மேலும் அறிய

crime ; ‘யார் பெரிய ஆள்’.. இன்ஸ்டாவில் சவால் விட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி..!

யார் பெரிய ஆள் என Instagram ல் சவால் விட்டு ஸ்டேடஸ் வைத்ததற்காக இளைஞர் வெட்டிப்படுகொலை பரபரப்பு. ஒரு சிறுவன் உட்பட  8 பேர் கைது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாள்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல்.

தெருவிற்குள் யார் பெரிய ஆள் என்பதிலும் அடிக்கடி சண்டை நடைபெற்றுள்ளது.
 
மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகர் 1-ஆவது தெரு பகுதியை சேர்ந்த சூர்யா (23) என்ற இளைஞர் தனது பெற்றோர் நடத்திவரும் டீக்கடையை பார்த்து வருகிறார். இந்நிலையில் சூர்யாவின்  நண்பர்களான தேன்ராஜ் பாண்டியன், விஷ்ணுகுமார், சரவணப்பாண்டி, அமர்நாத், கார்த்திக்பிரியன், ஹரிஹரபாண்டி ஆகியோருக்கும். மற்றும் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த  பிரவின்ராஜா, ராஜேஷ், ராஜா, ஜலாலுதீன் என்ற காட்டுப்பூனை, தக்காளிகார்த்திக் மாப்பிள்ளை, கார்த்திக், லிங்கராஜா, மாதேஷ் ஆகியோருக்கும் கடந்த 2 ஆண்டுகளாக  தெருவிற்குள் யார் பெரிய ஆள் என்பதிலும் அடிக்கடி சண்டை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த 3 மாதமாக Instagram ல் யாரு பெரிய ஆள் மோதிப்பார்க்கலாம் எனறும் விரைவில் சந்திப்போம் எனவும் பல்வேறு பதிவுகளை பதிவிட்டும் ரீல்ஸ்சும் செய்துவந்துள்ளனர்.
 
சிகிச்சை பெற்று வந்த சூர்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 
இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி ஜீவாநகர் 1வது தெரு பகுதியில்  நின்றுகொண்டிருந்த பிரவின்ராஜா மற்றும் அவரது நண்பர்கள் Instagram ல எங்களுக்கு எதிராக STATUS போடுவயாடா என்று கூறி மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து கையில் வெட்டியுள்ளனர். பின்னர் சூர்யா தப்பியோட முயன்றபோது அவரை துரத்தி தலை கால் என மாறி மாறி வெட்டியுள்ளனர். இதனையடுத்து அங்குள்ள பொதுமக்கள் தடுத்தபோது வெட்டிவிட்டு இன்னைக்கு தப்பிச்சிட்ட என்னைக்கு இருந்தாலும் உன் சாவு எங்க கையில்தான் என்று கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இதனையடுத்து  சூர்யாவின் பெற்றோர் சூர்யாவை  மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். இதையடுத்து படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்றுவந்த சூர்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 
8 பேரை கைது செய்தனர்
 
இந்நிலையில் சூர்யாவை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்ததாக ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் செய்த கொலை வழக்குப்பதிவின் கீழ் பிரவின்ராஜா,  ஜலாலுதீன் (எ) காட்டுப்பூனை, லிங்கராஜா, மாதேஷ், சோமசுந்தரம், முகேஷ்குமார், சதிஸ்குமார் மற்றும் ஒரு சிறுவன் என 8 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து வாள்கள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.
 
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாக ஸ்டேட்டஸ் வைத்த விவகாரத்தில் இரு தரப்பு மோதலா
 
மதுரையில் யார் பெரிய ஆள் என்பதற்காக INSTAGRAM மூலமாக ஏற்பட்ட ரீல்ஸ் மற்றும் வார்த்தை மோதலில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் மோதலை தூண்டும் வகையில் மிரட்டல் விடுக்கும் வகையிலும் வீடியோ பதிவுகள் மட்டும் ஸ்டேட்டஸ் பதிவுகள் பதிவிடுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாக ஸ்டேட்டஸ் வைத்த விவகாரத்தில் இரு தரப்பு மோதலா அல்லது ஜாதிய ரீதியான ஏதேனும் இரு பிரிவுகளாக பதிவு செய்து மோதல் ஏற்பட்டதா என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் செல்போன்களை கைப்பற்றி காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
 
தலைப்பு செய்திகள்

ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Embed widget