Onam 2022: திருவோணப் பண்டிகை உருவானது எப்படி? புராணக் கதையும், முக்கியத்துவமும்..
மகாபலி சக்கரவர்த்தி ஓணம் திருவிழாவின்போது ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக செல்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள்.
திருவோணம் பண்டிகை முன்னிட்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதியே விழாக்கள் தொடங்கப்பட்டாலும், ஓணம் செப்டம்பர் 8 ஆம் தேதி அதன் மிகப்பெரிய கொண்டாட்டங்களைக் கொண்டிருக்கும். பாரம்பரியமான மலையாள நாட்காட்டியின்படி சிங்கம் மாதத்தில் திருவிழா வருகிறது.
ஓணம் உருவான புராணக்கதை
இந்து புராணங்களின்படி, பிரஹலாத முனிவருக்கு மகாபலி என்ற பேரன் இருந்தான். ஈரேழு 14 லோகங்களையும்,வென்ற பிறகு தேவர்களை வென்று மூன்று உலகங்களையும் கைப்பற்றினான்.ஒரு யாகம் செய்தார். இதனிடையே தேவர்கள் தாங்கள் இழந்த இந்திரலோகத்தை திரும்ப பெற மகாவிஷ்ணு சரணாகதி அடைந்தனர். மகாபலியின் பக்தியை சோதிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட விஷ்ணு, வாமனன் என்ற குள்ள சிறுவனின் அவதாரத்தில் மகாபலியை அணுகினார்.
மகாபலி சக்கரவர்த்தி வாமன வடிவத்தில் வந்தவர் மகாவிஷ்ணு என்பது அறியாமல் சிறுவன் என்று எண்ணிக் கொண்டு அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் அதற்கு மகாவிஷ்ணு தன் பாதத்தால் மூன்று அடி நிலம் போதுமானது என்று கூறினார் மகாபலி இதில் ஆச்சரியம் அடைந்தாலும் அவர் கேட்ட மூன்று அடி நிலத்தை தரவும் கொண்டார்
வாமனனாக வந்த விஷ்ணு பகவான் வளர்ந்து, நிலத்தையும் நீரையும் ஒரு காலால் மூடி, முதல் அடியை தானமாக பெற்றார்.மற்றொரு காலால் வானத்தையும் மூடி, இரண்டாவது அடியை தானமாக பெற்றார். இப்போது தன் மூன்றாவது அடியை வைக்க எங்கே இடம் என மகாபலி இடம் கேட்க மகாவலியும் மூன்றாவது அடிக்காக தன் தலையை காண்பிக்க, வாமனனாக வந்த விஷ்ணுவானவர், மகாபலியின் தலையில் தனது மூன்றாவது அடியை பதித்து, பாதாளத்தில் மிதித்து, அமிழ்த்தி விட்டார்.
ஆனாலும் மகாபலியின் பக்தியால் மகிழ்ந்த மகாவிஷ்ணு,மகாபலி ஒவ்வொரு ஆண்டும் அவனது நாட்டிற்கு செல்ல வரம் அளித்தார். இவ்வாறாக மகாபலியின் மறு வருகை குறிக்கும் ஆகச் சிறப்பான திருவிழாதான் ஓணம். மகாபலி சக்கரவர்த்தி ஆனவர் ஓணம் திருவிழாவின்போது ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக செல்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள்.அவருக்காகவே, இந்த சத்தியம் உணவானது படைக்கப்படுகிறது. ஓணம் திருவிழாவில் வீடுகளை அலங்கரித்து வண்ணமயமான பூக்களாலான கோலங்களை போட்டு மகாபலிக்கு 26க்கும் மேற்பட்ட சைவ உணவு வகைகளை படைக்கும் சத்தியம் மிக முக்கியமானதாகும்.
இப்படியாக கொண்டாடப்படும் இந்த ஓணம் நன்னாளில் இசை, பாடல்கள், நடனங்கள்,படகு சவாரி மற்றும் சுவையான ஓணசத்யா போன்றவற்றால் கேரளா முழுமைக்கும் உற்சாகமாக இருக்கும். இவ்வாறான சிறப்பான திருவோண பண்டிகையை முன்னிட்டு உறவினர்களும் நண்பர்களும் தங்களுக்குள் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக் கொள்வதோடு சத்யா உணவையும் பரிமாறிக் கொள்கிறார்கள் அவ்வாறான வாழ்த்துச் செய்திகள் சிலவற்றை பார்ப்போம். உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஓணம் வாழ்த்துக்கள்:
இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள்!! மகாபலி உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும்.
இந்த பண்டிகை நாளில், உங்களுக்கு அருமையான ஓணம் வாழ்த்துக்கள். உங்கள் வீடு மகிழ்ச்சி மற்றும் அமைதியால் நிரப்பப்படட்டும். இனிய ஓணம்! நல்வாழ்த்துக்கள். உங்கள் அனைவருக்கும் செழிப்பான, மகிழ்ச்சியான, வண்ணமயமான, பிரகாசமான, ஆரோக்கியமான, பணக்கார மற்றும் ஞானமான ஓணம் வாழ்த்துக்கள். ஓணம் என்பது மகாபலியின் வீடு திரும்பும் விழாவாகும். உங்கள் அன்பை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் மகாபலி அன்பையும் அருளையும் பெறுவீர்கள்.