மேலும் அறிய

Vettai Thunaivan - 20 | ’கன்னி, சிப்பிப்பாறை’ வேட்டை நாய்களும், அதன் நிறங்களும்..!

கன்னி -யை எடுத்துக்கொண்டால் பிரதானமாக கருப்பு நிறமும், முகவாய் – தாடை, நெஞ்சின் மேற்புறத்தில் இருபுறமும் விரிந்து வரும் திட்டு, கால்முட்டு முதல் பாதம் வரை பிரிதொரு நிறமும் சேர்ந்து வரும்

                                                   வேட்டைத்துணைவன் -  20

கன்னி / சிப்பிப்பாறை நாய்கள் பகுதி  12  

இந்த நாய்களைப்பற்றி நீங்கள் ஏதோ ஒரு புள்ளியில் அறிய நேரிட்டு அதன் பேரில் எழுந்த ஆருவம் காரணமாக மேலாதிக்க தகவல்களுக்கு இணையத்தை நாடி அதையே துணை பிடித்துக்கொண்டு அப்படியே யூட்டியூப்களின் பக்கம் திரும்பினீர்கள் என்றால்.  “அய்யோ அழிகிறது நமது நாட்டு நாயினங்கள்” என்ற அடிவயிற்றுக் குமுறலைத் தான் அதிகம் பார்க்க நேரிடும். ஏன் தற்போது வரும் பத்திரிகை செய்திகள் கூட இப்படியான தலைப்புகளைக் கொண்டு தான் வெளிவருகிறது.

Vettai Thunaivan - 20 | ’கன்னி, சிப்பிப்பாறை’ வேட்டை நாய்களும், அதன் நிறங்களும்..!
புள்ள கருமுஞ்சி 3 மாதக் குட்டி

உண்மையில் இவை அழிவின் விளிம்பில் தான் இருக்கிறதா?  இல்லை அது வெறும் வார்த்தைகள் தானா?  ஒரு வேலை அது உண்மையாக இருந்தால் அந்த அழிவு எத்தகையது என்பதை நீங்கள் அறிய வேண்டும் அல்லவா? அதற்கு  முதல் கட்டமாக நம்மிடம் இருப்பது எது என்பதை நாம் தெரிந்திருக்க வேண்டும். போன கட்டுரையில் சில சொற்களைக் குறிப்பிட்டேன் நினைவிருக்கிறதா ? அது பற்றிய தெளிவு நமக்கு வேண்டும். காரணம் இங்கு அதுவே புழங்கு சொற்கள்.  அவற்றை முறையே தனித்தனியாகப் பார்ப்போம்.

அதற்கும் முன்னதாக ( வேறு வழியே கிடையாது ! வரிசை மாறவே முடியாது. மாறவும் கூடாது )  நிறங்களைப் பற்றி அறிவது அவசியம். குறைந்த பட்சம் என்னென்ன நிறபாடுகள் இப்போது வழக்கில் உண்டு. அவற்றுக்கு என்னென்ன பெயர்கள் நமது வழக்கில் உண்டு என்பதையெல்லாம் அறிந்துகொள்வோம். நல்ல அனுபவம் உள்ள வேட்டை நாய் வளர்ப்பவர்களே கூட “என்ன வேட்ட நாய் உங்ககிட்ட இருக்கு” என்ற கேள்விக்கு பதிலாக “ சாதி நாய் தான். ரெண்டு செவல ஒரு மயில” என நிறத்தைச் சொல்வதை நீங்கள் பார்க்கலாம். அவருக்கு அந்த பதில் சரிதான். துவக்க காலங்களில் இவை அந்நியமாக உள்ளே வந்தாலோ அல்லது பல குறுங்குழுக்கள் மூலம் பல பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டதாலோ இங்கு நிறங்களே முதல் பிரதானம்.

Vettai Thunaivan - 20 | ’கன்னி, சிப்பிப்பாறை’ வேட்டை நாய்களும், அதன் நிறங்களும்..!
சாம்ப புள்ள

கிட்டத்தட்ட இருப்பது நிறபாடுகளுக்கு மேல் வரும் இன்நிறங்களை ஒரு புரிதலுக்கு வேண்டி நாம் ரெண்டு பிரிவுகளாகக் கணக்கில் எடுத்துக்கொள்வோமெயானால்,  ஒன்று “பிள்ளை”  மற்றொன்று “கன்னி”. இவற்றில் அடைபடாத மற்றொன்று செம்மறை (பின்னர் விரிவாகப் பார்க்கலாம்). இவற்றில் “பிள்ளை” அல்லது “புள்ள” என்று அடையாளம் காட்டப்படும் நிறங்கள் கருப்பு இல்லாதவை என்றும். கன்னி என்று அடையாளம் காட்டப்படும் நிறங்கள் கருப்பு நிறத்தை பிரதானமாகக் கொண்டவை என்றும் முதல்கட்டமாக நாம் புரிந்துகொள்ளலாம்.

வளர்ப்பு பிராணிகளை அணில் பிள்ளை, கீரிப்பிள்ளை, கிளிப்பிள்ளை என்று செல்லமாக அழைக்கும் வழக்கம் நம்மிடத்தில் உண்டுதான் என்றாலும் அவை இப்போதைய செல்லபிள்ளையான நாய்களுக்கு பொருந்தாது. குறிப்பாக ஒரு இனத்துக்கு மட்டும் அது  வாய்த்திருக்கவும் வாய்ப்புகள் குறைவு.போக இது நிறத்தோடு வரும் துணைப்பெயர்.

Vettai Thunaivan - 20 | ’கன்னி, சிப்பிப்பாறை’ வேட்டை நாய்களும், அதன் நிறங்களும்..!
செங்கன்னி

இவை எல்லாம் மேய்ச்சல் சமூகங்களிடத்தில் இருந்துதான் வந்திருக்கக் கூடும். காரணம் இவற்றில் 95 விழுக்காடு நிறங்கள் மாடுகளுக்கும் உண்டு சில ஆடுகளுக்கும் உண்டு. சரி, இனி புள்ள என்ற துணைப்பெயரோடு வரும் நிறங்களைப் பார்ப்போம்.

சந்தனபுள்ள, கீரிப்புள்ள,  கருவுன புள்ள செவலப்புள்ள – அதுவே கருமை கூடி வந்தால் கரும்செவலை  - செவலப்புள்ளயே இன்னும் அடர்த்தியாக வந்தால் ரெத்தச் செவலை, அழுக்கு வெள்ளையாக வரும்  மயிலப் புள்ள, பால் வெள்ளையில் வரும்  வெள்ளப் புள்ள, சாம்பப் புள்ள, கருங்சாம்பப் புள்ள,  கரம்பப் புள்ள  இவை எல்லாம் புள்ளயில் அடங்கும். சிலர் செவல கன்னி, சாம்பக் கன்னி என்று சொல்வதுண்டு குழம்ப வேண்டாம். அவர்கள் சொல்வது இதையே !  இவற்றில் எதாவது ஒன்றுக்கு முகத்தில் கருப்பு நிறம் வரும். அதற்கு கருமூஞ்சி என்று பெயர். நிறத்தோடு அதையும் சேர்த்து சொல்வதும் வழக்கம். செவலையில் வந்தால் செவலக் கருமூஞ்சி,  அதுவே சந்தன புள்ளையில் வந்தால் பிள்ளக் கருமூஞ்சி என்பது போல!

Vettai Thunaivan - 20 | ’கன்னி, சிப்பிப்பாறை’ வேட்டை நாய்களும், அதன் நிறங்களும்..!
மயிலை ( அழுக்கு வெள்ளை ) நாய்களில் வரும் நெஞ்சு வெள்ளை

இது போக மேல சொன்ன நிறங்களில் சில சமையம் கூடுதலாக வெள்ளை விழும். அந்த வெள்ளை  நிறமானது நெஞ்சில் விழுந்தால் அது நெஞ்சு வெள்ளை. ( மேலே சொன்ன எல்லா நிறங்களிலும் அது வரும்)  அதே வெள்ளை  காலில் விழுந்தால் (அதாவது பாதத்திலோ – பாத விளிம்பிலோ கூட வரும்)  அது வெங்கால், அதே வெள்ளை வாலில் விழுந்தால் அது பூவால், பிடதியில் விழுந்தால் அதற்குப் பெயர் பாச்சக்கழுத்து அல்லது பிடதி வெள்ளை. நெற்றில் கோடாக விழுந்தால் அது நெத்திராமம்!

இந்த வழி நாய்களில் இந்த இடத்தில் வெள்ளை விழும் என்று சொல்லி எடுப்போர் பலரை நான் பார்த்திருக்கிறேன். கன்னி நாய்களிலும் அதோடு தொடர்புகொண்டுள்ள இன்னொரு துணை நிறமான பருக்கி நிறத்திலும் கூட இந்த வெள்ளை விழுதல் வரும்.  நினைவில் கொள்க! சமீப காலமாக இப்படி வெள்ளை வரும் நாய்களை விட ஒரே நிறத்தில் வரும் நாய்கள் தான் சிறந்தவை  என்ற தவறான கருத்து பரவத் துவங்கியுள்ளது. அதற்குக் காரணம் நிறம் பற்றிய அறிவுப்போதாமையன்றி வேறில்லை.

Vettai Thunaivan - 20 | ’கன்னி, சிப்பிப்பாறை’ வேட்டை நாய்களும், அதன் நிறங்களும்..!
பால் கன்னி

கன்னி என்று எடுத்துக்கொண்டால் பிரதானமாக கருப்பு நிறமும், முகவாய் – தாடை, நெஞ்சின் மேற்புறத்தில் இருபுறமும் விரிந்து வரும் திட்டு மற்றும் கால்முட்டு முதல் பாதம் வரை உள்ள இடங்களில் பிரிதொரு நிறமும் சேர்ந்து வரும்.  நினைவில் கொள்க ! அதில் முழுக்கறுப்பு கிடையாது. அந்தப் பிரிதொரு நிறத்தை வைத்துக்கொண்டு இவை எந்தக் கன்னி என்பதை நாம்  தீர்மானிக்கலாம்.

அதாவது கருப்பு + செம்மை நிறைந்த மஞ்சள் ( மேலே குறிப்பிட்ட இடங்களில்) வந்தால் அது செங்கன்னி. அந்த இடத்தில் வெள்ளை வாய்த்தால் அது பால் கன்னி. அதே இடத்தில் அழுக்கு வெள்ளை வாய்த்தால் அது புள்ளை கன்னி( இன்றைய தினங்களில் பால் கன்னி என்ற பெயரில் வரும் 90 சதவிகித நாய்கள் பிள்ளைகன்னிதான்)  அதிலே சொன்ன பிற நிறங்கள் சரியா சொன்ன இடங்களில் பதியாமல் மிகக் குறைவாக வந்தாலோ கலங்கலாக வந்தாலோ  அது கருங்கன்னி.கண்ணனுக்கு மேல ஒரு போட்டு போல அழுத்தமாக விழுந்தால் அது பொட்டுக் கன்னி.  கருங்கன்னியில் அது வராது.

Vettai Thunaivan - 20 | ’கன்னி, சிப்பிப்பாறை’ வேட்டை நாய்களும், அதன் நிறங்களும்..!
சந்தனபருக்கி 14. 5 வயது

இந்த இடத்தில் பிற நிறங்கள் என்று நான் சொல்வதையும் நெஞ்சு வெள்ளையோடு குழப்பிக் கொள்ளக் கூடாது. அது தனி ! செங்கன்னி, பால் கன்னி கூட ஒரே நிறம் என்ற கணக்கில் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.  வெங்கால், பூவால் மாதிரி அது போக விழும் வெள்ளை தான் இங்கு கணக்கு ! அதில் சேர்த்தி.

Vettai Thunaivan - 20 | ’கன்னி, சிப்பிப்பாறை’ வேட்டை நாய்களும், அதன் நிறங்களும்..!
கன்னியில் வரும் நெஞ்சு வெள்ளை

இதே கன்னி நிறத்துடன் நெருங்கிய தொடர்புடையது பருக்கி ! பருக்கி நிறமானது கன்னியைப் போன்றே தெரிந்தாலும் அதிலும் வித்தியாசப் படுத்த சிலவேறுபாடுகள் உண்டு. அதாவது கருப்பு பிரதான நிறம் என்ற போதிலும் அதில் வரும் பிற நிறங்கள்,  மேல குறிப்பிட்ட இடங்கள் தாண்டி வருவதில்லை.

Vettai Thunaivan - 20 | ’கன்னி, சிப்பிப்பாறை’ வேட்டை நாய்களும், அதன் நிறங்களும்..!
பிள்ளகன்னியில்_பூவால்

ஆனால் பருக்கி நிறத்தில் அப்படி அல்ல !  மேல கன்னியில் சொன்ன இடங்கள் தாண்டி பின்தலை மற்றும்  முகம் முழுவதிலும், நெஞ்சிலும் கூட பிற நிறங்கள் வரும். சரி இங்கு என்ன பிறநிறங்கள் வரும்? எந்த கன்னி என்பதை நான் பிற நிறங்களின் சேர்மானம் வைத்துக்கொண்டு சொல்வது போல பருக்கி நிறத்திலும் சொல்ல முடியுமா என்றால் ஆம் !

இவற்றிலும் பால் பருக்கி ( இந்த இடத்தில்  “பால்கன்னி”  போல வெள்ளை நிறம் வராது. சந்தன நிறம் தான் வரும். அதைதான் பால் பருக்கி என்பார்கள். அதே சந்தனம் நல்ல அழுத்தமாக வந்தால் அதனை  சந்தன பருக்கி என்பார்கள்) , அவற்றில் செம்மை நிறம் கூடி வருவதை செங்கப்பருக்கி அல்லது செம்பருக்கி  என்றும் அழுக்கு வெள்ளையில் வருவதை பூச்சி கன்னியும் என்றும் கூறுவர்.

Vettai Thunaivan - 20 | ’கன்னி, சிப்பிப்பாறை’ வேட்டை நாய்களும், அதன் நிறங்களும்..!
செம்பருக்கி அல்லது செங்கபருக்கி

மிக அரிதாக சில இடங்களில் காக்கிப்பருக்கி அல்லது தேன்பருக்கி நிறம் வரும். அந்த ஒரு நிறத்தில் மட்டும் கருப்பு நிறத்துக்கு பதிலாக தேன் நிறம் வரும்.இதுவும் பருக்கியில் அடக்கம்தான். அட இது டாபர்மேன் நிறம் அல்லவா என்று நினைக்க வேண்டாம் இதுவும் நம் நாய்களில் வரும் தான்.

Vettai Thunaivan - 20 | ’கன்னி, சிப்பிப்பாறை’ வேட்டை நாய்களும், அதன் நிறங்களும்..!
செங்கன்னியும் ( நிற்பது ) சந்தனப்புள்ளையும்

இவ்வளவு நிறங்களைப் பார்த்து விட்டோம். இவற்றில் எது சிறப்பு? அப்படி எதுவும் உண்டா? போக அது பற்றி பேசிய பின்பு இது எதிலும் அடைபடாத வேறு ஒரு நிறம் பற்றி பேசலாம் அல்லவா.. பார்க்கலாம் அடுத்த வாரம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”நான் GOVT ஸ்கூல் தான்” வம்பிழுத்த நிர்மலா! வச்சு செய்த கார்கேபிச்சை போட்டால் சிறையா? பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு! எச்சரிக்கும் கலெக்டர்Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
SBI Clerk Recruitment: மிஸ் பண்ணிடாதீங்க; எஸ்பிஐ வங்கி வேலை; 13,735 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
மிஸ் பண்ணிடாதீங்க; எஸ்பிஐ வங்கி வேலை; 13,735 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா! கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் தாக்கல்..
One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா! கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் தாக்கல்..
Embed widget