Pimples Reducing Tips: முகப்பரு, கரும்புள்ளி போன்ற சரும பிரச்னைகளால் அவதியா.. இதோ ஈஸி டிப்ஸ்!
சந்தையில் விற்கப்படும் பொருட்கள் தொடங்கி மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் வரை நாம் பின்பற்றுகிறோம். ஆனால் சரியான வாழ்க்கைப் பழக்கத்தைப் பின்பற்றாதது சருமப் பிரச்சினையை மோசமாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்முடைய உடல் நலத்தை பராமரிக்க சந்தையில் தலை முடி முதல் கால் நகம் வரை ஏராளமான பராமரிப்பு பொருட்கள் வந்து விட்டது. எனினும் சுய பராமரிப்பு, இயற்கை சார்ந்த பொருட்களைக் கொண்டு செயல்படுத்துவது போன்ற விஷயங்களை நாம் கையாள வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் முகப்பரு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் படுத்தும் மிகப்பெரிய சரும பிரச்னையாகும். முகப்பரு மற்றும் எண்ணெய் பசை சருமம் இன்றைய காலக்கட்டத்தில் பொதுவான பிரச்னையாக உருமாறி விட்டது.
திடீரென தோன்றும் முகப்பரு, எண்ணெய் பசை உணர்வு, நீண்ட கால வடுக்கள் போன்றவை இதன் அடிப்படை பிரச்னையாக தொகுக்கப்படுகிறது. இதற்காக சந்தையில் விற்கப்படும் பொருட்கள் தொடங்கி மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் வரை நாம் பின்பற்றுகிறோம். ஆனால் சரியான வாழ்க்கைப் பழக்கத்தைப் பின்பற்றாதது சருமப் பிரச்சினையை மோசமாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரும பராமரிப்பு சரியான முறையில் செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய பாதிப்பு உண்டாகும் என கூறப்படுகிறது. இதற்காக பெரிய அளவில் கஷ்டப்பட தேவையில்லை. எளிய வழக்கங்களை பின்பற்றினால் முகப்பரு மெதுவாக குறையும் என சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சருமம் தெளிவாகவும், புத்துணர்ச்சியுடனும், இயற்கையான பளபளப்புடனும் இருக்கும்.
என்ன செய்ய வேண்டும்?
முகம் கழுவுதல்: முகப்பருவைக் கட்டுப்படுத்த உங்கள் முகத்தை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகும். இதற்காக, இலேசான, மென்மையான, எண்ணெய் இல்லாத பேஷ் வாஸை பயன்படுத்தி உங்கள் முகத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை கழுவவும். இது அழுக்கு, வியர்வை மற்றும் அதிகப்படியான எண்ணெயை நீக்கும். இதைச் செய்வதன் மூலம், முகப்பரு மெதுவாகக் குறையத் தொடங்கும்.
டோனர்: முகத்தைக் கழுவிய பின் டோனரைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். டோனர் சருமத்தின் pH நிலையை சமப்படுத்துகிறது. இது துளைகளை சிறியதாக காட்ட உதவுகிறது. இது எண்ணெயைக் கட்டுப்படுத்துகிறது. நியாசினமைடு அல்லது ரோஸ் வாட்டர் டோனர்கள் முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்திற்கு சிறந்தவை என்று கூறப்படுகிறது.
மாய்ஸ்சரைசர்: முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்திற்கும் ஈரப்பதம் தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இலேசான, க்ரீஸ் இல்லாத மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது உங்கள் சருமத்தை அமைதியாக வைத்திருக்கும். இது முகப்பரு வருவதைத் தடுக்க உதவும். வழக்கமான மாய்ஸ்சரைசிங் உங்கள் சருமத்தை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கும்.
சீரம்: உங்கள் முகத்தில் முகப்பரு வடுக்கள் இருந்தால், ஒரு சீரம் மிகவும் உதவியாக இருக்கும். நியாசினமைடு, சாலிசிலிக் அமிலம் அல்லது தேயிலை மர எண்ணெய் கொண்ட சீரம் வடுக்களைக் குறைப்பதற்கும் முகப்பருவைக் கட்டுப்படுத்துவதற்கும் பயனுள்ளதாக இருக்கும். தினமும் அல்லது வாரத்திற்கு சில முறை சீரம் பயன்படுத்துவது நன்மை பயக்கும். மெதுவாக, சருமம் பிரகாசமாக மாறும். முகப்பருவும் குறையும்.
சன்ஸ்கிரீன்: சூரிய ஒளி முகப்பருவை மோசமாக்கும். அது கரும்புள்ளிகளை மேலும் கருமையாக்கும். பகலில் வெளியே செல்வதற்கு முன் எண்ணெய் இல்லாத, ஜெல் சார்ந்த சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு நாளும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது உங்கள் சருமத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கும். அது அவ்வளவு சருமத்தை சீக்கிரம் சேதப்படுத்தாது.
(எனினும் உடல்நல பாதிப்புகள் இருப்பவர்கள் சருமம் தொடர்பான பராமரிப்பு பொருட்களை எடுப்பதற்கு முன் மருத்துவர்களை ஆலோசித்து செயல்படுவது சிறந்தது)





















