(Source: ECI/ABP News/ABP Majha)
கலோரி குறைந்த உணவுகள் வேண்டுமா? இதோ அதற்கான ஆலோசனைகள்!
உடல் எடையை குறைப்பதோடு,உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும். உணவு கட்டுப்பாடு என்று ஊட்டச்சத்து குறைவான உணவை எடுத்து கொண்டால் இது ஆரோக்கியத்தை பாதிக்கும்.
உடல் எடை குறைப்பது பெரிய சவாலான விஷயம் . உணவு கட்டுப்பாடு, உடற் பயிற்சி ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் எடையை குறைப்பதோடு,உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும். உணவு கட்டுப்பாடு என்று ஊட்டச்சத்து குறைவான உணவை எடுத்து கொண்டால் இது ஆரோக்கியத்தை பாதிக்கும். உடல் எடை குறைப்பதற்கு கலோரிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. கலோரிகள் குறைவான மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு எடுத்து கொள்ள வேண்டும். கலோரியை குறைந்த உணவுகளை தேர்ந்தெடுப்பது, முக்கியம்.
கேரட் - மிகவும் குறைவான கலோரிகள் கொண்ட ஊட்டச்சத்து மிக்க உணவு கேரட் ஆகும். ஒரு கப் கேரட் எடுத்து கொண்டால், அதாவது 128 கிராம் கேரட் எடுத்தால் அதில் 58 கலோரிகள் மட்டும் இருக்கிறது. கேரட் அதிகம் சேர்த்து கொள்வது உடல் எடை குறைவதற்கு உதவியாக இருக்கும்.
ஆப்பிள் - மிகவும் இனிப்பான பெரும்பாலோனோர் விரும்பி சாப்பிடும் ஆப்பிள் உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 125கிராம் ஆப்பிள் பழத்தில் 57 கலோரிகள் மட்டுமே உள்ளது. உடல் எடை குறைபவர்கள் இதை முதல் தேர்வாக எடுத்து பழத்தை சாப்பிடலாம்.
பெர்ரி - பெர்ரி பழங்கள் சுவையுடைத்தாகவும்,குறைந்த கலோரிகளை கொண்டதாகவும் இருக்கிறது. இது கிட்டத்தட்ட ஜீரோ கலோரி கொண்ட உணவாகும்.அதாவது 100 கிராம் பழத்தில் வெறும் 43 கலோரிகள் மட்டுமே உள்ளது.
சமைத்த காய்கறி கிரேவி - அனைத்து காய்கள் மற்றும் குறைவான மசாலா சேர்த்து சமைத்த காய்கள் குறைவான கலோரிகள் கொண்டுள்ளது. 100 கிராம் அளவிற்கு காய்கள் எடுத்து கொள்வதால் அதில் வெறும் 100 கலோரிகள் மட்டுமே கொண்டுள்ளது.
முளைகட்டிய பாசிப்பயறுகள் - நார்சத்து மிக்க முளைகட்டிய பாசி பயறு எடை குறைப்பதற்கு ஏற்ற ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ஆகும். 100 கிராம் அளவிலான பாசிபயரில் 95 கலோரிகள் உள்ளது.
ஓட்ஸ் இட்லி - ஓட்ஸ் இட்லி குறைவான கலோரிகள் உள்ளது. ஆரோக்கியமான மற்றும் குறைவான கலோரிகள் கொண்ட இதை காலை அல்லது இரவு உணவாக எடுத்து கொள்ளலாம் . 2 ஓட்ஸ் இட்லியில், 52 கலோரிகள் உள்ளது.
ராகி தோசை - ராகி தோசை அதிக ஊட்டச்சத்துகள் மிக்கது. அதிக நார்சத்து மற்றும் கால்சியம் சத்து நிறைந்து இருக்கிறது. ஒரு ராகி தோசையில் 85 கலோரிகள் உள்ளது. எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு இது சிறந்த உணவாகும்.
இது போன்ற உணவுகளை அன்றாடம் உணவில் சேர்த்து கொண்டு உடல் எடை குறைக்கலாம். ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.