Food Tips: வெங்காயத்தை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் சேமித்து வைப்பது எப்படி? இதோ எளிதான வழி..!
வெங்காயம் வாங்கும் போது, உலர்ந்த நிலையில் இருப்பதையும் பெரிதாக இருப்பதையும் உறுதி செய்யவும்
பெரும்பாலான சமையலறைகளில் வெங்காயம் அதிகம் பயன்படுத்தப்படும் உணவாக உள்ளது, பல்வேறு உணவுகளுக்கு வெங்காயம் சுவை சேர்க்கிறது. ஒரு சுவையான குழம்பு, ஒரு காரசாரமான சட்னி அல்லது ஒரு புத்துணர்ச்சியூட்டும் சாலட் என எதைத் தயார் செய்தாலும், வெங்காயம் அதன் இன்றியமையாத பகுதியாகும். வெங்காயம் சரியாக சேமிக்கப்படாவிட்டால் விரைவில் கெட்டுவிடும். அவற்றின் புத்துணர்ச்சி மற்றும் தரத்தை நீண்ட காலத்திற்கு பராமரிக்க சரியாக சேமித்து வைப்பது அவசியம்.
1. சூரிய ஒளியில் படாமல் அவற்றை சேமித்து வைக்கவும்
வெங்காயத்தை சேமிப்பதன் முதல் விதி, அவற்றை 12 முதல் 17 டிகிரி தட்பவெப்பத்தில் சுத்தமான, இருண்ட மற்றும் உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும். வெங்காயத்தை நல்ல காற்றோட்டத்துடன் உலர்ந்த இடத்தில் சேமித்து வைப்பது அவற்றின் புத்துணர்ச்சியைத் தக்கவைத்து, அவற்றின் ஆயுளை அதிகரிக்க சிறந்த வழியாகும். வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை ஒருபோதும் ஒன்றாகச் சேமிக்க வேண்டாம், அது கெட்டுப்போவதை துரிதப்படுத்தும்.
2. பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த வேண்டாம்
வெங்காயம் கெட்டுப்போகாமல் இருக்க, காற்றோட்டம் அவசியம், எனவே அவற்றை ஒருபோதும் பிளாஸ்டிக் பையில் சேமிக்க வேண்டாம். அதற்குப் பதிலாக, அறை வெப்பநிலையில் திறந்த கூடையில், துளையிடப்பட்ட காகிதப் பையில் அல்லது காற்றோட்டம் உள்ள பாத்திரத்தில் வைக்கவும்.
3. வெங்காயத்தை ஃபிரிட்ஜில் வைப்பது அவசியமா?
இல்லை, குளிர் மற்றும் ஈரமான சூழல் அவை கெட்டுப்போக அல்லது பூஞ்சை தாக்கத்திற்கு வழிவகுக்கும். உலர்ந்த மற்றும் காற்றோட்டமான இடத்தில் வெங்காயத்தை சேமிப்பது நல்லது
4. பெரிய வெங்காயத்தை வாங்கவும்
வெங்காயம் வாங்கும் போது, உலர்ந்த நிலையில் இருப்பதையும் பெரிதாக இருப்பதையும் உறுதி செய்யவும். வெங்காயத்தின் வெளிப்புற அடுக்கில் புள்ளிகள் அல்லது ஈரப்பதம் இருக்கக்கூடாது, ஏனெனில் இது வெங்காயத்தை கெடுக்கும். அதன் ஃப்ரஷ் தன்மையை சரிபார்க்க வெங்காயத்தை மெதுவாக அழுத்திப் பார்த்து வாங்கலாம்.
5. உரிக்கப்பட்ட/வெட்டப்பட்ட வெங்காயத்தை எப்படி சேமிப்பது?
உரிக்கப்பட்ட அல்லது வெட்டப்பட்ட வெங்காயத்தை சேமிக்க, அவை மாசுபடுவதைத் தடுக்க குளிர்சாதன பெட்டியில் வைக்க பரிந்துரைக்கப்படுகிறது. பச்சை வெங்காயத்தை அல்லது பாதியாக நறுக்கிய வெங்காயத்தை காற்று புகாத பாத்திரத்தில் அல்லது குளிர்சாதன பெட்டியில் பிளாஸ்டிக் பையில் சேமிக்க வேண்டும். இது 10 நாட்களுக்கும் மேல் அவை கெடாமல் பார்த்துக்கொள்ளும்.
6. வெங்காயத்தை ஃப்ரீசரில் சேமிப்பது எப்படி?
வெங்காயத்தை தோல் உரித்து ஃப்ரீசரில் வைப்பது அவற்றை வெட்டும்போது கண் எரிச்சலைத் தவிர்க்கும்.
பச்சை வெங்காயத்தின்ஆயுளை அதிகரிக்க, அவற்றை ஃப்ரீஸ் வைக்கலாம். தோலுரித்த பிறகு, அவற்றை விரும்பியபடி நறுக்கி அல்லது துண்டுகளாக நறுக்கி, காற்றுப் புகாத பையில் சேமித்து வைக்கவும். இந்த முறையில் எட்டு மாதங்கள் வரை ஃப்ரீசரில் வைக்கலாம்