Liver Health: கல்லீரலை இன்னும் ஆரோக்கியமா வெச்சுக்கணுமா? இந்த பானங்களை குடிக்கலாம்..
Liver Health: கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவுகளை காணலாம்.
நமது உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் கல்லீரல் ஒன்றாகும். ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை நீக்குவது; உணவு செரிமானத்திற்கு பிறகு அது உறிஞ்சும் சத்துகளை உடல் முழுவதும் ரத்தத்தில் கலக்கும் பணி உள்ளிட்டவற்றை அயராது செய்து வருவதும் கல்லீரல் தான். உடலின் பிற உறுப்புகளை விட, அதிகளவிலான வேலைகளைச் செய்வதும் கல்லீரல் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
காஃபி:
உலக அளவில் பெரும்பாலானவர்கள் விரும்பி அருந்தப்படும் இன்று காஃபி. காலையில் எழுந்ததும் காஃபி இல்லாமல் நாள் தொடங்காது என்ற அளவுக்கு சிலர் இருக்கிறார்கள். அப்படியிருக்க காஃபி சரியான முறையில் எடுத்துகொண்டால் உடலுக்கு நல்லது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறைவான அளவு காஃபி குடிப்பது கல்லீரல் நோய்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க உதவும். இது கல்லீரலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும். குறிப்பாக பால் சேர்க்காத காஃபி குடிக்க வேண்டும். தினமும் ஒரு சிறிய அளவு கப் காஃபி குடிப்பது பரிந்துரைக்கப்படுகிறது.
க்ரீன் டீ:
க்ரீன் டீ ஆரோக்கியம் நிறைந்தது என்பது நாம் நன்றாக அறிந்ததே. Journal of Nutritional Biochemistry என்ற ஆய்வு இதழில் உடற்பயிற்சி உடன் க்ரீன் டீ குடிப்பது கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மஞ்சள் டீ:
தென் இந்திய சமையலில் மஞ்சள் இல்லாமல் சமையல் இருக்கவே முடியாது. இது கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். உணவு, இஞ்சி டீயில் மஞ்சள் சேர்க்கலாம். மஞ்சள் சூப்பர் ஃபுட் என்றழைக்கப்படுகிறது. இது உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றும். உடலில் சில நொதிகள் சீராக சுரப்பதற்கு உடவும். ரத்தம் உடலில் எல்லா பகுதிகளுக்கு செல்வதற்கும் உதவும்.
நெல்லிக்காய் ஜூஸ்:
நெல்லிக்காய் ஊட்டச்சத்துகள் நிறைந்தது. வைட்டமின் சி, உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகளுடன் ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிகம் உள்ளது. இது கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்.
காலையில், நெல்லிக்காய், சீரகம் சிறிதளவு, புதினா இலைகள், தேன் அல்லது வெல்லம் சேர்த்து ஜூஸ் செய்து அருந்தலாம்.
பீட்ரூட் ஜூஸ்:
பீட்ரூட் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் என்று சொல்லப்படுகிறது. போலவே, இதில் பெக்டின், பெட்டாலின்ஸ், பெட்டானைன், ஃபொலேட், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி, உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.பீட்ரூட் வேகவைத்து சாப்பிடலாம். ஜூஸ் செய்தும் அருந்தலாம்.
கேரட், ஆப்பிள், க்ரேப் ஃப்ரூட், புதினா இது நான்கையும் சுத்தப்படுத்திவிட்டு, நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிக்கட்ட வேண்டும். அவ்வளவுதான். தேவையான அளவு தேன் சேர்த்து அருந்தலாம். இது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
பொறுப்புத்துறப்பு: இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.