Face Yoga | முகத்துக்கும் யோகாசனமா.. கண்டிப்பா வித்தியாசம் தெரியும்.. மலைகா அரோரா சொல்லும் சீக்ரெட்..
யோகாசனம் செய்தால் உடல் உள் உறுப்புகள் ஆரோக்கியம் பெறும், எடையைக் குறைக்கலாம் என்றெல்லாம் அறிந்திருக்கிறோம்.
யோகாசனம் செய்தால் உடல் உள் உறுப்புகள் ஆரோக்கியம் பெறும், எடையைக் குறைக்கலாம் என்றெல்லாம் அறிந்திருக்கிறோம். ஆனால், முகப்பொலிவை, வாடிய சருமத்தை மீட்டெடுக்க முடியும் என்கிறார் மலாய்கா அரோரா.
வில்லாக வளையும் தேகம் கொண்ட மலாய்கா தனது யோகக் கலைதான் கட்டுக்கோப்பான உடலுக்குக் காரணம் எனப் பலமுறை கூறியிருக்கிறார்.
பெண்கள் எப்போது சருமப் பொலிவில் கவனம் செலுத்துவதாலேயே உலகம் முழுவதும் அவர்களை நம்பி காஸ்மடிக் சந்தை களைகட்டி கல்லா கட்டுகிறது.
ஆனால், காஸ்மடிக் எல்லாம் இரண்டாம் பட்சம் தான் உள்ளிருந்து அழகை வெளிக்கொணரலாம் எனக் கூறுகிறார் மலாய்கா அரோரா. அதற்கு அவர் கூறும் மூன்று டிப்ஸ்.
அதற்குப் பெயர் ஃபேஷியல் எக்சர்சைஸ் எனக் கூறுகிறார்.
View this post on Instagram
பலூன் போஸ்:
உங்கள் வாய் நிறைய காற்றை அடைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இரண்டு விரல்களால் வாயை மூடுங்கள். விரல்கள் வாயின் குறுக்கே நேராக இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் முகத்தின் தசைகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
ஃபேஸ் டேப்பிங் போஸ்:
உங்களின் விரல்களால் முகத்தில் லேசாக தட்டிக் கொடுங்கள். நெற்றி தொடங்கி கழுத்துவரை இப்படிச் செய்யுங்கள். இவ்வாறாக செய்வது ரத்த ஓட்டத்தை முகம் முழுவதும் பரவச் செய்யும். இதனால் முகத்தில் உள்ள வயது சுருக்கங்கள் மறையும்.
ஃபிஷ் போஸ்:
ஒரு மீனின் முகம் எப்படி இருக்கும் எனத் தெரியுமல்லவா. அதே போல் உங்கள் கன்னங்களை உள்ளே இழுத்து உதடுகளை வெளியே தள்ளுங்கள். பின்னர் அதே போஸில் சிரிக்க முற்படுங்கள். அப்புறம் ரிலாக்ஸ் செய்துவிட்டு இதையே மீண்டும் ரிபீட் செய்யுங்கள். இந்த போஸ் கழுத்துப் பகுதியையும், தாடைப் பகுதியையும் வழுவாக்கும், பொலிவையும் கூட்டும்.
இவ்வாறு மலாய்கா அரோரா மூன்று டிப்ஸ்களைக் கூறியுள்ளார்.
இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இதுமட்டுமல்ல மலாய்கா அரோரா இன்ஸ்டா பக்கத்திற்குச் சென்றால் கண்ணுக்கு இதமாக நிறைய ஆசனங்களைப் பார்க்கலாம்.
நடிகர் சல்மான்கானின் தம்பி அர்பாஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிரபல பாலிவுட் நடிகையான மலாய்கா அரோரா. திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து கணவரை பிரிந்தார். அதன் பிறகு தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூரை காதலித்து வந்தார். அர்ஜுனை விட மலாய்கா பெரியவர் என்பதால் இந்த காதலில் போனி கபூருக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் அர்ஜுன் கபூருக்கும், மலாய்கா அரோராவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தனர். இந்த பிரேக்கப் கூட அம்பலமாகி 15 நாட்கள் தான் ஆகின்றன.