Kriti Sanon : தொழிலதிபர் ஆகிட்டாங்க நம்ம பரம சுந்தரி க்ரிதி சனோன்.. இந்த துறையில் கால் பதிக்கிறாங்களா?
கரண் சாஹ்னி, ராபின் பேல், அனுஷ்கா நந்தானி ஆகியோருடன் இணைந்து இந்த நிறுவனத்தைத் தொடங்கியிருக்கும் கீர்த்தி 'இந்த நாள் எனக்கு முக்கியமான நாள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் க்ரிதி சனோன் அண்மையில் தனது புதிய நிறுவனமான ’தி ட்ரைப்’ -ஐ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். ஹீரோபந்தி, ராப்தா, தில்வாலே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள கீர்த்தி கடைசியாக தனது மீமீ படத்துக்காகப் பெரிதும் பாராட்டப்பட்டார். தற்போது தி ட்ரைப் நிறுவனத்தைத் தொடங்கியுள்ள கீர்த்தி சனோன், ‘நான் என்னைச் சுற்றியுள்ளுவர்களின் திறனைக் கண்டறிந்து எப்போதுமே அவர்களை ஊக்குவிக்க முயற்சி செய்வேன். அந்த வகையில் இந்த ’தி ட்ரைப்’ நிறுவனம் உங்களை அறிந்துகொண்டு நீங்கள் ஃபிட்டாக இருக்க உதவும்” என்கிறார். மீமீ படத்துக்காக 15 கிலோ எடை கூடியதாகச் சொல்லும் கீர்த்தி அந்தப் படத்தை அடுத்துதான் ஃபிட்னஸை பெரிதும் ஃபாலோ செய்யத் தொடங்கியதாகக் கூறுகிறார்.
View this post on Instagram
View this post on Instagram
கரண் சாஹ்னி, ராபின் பேல், அனுஷ்கா நந்தானி ஆகியோருடன் இணைந்து இந்த நிறுவனத்தைத் தொடங்கியிருக்கும் கீர்த்தி 'இந்த நாள் எனக்கு முக்கியமான நாள். 8 வருடத்துக்கு முன்பு திரைத்துறையில் எனது பயணத்தைத் தொடங்கினேன். அந்த வரிசையில் இந்த முதலீடு எனது அடுத்த பரிணாமம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.