர். இந்த நாள் மகர சங்கராந்தியுடன் இணைந்து அனுசரிக்கப்படுகிறது. இது வட இந்தியாவில் காத்தாடி திருவிழா என்று அழைக்கப்படுகிறது.