மேலும் அறிய
மதுரை கலைஞர் ஜல்லிக்கட்டு அரங்கில் உலக சுற்றுலா தினம்: வரவேற்கும் சமூக ஆர்வலர்கள்
அறியபடாத சுற்றுலாத்தலம் குறித்த ஒரு நிமிட வீடியோ போன்ற போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.

கலைஞர் ஜல்லிக்கட்டு அரங்கம்
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு மட்டும் இவ்வளவு கோடி செலவா? என கேள்விக்கு பதில் கிடைக்கும் விதமாக பல்வேறு விஷயங்களுக்கு பயன்படும் விதமாக நிகழ்ச்சி நடத்தப்படுவது வரவேற்பை பெற்றுள்ளது.
உலக சுற்றுலா தினம்
உலக சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 அன்று கொண்டாடப்படுகிறது. இது ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பால் (UNWTO) தொடங்கப்பட்டது. சுற்றுலாவை மேம்படுத்தவும் அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளவும் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலகத்தையும் அதன் சாராம்சங்களையும் சுற்றிப்பார்த்து அறிந்து கொள்வதில் உள்ள மகிழ்ச்சியை மக்களுக்குப் புரிய வைப்பதே இந்த நாளின் நோக்கம். இது ஒரு மிக முக்கியமான நிகழ்வு. சுற்றுலா செல்வது யாருக்கு பிடிக்காது!
சுற்றுலாவை ஊக்குவிக்கவே இந்த தினம்
உலகெங்கும் உள்ள பல இடங்களில் உள்ள பல வகையான கலாச்சாரங்களை, பண்பாடுகலாய், மொழிகளை, அங்குள்ள மக்களை அறிந்துகொள்வது அவ்வளவு ஸ்வாரஸ்யமான விஷயம். அதுமட்டுமின்றி அவர்களது கட்டுமானங்கள், அவர்களது உருவாக்குங்கள் மேல் நமக்கு அறிவூட்டுகின்றன. சுற்றி பார்ப்பதே நம் வாழ்வை முழுமை அடைய செய்யும் ஒன்றாகும். அப்படிப்பட்ட வாழ்வில் நாம் அதனை செய்கிறோமா என்றால் பலரும் இல்லை. பெரும்பாலானோர் அவர்களால் முடிந்த, அருகில் உள்ள இடங்களுக்காவது சென்று விடுகின்றனர். ஆனால் பலர் வேலை, வேலை என்று வேலையில் கவனம் செலுத்தி, வாழ்வதையும் பார்த்திருக்கிறோம். எனவே சுற்றுலா செல்லுங்கள், என்பதை ஊக்குவிக்கவே உலக சுற்றுலா தினம் என்று ஒரு நாள் கடைபிடிக்கப் படுகிறது. இந்நிலையில் மதுரை கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கில் உலக சுற்றுலா தினம் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கொண்டாடப்படவுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு மட்டும் இவ்வளவு கோடி செலவா? என கேள்விக்கு பதில் கிடைக்கும் விதமாக பல்வேறு விடங்களுக்கு பயன்படும் விதமாக நிகழ்ச்சி நடத்தப்படுவது வரவேற்பை பெற்றுள்ளது.
உலகத்தின் முதல் ஜல்லிக்கட்டு அரங்கில் சுற்றுலா விழா
மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் பகுதியிலுள்ள கீழக்கரை கிராமத்தில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு தற்போது தமிழ்நாடு சுற்றுலாத்துறை வசம் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் செப்டம்பர் 27 மற்றும் செப்டம்பர் 28 ஆகிய இருநாள்கள் உலக சுற்றுலா தினம் 2024 சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவியர்களிடையே மாணவ உலக சுற்றுலாத்தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் உலக சுற்றுலா தினத்தையொட்டி பள்ளி, கல்லூரி மாணவியர்களுக்கான வினாடி வினா போட்டி, மதுரை சுற்றுலாத்தலம் குறித்த புகைப்படம் மற்றும் மதுரை மாவட்டத்திலுள்ள அதிகம் அறியபடாத சுற்றுலாத்தலம் குறித்த ஒரு நிமிட வீடியோ போன்ற போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.
விழாவில் கலை நிகழ்ச்சிகள்
மேலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் பரதநாட்டியம், பல்சுவை கிராமிய கலை நிகழ்ச்சி மற்றும் இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. என மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலர்கள் வரவேற்பு
மதுரை அலங்காநல்ல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் தமிழக அரசு சார்பில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டியுள்ளது. இங்கே பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என அதிகாரிகள் வட்டத்தில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சுற்றுலாத்துறை சார்பாக, உலக சுற்றுலா தினம் ஜல்லிக்கட்டு மைதானத்தில் கொண்டாடப்படுவதை பலரும் வரவேற்றுள்ளனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - crime ; ‘யார் பெரிய ஆள்’.. இன்ஸ்டாவில் சவால் விட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி..!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மதுரையில் பயங்கரம்.. மனைவியுடன் சண்டை... 2 பெண் குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை முயற்சி
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
பொழுதுபோக்கு
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement