November 2023 Festival: நவம்பர் மாதத்தில் எந்தெந்த நாட்களில் என்னென்ன விசேஷங்கள்! முழு அட்டவணை!
November 2023 Festival Calendar: கார்த்திகை என்னென்ன விசேஷங்கள் வருகிறது என்பதை கீழே விரிவாக காணலாம்.
தீபாவளி, கார்த்திகை, சூரசம்ஹாரம்னு நவம்பர் மாதத்தில் நிறைய சிறப்பு விழாக்கள் இருக்கு.. சோம வார விரதம் என்று முக்கியமான நாள்களை காணலாம்.
இந்த மாதத்தில் எந்தெந்த நாட்களில் என்னென்ன விசேஷங்கள் வருகிறது என்பதை கீழே விரிவாக காணலாம்.
நவம்பர்,1. சங்கடஹர சதுர்த்தி (புதன்)
நவம்பர்,5- அஷ்டமி (ஞாயிறு)
நவம்பர்,6 - நவமி (திங்கள்)
நவம்பர்,7-தசமி (செவ்வாய்)
நவம்பர்,9- ஏகாதசி (வியாழன்)
நவம்பர்,10 - பிரதோஷம் (வெள்ளி)
நவம்பர்,11 - சிவராத்திரி (சனி)
நவம்பர்,12 - அமாவாசை (ஞாயிறு) (இன்று பகல் 3.10 மணி முதல் நாளை பகல் 3.30 வரை)
நவம்பர்,14- சந்திர தரிசனம் (செவ்வாய்)
நவம்பர்,17- சதுர்த்தி விரதம் (வெள்ளி)
நவம்பர்,18- சஷ்டி விரதம் (சனி)
நவம்பர்,20- அஷ்டமி (திங்கள்)
நவம்பர்,21- நவமி (செவ்வாய்)
நவம்பர்,22- தசமி (புதன்)
நவம்பர், 23 - ஏகாதசி (வியாழன்)
நவம்பர்,24- பிரதோஷம் (வெள்ளி)
நவம்பர்,26- திருகார்த்திகை (ஞாயிறு)
நவம்பர்,30 - சங்கடஹர சதுர்த்தி (வியாழன்)
கார்மேகம், சோனை மழை பொழியும் மாதம் கார்த்திகை என்று சொல்லப்படுவது உண்டு. விஷ்ணு. பிரம்மா இருவருக்கும் ஜோதி பிழம்பாய் காட்சியளித்த மாதம் கார்த்திகை. கடும் தவம் இருந்து பார்வதி தேவி சிவபெருமானின் உடலில் இட பாகத்தைப் பெற்றதும் கார்த்திகை மாதத்தில்தான் என்று சொல்லப்படுகிறது. திருவண்ணாமலை மகா தீபம், கார்த்திகை பெளர்ணமி என விசேசங்கள் நிறைந்த மாதம்.
கார்த்திகையில் மழை, வெயில், பனி என மூன்றும் இருக்கும். கார்த்திகை சோமவார விரதம், ஞாயிறு விரதம், சஷ்டி, வளர்பிறை துவாதசி, ஏகாதசி என விரத வழிபாடுகள் நிறைந்தது.
சோமவாரம் - சங்காபிஷேகம்
கார்த்திகை மாதத்தில் வரும் ஒவ்வொரு திங்கள்கிழமையும் சிவாலங்களில் சிவனுக்கு சங்காபிஷேசம் பூஜை செய்யப்படுகிறது. சங்காபிஷேகம் செய்வதை தரிசிப்பது மகா புண்ணியம் என்றும் சகல தோஷங்களையும் போக்கும் என்றும் சந்தோஷங்களையும் நிம்மதியையும் தந்தருளும் முக்திப்பேறு கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
108 சங்கு, 1008 சங்கு என அபிஷேகம் என சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. 108 சங்கு கொண்டு அபிஷேகமோ 1008 சங்கு கொண்டு அபிஷேகமோ... பனிரெண்டு ராசிகுண்டங்களாகப் பிரித்து வைத்துக்கொள்ளவேண்டும் என்பது வழக்கம். பனிரெண்டு ராசி குண்டங்களில் ஒன்பது ஒன்பது சங்குகளாக , 108 கொண்டு வழிபாடு நடக்கும். வலம்புரிச் சங்கு சிவபெருமான். இடம்புரிச் சங்கு பார்வதிதேவி என்று சொல்லப்படுகிறது.
பரணி தீபம்
திருவண்ணாமலையில் அதிகாலை 4 மணிக்கு கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு அண்ணாமலையில் ஜோதி ஸ்வரூப மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதே நாளில் அர்த்தநாரீஸ்வரரும் காட்சியளிப்பார்.
கார்த்திகை பெளர்ணமி
விஷ்ணு, பிரம்மா இருவருக்கும் சிவன் ஜோதிப் பிழம்பாய் காட்சி அளித்த நாள், கார்த்திகை பெளர்ணமி. ஜோதிப் பிழம்பே மலையாக எழுந்தருளும் திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்டால் நன்மைகள் வந்து சேரும் என்று சொல்லப்படுகிறது.
துவாதசி
கார்த்திகை மாதத்தில் வரும் துவாதசி திதியில் அன்னதானம் செய்ய உகந்த நாள். அன்றைய தினம் அன்னதானம் செய்தால் கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னதானமிட்ட பலன் கிடைக்கும்.
திருவண்ணாமலை தேரோட்டம்
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலில் காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரோட்டம் நடைபெறுகிறது.
அமாவாசை
கார்த்திகை மாதம் வரும் அமாவாசை நாள் பித்ரு பூஜை செய்ய உகந்த நாள். முன்னோர்களின் ஆசி பெற தர்ப்பணம் செய்து வழிபட்டால் ஆசி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
சஷ்டி விரதம்
ஒவ்வோரு மாதமும் சஷ்டி விரதம் இருப்பது நல்லது. முருகப்பெருமானுக்கு உகந்த மாதமான கார்த்திகையில் வரும் சஷ்டி மிகவும் சிறப்பு வாய்ந்தது. கார்த்திகை சஷ்டியன்று அதிகாலை எழுந்து நீராடி விரதமிருந்து முருகனை வழிபட்டால் பரிபூரண அருள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.