Kiss Day 2024: கிஸ் டேவுக்கு தயாராகீட்டீங்களா காதலர்களே; கொஞ்சம் இதையும் தெரிஞ்சிகிட்டு கொண்டாடுங்கள்!
Kiss Day 2024: காதலர் தின வாரத்தில் இன்று முத்த தினம் கொண்டாடப்படுகின்றது.
பிப்ரவரி மாதம் வந்து விட்டாலே உலகம் முழுவதும் வாழும் இளைஞர்கள் தொடங்கி முதியவர்கள் வரை பெரும்பான்மையானவர்கள் குஷி ஆகிவிடுவார்கள். அதற்கு காரணம் பிப்ரவரி 14ஆம் தேதியில் உலகம் முழுவதும் கொண்டாட்டப்படும் காதலர் தினம் தான். காதலர் தினம் பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாடப்பட்டாலும், அதற்கு முன்னால் வரக்கூடிய தினங்கள் சாக்லெட் டே, ஹஹ் டே, கிஸ் டே, பிரபோஸ் டே உள்ளிட்ட பல்வேறு நாள்கள் கொண்டாடப்படுகின்றது. இதில் காதலர் தினத்திற்கு முன்தினம் அதாவது பிப்ரவரி 13ஆம் தேதி கிஸ் டே கொண்டாடப்படுகின்றது. நாளை கொண்டாடப்படும் கிஸ் டே குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளாமல் அந்த தினத்தை கொண்டாடலாமா?
கிஸ் டே வரலாறு: காதலர் வாரத்தில் காதலர் தினத்திற்கு முன்னதாக உள்ள தினம் முத்த தினம் அதாவது கிஸ் டே. காதலர் வாரத்திலேயே மிகவும் முக்கியமான நாளாக இந்த கிஸ் டே உள்ளது. இந்த சிறப்பு நாளில் பலர் தங்கள் காதலி அல்லது காதலனை முத்தமிட ஆவலுடன் காத்திருப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13 ஆம் தேதி காதலர் வாரத்தில் முத்த தினம் கொண்டாடப்படுகிறது. காதலர்கள் தங்கள் அன்புக்குரிய காதலியையோ அல்லது காதலரையோ முத்தமிட்டு தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் இந்த காதலர் வாரத்தில் முத்த தினம் எப்படி வந்தது என்பது மிகவும் முக்கியமான கதை.
காதலர் வாரத்தில், காதலர்கள் வாரம் முழுவதும் ஒன்றாக நேரத்தை செலவிட திட்டமிடுவது வழக்கம். காதலர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ற வகையில் காதலர் வாரத்தை கொண்டாட திட்டமிடுவார்கள். கிஸ் டே என்பது காதலர்களுக்கு இடையிலான உறவை இன்னும் நெருக்கமாக்க காரணமாக உள்ளது.
முத்த தினம் என்பது காதலர்களுக்கு ஒரு காதல் வரபிரசாதம் என்றே கூறவேண்டும். இது உங்கள் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் ஆகச்சிறந்த வழியாக கருதப்படுகின்றது. ஆனால் இந்த முத்த தினம் 19 ஆம் நூற்றாண்டில் விக்டோரியன் காலத்தில் பிரபலமடைந்ததாக கூறப்படுகிறது. அந்த காலகட்டத்தில் பொது இடத்தில் முத்தமிடுவது பொருத்தமற்றதாக கருதப்பட்டாலும், அது மிகவும் ரகசியமாக மக்களால் கொண்டாடப்பட்டது.
முத்த தினம் இந்த நாள் உலகின் பல்வேறு நாடுகளில் பிரபலமான பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது. தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் தங்கள் அபிமானத்தையும் அன்பையும் வெளிப்படுத்த மனிதர்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள். காதலர்கள் காதல் நிகழ்வுகளில் முத்தங்களைப் பொழிந்தாலும், மற்றவர்கள் இந்த தினத்தை வீட்டில் கொண்டாடுகிறார்கள். ஒரு முத்தம் காதல், ரொமான்ஸ் மட்டும் இல்லாமல் ஆறுதல் மற்றும் மகிழ்ச்சி உட்பட பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது.
ஒரு எளிய முத்தம் இரண்டு நபர்களிடையே நெருக்கத்தை அதிகரிக்கிறது. அவர்களின் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. முத்தம் என்பது ஒரு எளிய, தனிப்பட்ட காதல் மொழி. முத்தம் என்பது ஒரு வார்த்தை கூட சொல்லாமல் மதிப்புமிக்க பல விஷயங்களை தங்களது காதலருக்கு சொல்கிறது. ரொமாண்டிக்கான முத்தங்களை வழங்குவது மட்டும் இல்லாமல், முத்த தினத்தை கொண்டாட வேறு வழிகள் உள்ளன. காதலர்களோ காதல் தம்பதிகளோ ஒன்றாக நேரத்தை செலவிடலாம். தனிப்பட்ட தருணங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளலாம். இந்த நாளை சாக்லேட், பூக்கள் அல்லது காதல் கடிதங்கள் கொடுத்து கொண்டாடலாம். ஏனென்றால் இந்தியாவில் இன்னும் வெளிப்படையாக முத்த தினத்தை கொண்டாடும் அளவிற்கு நாகரீமடைந்த அல்லது சமூக மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உடைய சமூகமாக அல்லது ஒரு நாடாக மாறவில்லை. அதனால்தான் காதலர்கள் முத்த தினத்தை கொஞ்சம் தனிப்பட்டதாக மாற்றலாம், அல்லது உங்கள் அன்புக்குரியவருடன் டேட்டிங் சென்று முத்த தினத்தை கொண்டாடலாம். உங்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல புதிய பயணத்தை முத்தத்துடன் தொடங்க வாழ்த்துகள்.