மேலும் அறிய

முட்டாள், மடையருக்கு அர்த்தம் தெரியுமா..? இனி இந்த வார்த்தைகளை பயன்படுத்தமாட்டீங்க..!

நம் வாழ்நாளில் நாம் அன்றாட பேசும் வார்த்தைகளுக்கு முழுமையான அர்த்தங்கள் தெரியாமல் பேசுகின்றோம். அந்தவகையில் தமிழில் இன்று நாம் பார்க்கும் இரண்டு வார்த்தைகள் : மடையர், முட்டாள் 

தமிழ் மொழி இன்றளவு பல அறிஞர்களால் அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு பல அற்புதங்களை கொண்டது. அதன் இலக்கியமும், இலக்கணமும் எத்தனையோ நாடுகள் மொழிபெயர்த்து கொண்டு சென்றாலும், இன்று தமிழ் என்னும் மொழி அள்ள அள்ள அட்சய பாத்திரமாய் பல விந்தைகளை தொடர்ந்து கொட்டி தீர்த்து வருகிறது. 

தமிழ் தமிழ் என்று குரல் எழுப்பும் சிலருக்கு கூட அதன் அர்த்தம் புரியாமல்தான் பேசிக்கொண்டு வருகின்றனர். நம் வாழ்நாளில் நாம் அன்றாட பேசும் வார்த்தைகளுக்கு முழுமையான அர்த்தங்கள் தெரியாமல் பேசுகின்றோம். அந்தவகையில் தமிழில் இன்று நாம் பார்க்கும் இரண்டு வார்த்தைகள் : மடையர், முட்டாள் 

இந்த இரண்டு வார்த்தைகளும் பொதுவான அர்த்தம் என்று நாம் எண்ணிக்கொண்டு இருப்பது அறிவில்லாதவன், எதுவுமே தெரியாதவன் என்று. ஆனால், இந்த வார்த்தைகளுக்கு பின் ஒரு முழு அத்தியாயமே இருக்கிறது. 

மடையர் : 

மட்டர்கள் என்ற வார்த்தைகளில் இருந்தே மடையர் என்ற வார்த்தை உருவானது. மட்டர்கள் என்பவர்கள் அரச ஆட்சி காலத்தில் கிணறு மற்றும் அணை கட்ட வழிதடம் அமைப்பவர்கள். நாள் முழுக்க வெயிலில் நின்று வியர்வை வழிந்து ஓய்வெடுக்க வீட்டுக்கு செல்லும்போது அரசர் மாளிகையில் உத்தரவு ஒன்று வரும். அதில், தாங்கள் கட்டிய மடைகளின் வழியாக பொதுமக்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். எனவே, இரவோடு இரவாக இந்த பணியை உடனே செய்யவேண்டும் என்று அழைப்பு வரும். 

இந்த மடை திறக்கும் பணியில் பலரது உயிர் பலி போயிருந்தாலும், தன் குடும்பத்தின் வறுமை நிலையை எண்ணி அந்த மடையை திறக்க இந்த மட்டர்கள் களமிறங்குவர். அப்படி சென்று தங்கள் உயிரை கொடுத்து பொதுமக்களுக்கும், அரச ஆணைக்கும் சேவை செய்த மட்டர்களே நாளடைவில் மடையர்கள் என்று மாறினர். 

மடு என்றால் நீர்நிலை , ஆற்றிடைப்பள்ளம் என்று பொருள் , அந்த மடுவை (நீரின் போக்கை) தடுத்து நிறுத்தும் மதகு 'மடை' எனப்படும். அந்த நீர் மடையை திறப்பவனை 'மடையன்' என்றழைத்தனர்.மடையர் என்று குறுகிய வட்டத்திற்குள் அவர்களை சுருக்கி வெளியுலகம் அறியாதவாறு பணி அமர்த்தினர். அதன் காரணமாக அது பின்வரும் நாளில் வெளியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் வாழ்ந்த மடையர்களை குறிப்பிட்டு பொருளாக்கப்பட்டது. 

முட்டாள் : 

இந்தியா முழுவதும் தேர் இழுக்கும் உற்சவம் அந்தகாலம் முதல் இன்றைய காலம் வரை மிகவும் பிரசித்திபெற்ற ஒன்று. அனைவரும் ஒன்றிணைந்து தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். அரசர் முதல் அங்கு உலா வரும் ஆண்டி வரை கடவுளையும் அந்த தேரையும் மனம் உருகி தரிசிக்க ஒரே ஒரே நபர் மட்டுமே வேறு எதையும் கவனிக்காமல் தேரின் சக்கரத்தை கையில் ஒரு ஆப்புடன் கண்காணித்து கொண்டு இருப்பார். 

அவரது வேலையே தேர் நிற்கும்போது அந்த ஆப்பு கொண்டு தேருக்கு முட்டு கொடுப்பதும், தேர் திசை திரும்புபோது அதை முட்டுகொடுத்து திசை திருப்புவதும்தான் இவரது வேலையாக இருக்கும். அந்த ஒரே விஷயத்தில் அதிக படியான கவனத்தை வைத்து கொண்டு திறம்பட செய்யக்கூடிய இவர்களையே முட்டாள்கள் என்று அழைத்தோம். வேறு எந்த வேலையினைச் செய்வதற்கான திறனும் அறிவும் அற்றவர்கள் முட்டு ஆட்கள். என்பது அந்தக்காலத்தில் நிலவிய கருத்து. எனவே வேறு வேலை செய்வதற்கேற்ற அறிவில்லாதவர்களையும் முட்டாள் (முட்டு ஆள்) என்று அழைக்கத் தொடங்கினார்கள். நாளடைவில் அறிவில்லாதவர்களைக் குறிப்பதற்கு மட்டும் இந்தச் பயன்படுத்தப்படுகிறது.அதுவே, பின்வரும் காலத்தில் மாறி முட்டாளை அறிவில்லாதவர்களாக மாறியது. 

இப்படியாக முட்டாள் மற்றும் மடையர் என்ற வாரத்தைகள் அர்த்தம் புரியாமல் நாமும் பேசி அர்த்தமற்றவர்களாக மாறி வருகிறோம். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
"யப்பா" - 2 MATHS PERIOD: அமித்ஷாவின் ரியாக்ஷனை வைத்து மோடியை கலாய்த்த பிரியங்கா காந்தி
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Embed widget